Thursday, October 14, 2010

“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை

ஆதாம்- ஏவாள் காலத்திலே தொடங்கிவிட்டது, காதல். இன்றைய இளைய தலைமுறையினரின் காதலை பெரியவர்கள் “இது காதலே இல்லையென்று” முகம் சுளித்து மறுக்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் “பெரியவர்கள் கால மாற்றத்தை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்” என்கிறது, இளம் பட்டாளம்.
உண்மையில் காதல் மாறி இருக்கிறதா? 3 தலைமுறையினரின் கருத்தை அறிய ஒரு ஏற்பாடு செய்தோம்.
60 வயதைக் கடந்த பெண், 45 வயதை நெருங்கிய தாய், 20 வயதை தொடும் இளம் பெண் 3 பேரும் ஆண்- பெண் நட்பு, உறவு பற்றி விவாதிக்கிறார்கள்…
60 வயது :- “எங்கள் பெற்றோர் என்னை ஆண்களும், பெண்களும் படிக்கும் கோ-எஜூகேசன் பள்ளிக்குத்தான் அனுப்பினார்கள். ஆனாலும் ஆண்களுடன் பேசக்கூடாது என்று தடுத்தார்கள். நாங்களும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் சென்று வந்தோம். ஆண்களை பார்த்து புன்னகை செய்வது, ஓரபார்வையை வீசுவது கூட கட்டுபடுத்தபட்டிருந்தது.”
45 வயது :- “நான் கல்லூரி செல்லும் போதுதான் கட்டுபாடுகள் விதிக்கபட் டிருந்தது. எனக்கு ஆண் நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் எந்தவித பார்ட்டியிலும் அவர்களுடன் கலந்து கொண்டதில்லை. விழாக்களில் கலந்து கொண்டால்கூட அவர்கள் தனி அறையிலும், நாங்கள் தனி அறை யிலும்தான் தங்கினோம். தோழிகளின் பிறந்த நாள் விழாவுக்குக்கூட என் அம்மா, உறவு பையனை என்னுடன் அனுப்பி விடுவார்”
20 வயது :- “இளைஞர்களுடன் வெளியில் சுற்றுவதற்கு அனுமதியில்லை தான். இயற்கை ஆண்களுடன் நட்பை உருவாக்கவும், அவர்களுடன் சுற்றுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குகிறது. `பாய் பிரண்டு’கள் வைத்திருக்க எனக்குத் தடையில்லை.”
60 வயது :- “எனக்கு திருமணம் நிச்சயிக்கபட்டதும், அவரோடு வெளியில் சென்றுவர ஆசைபட்டேன். ஆனால் எல்லாவற்றையும் திருமணத்திற்கு அப்புறம் வைத்துக்கொள்ளும்படி கூறிவிட்டார்கள். இதனால் நானும் அவரும் கவலை அடைந்தோம். ஒரு வழியாக அம்மாவை சமாதானம் செய்து அவரை பார்க்க அனுமதி வாங்கினேன். 9 மாதம் காதலித்தோம். ஒன்றாக சுற்றினோம், சினிமாவுக்கும் போனோம். ஆனால் ஒருபோதும் அவருடன் இரவில் தங்கியதில்லை.”
45 வயது :- “நான் என் திருமண நிச்சயத்திற்கு பிறகுதான் அவரோடு முதன் முதலாக கிளப்பிற்கு சென்றேன். அதற்கு முன்பு சூரியன் மறைந்த பிறகு வெளியே செல்ல அனுமதிக்கபட்டதில்லை. கல்லூரியில் என்னை பலர் காதலிப்பதாகச் சொன்னார்கள். நான் அதற்கெல்லாம் இடம் தரவில்லை.”
20 வயது :- “இன்றைய காலத்தில் பலதரபட்ட காதல், கல்யாண முறைகள் நிலவுகிறது. ஒவ்வொருவரும் விதவிதமான எண்ணங்களோடு சுற்றித் திரிகிறார்கள். நான் எனது ஆண் நபர்களுடன் வெளியில் செல்வதை என் அம்மா தடுப்பது இல்லை. தனியாகவோ, குழுவாகவோ எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் எங்கே போகிறோம், எப்போது திரும்பி வருவேன் என்பதை அம்மாவிடம் சொல்லி விடுவேன். இது பலவித சிக்கல்களில் இருந்து எனக்கு பாதுகாப்பளிக்கிறது.”
60 வயது :- “நான் எனது சகோதரனின் நண்பரைத்தான் திருமணம் செய்து கொண்டேன். நான் திருமணத்திற்கு முன்பு அவரை ஒரே ஒருமுறைதான் பார்த்திருந்தேன். அவருடன் பேசியது கிடையாது. அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரை விரும்பத் தொடங்கினேன். எனது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார்.”
45 வயது :- “நான் ஆண்களால் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் யாராலும் பாதிக்கபடவில்லை. எனது கணவரின் குடும்பத்தை சிறுவயதிலிருந்தே தெரியும். அவர்கள் என் பெற்றோரை போலவே ஒழுக்க நடவடிக்கையில் கண்டிப்பானவர்கள். எனது கணவர் என்னைவிட 7 வயது மூத்தவர். என் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்.”
20 வயது :- “நான் காதலித்து திருமணம் செய்வதையே விரும்புகிறேன். நிறைய பழகாமல் ஒருவரை பற்றி திருமணத்திற்கு முன்பு புரிந்து கொள்ள முடியாது என்பது என் எண்ணம்.”
60 வயது:- “திருமணத்திற்கு முன்பே ஒரு முறை திடீரென்று அவர் என்னைத் தொட்டுவிட்டார். நான் உணர்ச்சியால் சிலிர்த்து போனேன். திருமணம் நிச்சயமானதும் முத்தம் கொடுத்துக் கொண்டோம். திருமணத்திற்கு பிறகுதான் உறவு வைத்துக் கொண்டோம். அந்த முதல் உறவு மிகவும் இனிமையான அனுபவம். அவரை நான் மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன்.”
45 வயது:- “நான் அவர்களை போல் அல்ல. எனக்கு நிச்சயம் முடிந்ததும் முத்தமிடுவதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நெருக்கமாகத்தான் இருந்தோம். ஆனால் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு 18 வயது தான் ஆகி இருந்தது. அவரும், நானும் பயத்துடன்தான் இருந்தோம். தேனிலவில்தான் ஒன்றாய் கலந்தோம்.”
20 வயது:- “டி.வி.யை ஆன் செய்தால் எல்லா இடங்களிலும் செக்ஸ் ஊடுருவி இருப்பதை பார்க்க முடிகிறது. அதை எனது அம்மா, தாத்தா பாட்டி பார்க்கும் கண்ணோட்டத்தில் நான் பார்பதில்லை. திருமணத்திற்கு முந்தைய உறவு என்பது அவமானகரமானதல்ல. இதை பற்றி ஒருசிலர் வெளிபடையாக பேசிக்கொள்கிறார்கள். சிலர் நெருங்கியவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதுபற்றி வாய்திறப்பதே இல்லை.”
நன்றி-தினத்தந்தி

No comments:

Post a Comment