Thursday, October 14, 2010

சமையலறை சுத்தமாகத் திகழ…!

* காபி குடித்த கப் மற்றும் தம்ளர்களில் காபி கறை போகவில்லையா? துணிச்சோடா மாவு கலந்த தண்ணீரில் அவற்றை 3 மணி நேரம் ஊறவைத்து பின் தண்ணீர் ஊற்றிக் கழுவுங்கள். கறை நீங்கி கப் மற்றும் தம்ளர்கள் சுத்தமாக பளிச்சிடும்!
* சமையலறையில் கை தவறி முட்டையைக் கீழே போட்டு உடைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம். உடைந்து சிதறிக்கிடக்கும் முட்டைக்கருவின் மீது உப்புத்தூளைபோட்டு மூடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து ஒரு துண்டு பேப்பரால் அள்ளுங்கள். சமையலறை சுலபமாகச் சுத்தமாகும்!
* அலுமினிய கடாய் மற்றும் பிரஷர் குக்கர் பாத்திரங்களின் அடியில் படிந்துள்ள கறை நீங்க அவற்றின் உள்ளே சில ஆப்பிள் தோல்களை போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வையுங்கள். கொதித்த தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யுங்கள் கறை நீங்கி பாத்திரங்கள் பளிச்சிடும்!
* உங்கள் சமையல் மேடை மற்றும் சமையலறையின் தரையில் அழுக்கு அதிகமாக படிந்து விட்டதா? கவலை வேண்டாம். ஒரு பாத்திரத்தில் கால்பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 4 மேஜைக்கரடி புளிக்கரைசல் வினீகர் அல்லது எலுமிச்சைச்சாறு கலந்த கலவையை 10 நிமிடம் கொதிக்கவைத்து இறக்குங்கள். அக்கலவையினை அழுக்குபடிந்த சமையல் மேடை மற்றும் சமையலறையின் தரையின் மூலை முடுக்குகளில் ஊற்றி ஸ்டீல் உல் சோப் பேடினால் துடைக்கவும். பின்பு தண்ணீர் ஊற்றிக் கழுவினால் சமையலறை பளிச்!
* பாட்டிலில் வீசும் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்பாட்டிலில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மேஜை கரடி கடுகு அல்லது ஆப்பச்சோடா போட்டு நன்றாக குலுக்குங்கள். ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் கழுவுங்கள். பாட்டில் துர்நாற்றம் நீங்கி பளீரிடும்!

No comments:

Post a Comment