
நமது உடல் ஒரு நீராவி இயந்திரம் என்று கூறலாம். சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் கரி என்று வைத்துக்கொண்டால், அநதக் கரி எரிந்து உருவாகும் நீராவியே நமது உடலுக்குக் கிடைக்கும் சக்தி. நாம் உண்ணும் உணவு முழுமையாக எரிந்துவிட வேண்டும். அப்போதுதான் எந்த நோயும் ஏற்படாமல் நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். நிலக்கரி போதிய அளவு இல்லாவிட்டால் சக்தி முழுவதுமாகக் கிடைக்காமல் ரெயில் நின்றுவிடுவது போல உடல் இயக்கம் பாதிக்கப்படக் கூடும். அதே நேரம் வண்டியில் அதிகமான நிலக்கரி இருந்தாலும் ஒரு மந்தமான நிலை ஏற்படும். அதே போல உடல் உழைப்புக்குத் தேவையான அளவு சாப்பிடுவதே சரியானதாகும்.
No comments:
Post a Comment