Friday, October 15, 2010

அதிசயிக்க வைக்கும் கல் நாதஸ்வரம்

நவதிருப்பதிகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ளது ஆதிநாதர் ஆழ்வார் கோவில். இந்த கோவிலுக்குச் சென்றால் வித்தியாசமான நாதஸ்வரம் ஒன்றைப் பார்க்கலாம். இது சாதாரண நாதஸ்வரம் போன்றது கிடையாது. முழுக்க முழுக்க கல்லால் செய்யப் பட்டது.
முன்பு இதை வாசிக்கவும் செய்திருக்கிறார்கள். மேலும், மார்கழி உற்சவத்தின்போது இந்த நாதஸ்வரம் இசைக்கப்பட்டு, அந்த இசைக்கு ஏற்ப நடனக் கலைஞர்கள் நடனமும் ஆடியிருக்கிறார்கள். இப்போது அதன் பாதுகாப்பு கருதி ஒரு மரப்பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறார்கள்.
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னர் இதை வழங்கியதாக அக்கோவில் தலபுராணம் கூறுகிறது.
நேரு, ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் இந்த ஊருக்கு வந்த போது, இந்த கல் நாதஸ்வரம் பற்றி கேள்விப்பட்டு வியந்திருக்கிறார்கள். மேலும், அது இசைக்கப்படுவதையும் கேட்டு ரசித்து இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment