

கின்னஸ் சாதனை புத்தகத் தில் இடம் பெற்றுள்ளது ஒரு பன்றி. என்ன சாதனை செய்தது இந்த பன்றி? உலகில் மிக அதிக வயது வாழும் சாதனையை தான் அது படைத்துள்ளது.
அமெரிக்காவில் டலாஸ் நகரில் உள்ள ஸ்டாசி கெம்பல் என்ற பெண், இந்த பன்றியை வளர்த்து வருகிறார். பன்றிக்கு வயது 20. இதன் பெயர் ஆஸ்கர்; இன்னமும் நல்ல திடமாக இருக்கிறது.
கின்னஸ் சாதனை படைத்த இந்த ஆஸ்கர் பன்றிக்கு நெக்லஸ் அணி வித்துள்ளார் இந்த பெண். வீட்டில் செல்லமாக வளரும் வகையை சேர்ந்த இந்த பன்றி, தன் எஜமானருக்கு எல்லா வேலையிலும் ஒத்துழைக்கிறது.
நம்மூரில் உள்ள பன்றிகளுடன் இதை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஆஸ்கர் பன்றி, முழுக்க முழுக்க வீட்டில் வளர்ந்து வருவது. அதற்காக, தனி அறையை கெம்பல் அமைத்துள்ளார். தனி படுக்கை, தனி, ‘டிவி’ என்று ஜமாய்க்கிறது ஆஸ்கர். சாப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம்; மட்டன், சிக்கன் என்று தனி மெனுவே உண்டு.
கெம்பல் போலவே, அவரின் காதலர் மெகினுக்கும் பன்றி மோகம் அதிகம். அவரிடம் ஒரு பூனை, இரண்டு பன்றிகள் உள்ளன. இதில் ஆண் பன்றி பெயர் ஷபில்.
மெகினுடன் கெம்பல் தாலிகட்டா மனை வியாகத்தான் வாழ்ந்து வருகிறார். அது போலவே, கெம்பலின் ஆஸ்கர் பன்றியும், மெகினின் ஷபிலும் அன்பாக பழகி வருகின்றன. இந்த பன்றிகளை பற்றி கெம்பல் கூறு கையில், ‘எங்களுக்கே வியப்பாக இருக்கும்; இரு பன்றிகளும் ஒன்றோடு ஒன்று பாசமாக பழகும்; ஆனால், இரண்டும் ஒன்று சேர்ந்ததே கிடையாது; நண்பர்களாகவே இருந்து வந்துள்ளது வியப்பாக இருக்கிறது…’ என்றார்.
பத்தாண்டாக இரு பன்றிகளும் பழகி வந்த நிலையில், கெம்பல் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித் ததால், ஷபிலுடன் பழகும் வாய்ப்பு ஆஸ்கருக்கு குறைந்துவிட்டது. எனினும், வெளியில் சுற்றிய நேரம் போக, அது, தன் அறையில் முடங்கி விடும். இதற்கு வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பாடு போட வேண்டும்; ஓய்வு எடுக்கும் போது, ‘டிவி’ போட்டு விட வேண்டும். சில சமயம், ரிமோட்டை வைத்து பட்டன்களை தட்டியபடியே இருக்கும். இப்போது ஓரளவு சேனல்களை மாற்ற கற்றுக் கொண்டுள்ளது என்று பெருமிதத்துடன் கூறுகிறார் கெம்பல். அதை நீங்கள் பார்த்தால் வியப்பீர்கள். நான் கூலிங் கிளாஸ், ஷூ, ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கிளம்பினால், தனக்கும் அப்படியே போட வேண்டும் என்று முரண்டு பிடிக்கும். என்னுடன் வெளியில், பார்ட்டிக்கு போகும் போதும் வரும். சமீபத்தில் அதற்கு நெக்லஸ் செய்து போட்டுள்ளேன் என்றும் கூறினார்.
ஆஸ்கருக்கு சமீப காலமாக, மூட்டு வலி வருகிறது. டாக்டரிடம் காட்டியதற்கு, மஞ்சள் தேய்த்து விடச் சொல்லியுள்ளார். மட்டன், சிக்கனை குறைத்து, காய்கறி, பழங்களை சாப்பிட வைக்க கூறியுள்ளார். இப்போது இதன் எடை 70 கிலோ. ஆலிவ் ஆயிலில் சமைத்த மட்டன், காய்கறிகளை தான் சாப்பிடுகிறது. சமீபத்தில் கின்னஸ் சாதனை புத்தக நிபுணர்கள் வந்து சோதித்து விட்டு, உலகில் மிக அதிக நாள் வாழும் பன்றி என்று அங்கீகரித்துள்ளனர்.
***
அமெரிக்கா, ஐரோப்பா என்றில்லை, உலகில் மொத்தம் 200 கோடி பன்றிகள் உள்ளன.
* சில நாடுகளில், நாய், பூனை போல, வீட்டுச் செல்லப் பிராணியாக பன்றியை வளர்க்கின்றனர்.
* சிறிய கண்கள், சிறிய வால் கொண்ட பன்றி, முரட்டுத்தோல் மற்றும் முரட்டுத்தனமான கேசத்தை கொண்டது.
* ஆண் பன்றிக்கு, வயது எட்டு மாதம் ஆனதுமே பாலின உணர்ச்சி வந்து விடும்.
* ஒரே நேரத்தில், ஆறு முதல் 12 வரை குட்டிகளை பிரசவிக்கும் பெண் பன்றி.
* காட்டு பன்றிகளை விட, வீட்டுப் பன்றிகளின் வாழ்நாள் அதிகம்.
No comments:
Post a Comment