Thursday, October 14, 2010

காதையும் கவனியுங்க..

பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர, காதுகளைக் கண்டுகொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் முக அழகைக் கெடுத்து விடும். காது மடலில் அழுக்குப் படிந்து அசிங்கமாகக் காட்சியளிக்கும். காதழகை எப்படிப் பராமரிப்பது என்று கேட்கிறீர்களா? `பேபி லோஷனை’ காது மடல்கள் மீது தடவுங்கள். பின்னர் 15 நமிடம் கழித்து, சுத்தமான துணியால் அழுத்தமாகத் துடையுங்கள். தொடர்ந்து இப்படிச் செய்து வந்தால் காதை சுத்தமாகப் பராமரிக்க முடியும் என்பதோடு, காதில் கறுப்பு வளையம் இருந்தால் அது மறைந்துவிடும். பெண்கள், முகத்தில் பூசும் `பேஸ் பேக்’குகளை காதிலும் பூசலாம். அப்படிச் செய்வதன் மூலம், காது மட்டும் தனித்து கறுப்பாகத் தெரிவதைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment