குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் கொள்ளைப் பிரியம் இருக்கும். அவர்கள் சுகாதாரமற்ற இடங்களில் விளையாடும்போது அவர்களுக்கு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. சொறி, சிரங்குஆகியவையும் அந்த நோய்களின் பட்டியலில் அடங்கும்.சின்ன வயதில் ஒரு குழந்தைக்கு சொறி, சிரங்கு வந்திருந்தால், பின்னாளில் அந்த குழந்தை பெரியவன் ஆனதும் ஆஸ்துமா வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கண்டறிந்து இருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
குழந்தை பருவத்தில் சொறி, சிரங்கு வந்தால் உடல் தோலின் திடத்தன்மை குறைந்து விடுகிறது. மேலும், அவர்கள் வளரும் சுற்றுச்சூழல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியும் கூடவே குறைந்து போகிறது. இதனால்தான் சொறி, சிரங்கு பாதிப்புக்கு ஆளான குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகள்தான் இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்களாம்.
No comments:
Post a Comment