Friday, October 15, 2010

உடல்நலம் – சிலதுணுக்குகள்

பப்பாளியும்… பளபளப்பும்…

கோடை காலம் தொடங்கி விட்டதால் இனி சருமத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். குறிப்பாக தோலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு சோரியாசிஸ், செதில் உதிர்தல் போன்ற சிக்கல்களும் அதிகமாகும். இவர்களுக்கு பப்பாளிப் பழம் மிகவும் நல்லது.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.

ரத்ததானம் செய்யும் போது…

18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே ரத்ததானம் செய்ய வேண்டும். நம்முடைய உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின் போது 300 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்ததானம் செய்பவர்களின் உடல் எடை குறைந்த பட்சம் 45 கிலோ இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும் இயல்பாக இருக்க வேண்டும். ஒருவர் முன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய இருபது நிமிடங்கள் போதும். ரத்ததானம் செய்த பின்னரும், நாம் வழக்கமான பணிகளை செய்யலாம்.

உடல் எலும்பு பலம் பெற…

உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச் சத்து அவசியம். அதோடு வைட்டமின் `டி’யும் தேவை.
இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய உள்ளன. அதேபோல் தினமும் முளைவிட்ட கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு பலம் பெறும். மேலும் சூரியக் குளியல் செய்வதாலும் எலும்புக்கு நல்லது.
வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக் கொள்ளலாம். முட்டைக் கோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு பழம், பாதாம்பருப்பு ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு பலம் பெறும்.

No comments:

Post a Comment