இதுவரை குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்ற காரணத்திற்காக தவிர்த்து வந்த பழங்கள், இளநீர் போன்றவற்றை கோடைக்காலத்தில் தைரியமாகக் கொடுக்கலாம்.பழங்களில், திராட்சை, தர்பூசணி, ஆரஞ்சு, கமலாப் பழங்கள் தற்போது அதிக அளவில் கிடைக்கின்றன. இவற்றை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
வெள்ளரிக்காயை அவர்கள் விரும்பும் சுவையில் கொடுங்கள். இனிப்பு சுவை பிடித்த குழந்தைகளுக்கு தேன் ஊற்றியும், காரச் சுவை பிடித்தவர்களுக்கு உப்பும், மிளகு தூளும் தூவிக் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.
பழச்சாறுகளைக் கொடுப்பதற்கு பதிலாக பழங்களாக உண்பதற்கு பழக்கப்படுத்துங்கள். இதனால் நார்ச் சத்தும் கிடைக்கும். தேவையற்ற சர்க்கரைச் சேராமல் தடுக்கலாம்.
No comments:
Post a Comment