Friday, October 15, 2010

ரோஜா மலர்

கூர்நுனிப் பற்களுள்ள சிறகமைப்புக் கூட்டிலைகளையும் இளஞ்சிவப்பு நிற நறுமண மலர்களையும் கொண்ட கூரிய வளைந்த முள்நிறைந்த நேராக வளரும் குறுஞ்செடி. தமிழகமெங்கும் பயிரிடப் பெறுகிறது. இதைச் சிறு தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. மலர்களே மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது.
1. பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்ப்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்ந்து ஆறும்.
2. 20௦ கிராம் முதல் 10 கிராம் வரை பூவைக் குடிநீராக்கி வடிகட்டி, பால் சர்க்கரை கூட்டி உண்ண வாத பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
3. பூவுடன் 2 எடை சீனா கற்கண்டு கலந்து பிசைந்து சிறிது தேன் கலந்து 5,6 நாள்கள் வெயிலில் வைக்கக் குல்கந்து ஆகும். காலை மாலை 10 கிராம் சாப்பிட்டு வர மலச்சிக்கல், உதிரப் பேதி, பித்த நோய் வெள்ளை தீரும். நீடித்துச் சாப்பிட இதயம், கல்லீரல், நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம், குடல், ஆசனவாய் முதலியவை பலமாகும்.

No comments:

Post a Comment