Thursday, December 9, 2010

ஆரத்தி எடுப்பதன் பின்னுள்ள இரகசியம் என்ன?


விஞ்ஞானமும் நவீன வாதமும், முற்போக்கு வாதமும் எல்லாம் நம் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்திர்யிருந்த போதிலும் சில நம்பிக்கைகள் இன்றும் தவிர்க்க முடியாதவையாக நீடித்து நிற்கின்றன.இதில் ஒன்று தான் ஆரத்தி எடுப்பது. தூரத்துப் பயணங்கள் கழிந்து வரும் குடும்பத்தினர்,திருமணம் முடிந்து மணமகன் வீட்டுக்கு வரும் தம்பதிகள், மகப்பேறு முடிந்திருக்கும் தாய் முதலியோரைப் பொதுவாக ஆரத்தி எடுப்பதுண்டு. தண்ணீரில் மஞ்சள் அரைத்துச் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகின்றது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்கள் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்குச் சுற்றும் மூன்று முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்பிக்கு கிருமிகளை அழிக்கும் திறன உண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

மணமகளை விளக்கு வழங்கி வரவேற்க வேண்டுமா?


சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்கையிலும் திருமணம் முடிந்து வரும் மணமகளை வீட்டில் பிரவேசிப்பதற்கு முன் ஏற்றிய குத்துவிளக்கைக் கொடுத்து வர வேற்பது வழக்கம். இன்றும் இந்த சடங்கை அனேக வீடுகளில் நிகழ்ந்து வருகின்றது. திருமணம் முடிந்து வந்து சேரும் மணமகளை,மணமகனின் தாய் அல்லது சகோதரி குத்துவிளக்கை வழங்கி அழைத்துக் கொண்டு வருவதுண்டு. இது நம்பிக்கைகளின் பாகமாகவே நிலை நின்று வருகின்றது. தான் லட்சிதேவியின் சின்னமான விளக்குமாக வீட்டுக்குள் பிரவேசிப்பது என்று பெண்ணின் மனதில் தோன்றுவதற்காக இதை ஆசாரித்து வருகின்றனர். ஆனால் மனதார இந்தபுதிய சூழ்நிலைக்குப் பொருத்தப்படும் மன நிலையை இது போன்ற சடங்குகள் உதவியாயிருக்கும் என்பதை நவீன மனநூல் சுட்டிக் காட்டுகின்றது. மேலும் ,மாமியார்,நாத்த்னார் போர்கள் சக்தி பெற்றிருக்கும் இந்த காலத்தில் நல்லதான ஓர் உறவினை முதலாவதாகவே தொடங்குவதற்கும் இந்த சடங்கு நன்மையாயிருக்கும்.

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்


27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்.. நட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.