Thursday, December 9, 2010

கிரக தோஷங்கள் கோயில்களை பாதிப்பதில்லையா?


பொதுவாக கிரக தோஷங்கள் பூமியிலுள்ள மனிதர்களையும், விலங்கினங்களையும் எல்லா சரங்களையும் பாதிப்பது வழக்கம். ஆனால் கோயிலையும் கோயில் சமூகத்தையும் ஒன்றும் பாதிப்பதில்லை. நமது பிரதேசத்தில் சில கிரகங்களின் கதிர்கள் நேரடியாகப் படிவதில்லை. வாயு மண்டலத்திலிருந்து அந்தந்த கிரகங்களின் கதிர்களை கோயில் விக்கிரகங்கள் ஈர்த்து வளையங்களாக நிரந்தரமாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றன. கிரகங்களின் கதிர்களின் ஏற்றதாழ்வு கோயிலுக்குள் பாதிப்புண்டாக்காத முறையில் அங்கே பரப்பப்படுகின்ற காந்தக் கதிர்கள் பாதுகாத்து வருகின்றன. இந்த கதிர் பிரகாசம் ஒரு கவசமாக பக்தர்களுக்கு அமைகின்றது என்று இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அதனால் பொதுவாக வந்து சேரும் கிரகப் பிழைகளை அகற்ற சம்பந்தப்பட்ட தேவர்கள் குடி கொள்ளும் கோயில்களில் ஆராதனை செய்து வலம் வந்தால் போதுமானது.

தீர்த்த கரையில் கோயில் அமைக்கவேண்டுமா?


கோயில் கட்ட வேண்டிய முறையைக் குறித்து தெளிவான ஆசாரிய விதிகள் உள்ளன. ஆத்மிகமாக ஒதுங்கியுள்ள இந்த விதிகளில் நவீன சாஸ்திர அடிப்படையிலும் பயன் உள்ளதாக அயல் நாட்டினர் புரிந்து கொண்டதால் இவைகளைப் பின்பற்றினர். தீர்த்தங்கரையிலோ, நதி கரையிலோ, கடலோரத்திலோ கோயில் கட்ட வேண்டும். நதிகள் சேருமிடத்தும், மலையடிவாரத்திலும், குன்றுகளிலும், கோயில் அமைக்கலாம். காடுகளிலும் கிராமத்திலுள்ள சிறுகாடுகளிலும், சந்நியாசிகளின் ஆசிரமத்திலும், மக்கள் வசிக்கும் கிராமத்திலும், தலைநகரத்திலும், பட்டணங்களிலும் ஐசுவரியம் நிறைந்த பிற இடங்களிலும் ஆசாரியர்கள் மேற்பார்வையில் கோயில்கள் அமைக்கலாம்.

சமயற்கட்டில் வெங்காயத்தை மூடிவைக்க வேண்டுமா?


சமயற்கட்டில் வெங்காயத்தை மூடி வைக்க வேண்டும் என்றால் இன்றைய பெண்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மாசு படுவதற்கோ, திருட்டுப்போவதற்கோ வாய்ப்பில்லாத போது ஏன் அடைத்து வைக்க வேண்டும் என்று கேட்கலாம். வெங்காய வகைகள், கோஸ்வர்க்கங்கள் முதலிய உணவுப் பொருட்கள் நெகடிவ் சக்தி வெளி விடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு டெளசிங்ராட் உபயோகித்துத் தெரிந்து கொள்ளலாம். சமயற்கட்டில் அடைத்து வைப்பதும் இதனால் என்பதுவே நிஜம். இதுபோலவே மாமிச வகைகள் முந்திரிப்பருப்பு, போன்றவைகளும் நெகடிவ். சக்தி வெளியிடுகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.