Monday, February 14, 2011

சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.

சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.
(சஹஸ்ர யோகம் )

சேரும் பொருட்கள் ..

  1. பேரிச்சம் பழம்
  2. கோரை கிழங்கு
  3. நெல்லிக்காய்
  4. கொன்றை பட்டை
  5. உலர்ந்த திராக்ஷை
  6. கடுக்காய் தோல்
  7. கொட்டப்பாக்கு
  8. பாட கிழங்கு
  9. கண்டு பாரங்கி
  10. பூலான் கிழங்கு
  11. கொட்டம்
  12. இருவேலி
  13. ஓமம்
  14. காட்டுதிப்பிலி வேர்
  15. நெருஞ்சில்
  16. சாரணை வேர்
  17. காய பலம்
  18. ஞாழல் பூ
  19. மஞ்சள்
  20. கருஞ்சீரகம்
  21. ஆசாளி விதை
  22. கொட்டக்கரந்தை
  23. சிவதை
  24. கீழா நெல்லி
  25. தொட்டால் சுருங்கி
  26. செம்மரபட்டை
  27. புங்கை வேர் - இவைகள் யாவும் நான்கு பலம் (200 கிராம் வீதம் )
  28. சடாமஞ்சில்
  29. ஏலம்
  30. இலவங்கம்
  31. பச்சிலை
  32. சிறுநாகப்பூ
  33. திப்பிலி
  34. கிராம்பு
  35. ஜாதிக்காய்
  36. சந்தனம்
  37. அய பஸ்மம் (சுத்தம் செய்தது ) - இவைகள் யாவும் இரண்டு பலம் ( 100 கிராம் வீதம் )
  38. காட்டத்திபூ - ஏழு பலம் (350 கிராம் )
  39. வெல்லம் - 21 பலம் (1 .050 கிராம் )
மேற்கூறிய அனைத்தும் பொடித்து 108 பிரஸ்தம் (86 லிட்டர் ) தண்ணீர் சேர்த்து மண்பானைக்குள் ஐந்து நாட்கள் வைக்கவும் .அதன் பின் பூமியிலிருந்து எடுத்து 300 பேராமுட்டி இலையும் ,200 தாமரைப்பூவும் சேர்த்து பாத்திரத்தின் வாயை மூடி அர்க்க விதிப்படி அர்க்கமாக தயாரிக்கவும்


அளவு -15 மிலி முதல் 20 மிலி வரை -சம அளவு தண்ணீர் சேர்த்து

தீரும் நோய்கள் -


விசூசிகா(வாந்தி பேதி ) ,ராஜயக்ஷ்மா (உடல் இளைக்கும் நோய் ),இருதய நோய் ,இருமல் ,விஷம ஜ்வரம்(நாள் பட்ட காய்ச்சல் ).சிரோரோகங்கள் (தலை நோய்கள் ),பலஹீனம் ,பாண்டு (இரத்த சோகை ),வீக்கம் ,ருசியின்மை போன்றவை தீரும் .அக்னி பலம் (பசி தீ ),சுக்ல விருத்தி (விந்து பெருகும் )

குறிப்பு -இந்த மருந்து அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை ..
இந்த மருந்து சில சமயங்களில் போதை தர வாய்ப்புள்ளது ..எனவே இந்த மருந்தை நான் எந்த நோயாளிக்கும் தந்ததில்லை ..

பெருங் கழிச்சலை நிறுத்தும் - அஹிபேனாசவம்

பெருங் கழிச்சலை நிறுத்தும் - அஹிபேனாசவம்

(சஹஸ்ர யோகம் -ஆஸவ அதிகாரம் )


  1. இலுப்பை பூ - 100பலம் (ஐந்து கிலோ )
  2. அபின் -4பலம் (200கிராம் )
  3. கோரை கிழங்கு -1 பலம் (50 கிராம் )
  4. ஜாதிக்காய் -1 பலம் (50 கிராம் )
  5. வெட்பாலை அரிசி -1 பலம் (50 கிராம் )
  6. ஏலம் -பலம் -1 பலம் (50 கிராம் )
சேர்த்து ஆசவ தயாரிப்பு முறையில் ஒரு மாதம் கழித்து முறைப்படி -முறையாக மருத்துவ ஆயுர்வேத படிப்பு படித்த மருத்துவரின் மேற்பார்வையில் சாப்பிடவும்

உபயோகபடுத்தும் அளவு

ஐந்து முதல் பத்து மிலி வரை தேவை கருதி -மருத்துவரின் ஆலோசனை படி

குணமாகும் நோய்கள் -

கடுமையான அதிசாரம் (பேதி ),விசூசிகா (வாந்தி +பேதி ) சரியாகும் -
அந்த காலத்தில் நாம் இப்போது காலரா எனப்படும் நோய்க்கு இந்த மருந்தை கொண்டு தான் சரி செய்திருக்கிறார்கள் ..

குளிகை சேர்த்து கொடுக்கும் முறையில் -அச்டக்ஷீறி அல்லது வில்வாதி குளிகை உடன் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்

குறிப்பு

-எல்லா மருத்துவராலும் ,மருந்து கம்பெனியாலும் இதை தயாரிக்க முடியாது ..
அபினை வாங்குவதில் பல சட்ட சிக்கல்களும் ,கொடுக்கும் போது கவனமும் தேவை படுவதால் -இந்த மருந்து செய்வது ,கொடுப்பது ,கிடைப்பது அரிது -எனவே குடஜா அரிஷ்டம் ,மதூகாசவம் போன்ற இதே போல் குணமுள்ள மருந்துகளை தேர்ந்தெடுப்பது நல்லது -எளிது

கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு -லவங்காஸவம்


கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு -லவங்காஸவம்
(ref-ஆஸவாரிஷ்ட ஸங்கிரஹ)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1. நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல - 32 லிட்டர்
2. சர்க்கரை ஸர்க்கர - 30 கி.கிராம்
3. தேன் மது - 4 கி.கிராம்
4. கோமூத்திர - சிலாஜத்து (சுத்தி செய்தது) - 140 கிராம்

இவைகளை நன்கு கலந்து அத்துடன்
1. இலவங்கம் லவங்க - 140 கிராம்
2. திப்பிலி பிப்பலீ - 140
3. மிளகு மரீச்ச - 140
4. சிற்றேலம் ஏலா - 140
5. ஞாழல் பூ ப்ரியாங்கு - 140
6. கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ - 140
7. இலவங்கப்பத்திரி லவங்கபத்ர - 140
8. வாலுளுவை அரிசி ஜ்யோதிஸ்மதி - 140
9. கௌலா கௌலா - 140
10. சிறுநாகப்பூ நாககேஸர - 140
11. மருக்கொழுந்து மரு - 140
12. வாயுவிடங்கம் விடங்க - 140


இவைகளை ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து

1. அயபற்பம் லோஹ பஸ்ம - 30 கிராம்
2. பொன்னிமிளை பற்பம் ஸ்வர்ணமாக்ஷிக பஸ்ம - 30
3. மண்டூர பற்பம் மண்டூர பஸ்ம - 30


ஆகியவற்றையும் இவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:


கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ரித்ப்லீஹவ்ருத்தி), மஞ்சட்காமாலை (காமால), குன்மம் (குல்ம), ரத்த சோகை (பாண்டு), வீக்கம் (ஸோத), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), மூலம் (அர்ஸஸ்), ரத்தபேதி (ரக்தாதிசார), மற்றும் இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ) மார்புநோய், மார்புவலி, ஈஸினோபீலியா.

இருமலை போக்கும் சிறந்த ஆயுர்வேத டானிக் -வாஸாரிஷ்டம்


இருமலை போக்கும் சிறந்த ஆயுர்வேத டானிக் -வாஸாரிஷ்டம்
(ref-கதநிக்ரஹ - ஆஸவாதிகாரம்)



தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1. ஆடாதோடைவேர் வாஸாமூல - 10.000 கி.கி.
2. தண்ணீர் ஜல - 25.600 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து 6.400 லிட்டர் ஆகக் குறுக வடிகட்டி வெல்லம் – (குட) 5.000 கிலோ கிராம் சேர்த்து அத்துடன்


1. இலவங்கப்பட்டை லவங்கத்வக் - 50 கிராம்
2. ஏலக்காய் ஏலா - 50
3. இலவங்கப்பத்திரி லவங்கபத்ர - 50
4. சிறுநாகப்பூ நாககேஸர - 50
5. தக்கோலம் தக்கோல - 50
6. சுக்கு சுந்தீ - 50
7. மிளகு மரீச்ச - 50
8. திப்பிலி பிப்பலீ - 50
9. குருவேர் ஹ்ரீவேர - 50


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:

இருமல் (காஸ), இரைப்பு அல்லது இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் எனும் ஆஸ்த்மா (ஸ்வாஸகாஸ), க்ஷயரோகம் (க்ஷய), வீக்கம் (ஸோத), மூச்சு மண்டலம், உணவுப்பாதை போன்ற உள்ளுறுப்புகளிலேற்படும் குருதிப் போக்கின் பலவிதநிலைகள் (ரத்த பித்த)


இருமல், இரைப்பு போன்ற நிலைகளில் பவளபற்பம், சுவாஸானந்த குடிகா ஆகியவற்றுடனும், ரத்தம் துப்புதல் (ரத்த நிஷ்தீவன), க்ஷயரோகம் போன்ற நிலைகளில் லாக்ஷா சூர்ணம் மற்றும் ஸ்வர்ணமாலினி வஸந்த ரஸத்துடனும் இது கலந்து தரப்படுகிறது. இருமல், இரைப்பு, ஆஸ்த்மா போன்ற மூச்சு மண்டல நோய்களைப் போக்குவதில் ஆடாதோடை பெரும் பங்கு வகிக்கிறது.


பித்தம் குறைய ,இரத்த பித்தம்,சூடு மாறிட -உசீராஸவம்


பித்தம் குறைய ,இரத்த பித்தம்,சூடு மாறிட -உசீராஸவம்
(refபைஷஜ்ய ரத்னாவளி - ரக்தபித்தாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. நன்கு கொதித்து ஆறிய தண்ணிர் ஜல - 25.600 லிட்டர்
2. சர்க்கரை ஸர்க்கர - 5.000 கிலோகிராம்
3. தேன் மது - 2.500


இவைகளை நன்றாகக் கலந்து திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து


1. விளாமிச்சவேர் உசீர - 50 கிராம்
2. குருவேர் ஹ்ரிவேர - 50
3. செந்தாமரைக் கிழங்கு பத்மமூல - 50
4. குமிழ்வேர் காஷ்மரீ - 50
5. நீல ஆம்பல்கிழங்கு நீலோத்பல கந்த - 50
6. ஞாழல் பூ ப்ரியாங்கு - 50
7. பதிமுகம் பத்மக - 50
8. பாச்சோத்திப்பட்டை லோத்ரா - 50
9. மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா - 50
10. சிறுகாஞ்சூரிவேர் துராலபா - 50
11. பாடக்கிழங்கு பாத்தா - 50
12. நிலவேம்பு பூநிம்ப - 50
13. ஆலம்பட்டை நியக்ரோத - 50
14. அத்திப்பட்டை உதும்பரத்வக் - 50
15. கிச்சிலிக் கிழங்கு ஸ்ட்டீ - 50
16. பர்பாடகம் பர்பாடக - 50
17. வெள்ளைத்தாமரைக் கிழங்கு ஸ்வேதகமல - 50
18. பேய்ப்புடல் பட்டோல - 50
19. மந்தாரைப்பட்டை காஞ்சனாரத்வக் - 50
20. நாவல்பட்டை ஜம்புத்வக் - 50
21. இலவம்பிசின் சால்மலீநிர்யாஸ - 50


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:


பித்த எரிச்சல் (பித்த தாஹ), ரத்தமும் பித்தமும் சீர்கேடடைந்து அதனாலேற்படும் மூச்சு மண்டலம், உணவுப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவித ரத்தப் போக்குகள் (ரத்தபித்த), நீர்க்கோவை (ஸோத), ரத்த மூலத்தில் (ரக்தார்ஷ) ரத்தப் போக்கைத் தடுத்து நிறுத்தத் தரப்படுகிறது.

No comments:

Post a Comment