Monday, October 25, 2010

பஜ்ஜி

இறால் தலை மற்றும் இறால் பஜ்ஜி


இங்கு (துபாயில்) அதிகமாக கிடைப்பது பெரிய ராஜ இறால் தான். அந்த பெரிய் தலைய் தூக்கி போட மனசு வரல. ஆகையால் பஜ்ஜியா சுட்டுவிட்டேன்.
இறால தலைய குழம்பில் சேர்த்தாலும் , சூப் வைத்தாலும், மொரு மொருவென வறுத்தாலும் ருசியாக இருக்கும் , ஆனால் இறாலை சுத்தம் செய்வதே பெரிய வேலை அதை தலையையும் சுத்தம் செய்ய சோம்பல் பட்டு சில நேரம் சிறியதாக இருந்தால் ஒன்றிரண்டுமட்டும் ஆய்ந்து விட்டு தூக்கி போட்டு விடுவேன். ஆனால் தலையே நல்ல இரண்டு இன்ச் அளவுக்கு இருந்த்து.
இறாலை தோலுரித்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை அகற்றவும். தலையில் நீட்டாக உள்ள குச்சிகளை கத்திரியால் கட்பண்ணவும்,. அழுக்கு போக சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.




பஜ்ஜி கலவைக்கு

கடலை மாவு – முன்று சூப் ஸ்பூன் அள்வு
மைதா மாவு – ஒரு சூப் ஸ்பூன் அளவு
அரிசி மாவு – ஒரு சூப் ஸ்பூன் அளவு
காஷ்மீரி சில்லி பொடி – முக்கால் டீஸ்பூன்
உப்பு – ருசிக்கு தேவையான அளவு (முக்கால் டீஸ்பூன்)
ரெட் கலர் பொடி – ஒரு சிட்டிக்கை
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஓரு டீஸ்பூன்



இறால் மற்றும் இறால் தலையில் சேர்க்கவேண்டிய மசாலாக்கள்
இறால் – 10 பெரியது
மிளகாய் தூள் – ஒரு ஒன்னறை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்க்ரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி



செய்முறை
1. இறால் மற்றும் இறால் தலையை சுத்தம் செய்து சேர்க்க வேண்டிய மசாலாக்களை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
2. பஜ்ஜி கலவைக்கு கொடுத்துள்ள பொருட்களை நன்கு கட்டியாக கரைத்து ஊறவைத்த இறால் தலை மற்றும் இறாலை டிப் செய்து டீப் பிரை செய்யவும்.
குறிப்பு:
பஜ்ஜி வகை குறிப்புகள் ஏற்கனவே நிறைய கொடுத்துள்ளேன், இறால் சிக்கன், முட்டை செய்யும் போது மைதா சேர்ப்பதால் நன்கு கோட் ஆகும், காய் கறி வகைகளுக்கு மைதா சேர்க்கனும் என்று அவசியம் இல்லை லேசாக பிரட்டி போட்டாலே போதும்.மைதா சேர்ப்பதால் நல்ல ஷாப்டாகவும் புஸுன்னும் இருக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி பஜ்ஜி

இந்த குறிப்பு தமிழ் குடும்பத்துக்கு அனுப்பும் போட்டிக்கான இரண்டாவது குறிப்பு.

குறிப்பினை இங்கு சென்று பார்க்கவும்.


தக்காளி பஜ்ஜி


வெள்ளரி பஜ்ஜி,










எல்லா பஜ்ஜியையும் விட தக்காளி பஜ்ஜி சுவை வித்தியாசம் புளிப்பு சுவையுடன், சிறிது காரத்துடன் சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்,

மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties











பொதுவான பஜ்ஜி கலவை



தேவையானவை

கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
ரெட் கலர் - சிறிது
இட்லி சோடா - ஒரு சிட்டிக்கை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரைத்தேக்கரண்டி (அ) பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
சூடான எண்ணை - ஒரு ஸ்பூன்

வாழக்காய் (அ) ஏதாவது விருப்பமான காய்
எண்ணை பொரிக்க தேவையான அளவு



செய்முறை




மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து கட்டியாக கரைத்து காயை மெல்லிய வடிவில் வெட்டி கலக்கிய மாவில் தோய்த்து எண்ணையை சூடாக்கி பொரித்து எடுக்கவும்.


பொட்டுகடலை துவையல் (அ) புதினா துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.




குறிப்பு


கீழே உள்ள லிங்குகளில் எல்லா பஜ்ஜி வகைகளும் இருக்கிறது.என் இழ்டத்துக்கு மசாலா வகைகளை சேர்த்து செய்த்தது.



அதே போல் சிறிது மைதா, கார்ன் மாவு சேர்த்து செய்தாலும் , நல்ல பொங்கி குண்டு குண்டாவரும்.



மசாலாக்களை அரைத்து ஊற்றியும் பஜ்ஜி மாவு கரைக்கலாம்.

காய் கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

(எல்லா வகையான காயிலும், ( கத்திரிகாய், வெள்ளரிக்காய்,வாழக்காய்,உருளை,அப்பளம், பேபி கார்ன்,தக்காளி வெங்காயம் போன்றவைகளீலும், கொட மிளகாய், முட்டை, சிக்கன் போன்றவையிலும் செய்யலாம்.)


பஜ்ஜிக்கு கடலை மாவு பயன் படுத்துவதால் மாவு கலக்கும் போது அதில் ( சோம்பு (அ) பெருங்காயப்பொடி (அ) இஞ்சி பூண்டு (அ) பூண்டு பொடி) கலந்து சுட்டால் நல்லது. ரொம்ப தண்ணி மாதிரி கலக்கி பொரித்தாலும் எண்ணை குடிக்கும். நல்ல கட்டியா தயிர் பதத்திற்கு கரைக்கவேண்டும்















வாழக்காய் பஜ்ஜி,முட்டை பஜ்ஜி கார்ன் பஜ்ஜி












சிக்கன்பஜ்ஜி, எங்க வீட்டு பேவரிட்








வெங்காயம பஜ்ஜியை இங்கே சென்று பார்க்கவும்

















நோன்பு காலத்தில் ஈசியனா ஸ்னாக் கஞ்சிக்கு அவசரத்துக்கு பஜ்ஜி தான் பஜ்ஜி போட்டா எல்லா வகையிலும் போட்டாகனும்.

ஸ்டப்டு பிரட் பஜ்ஜி = Stuffed Bread Bajji





பிரட் ஸலைஸ் = 10 துண்டுகள்
கீரின் சட்னி = பிரட்டில் தடவ தேவையான அளவு

கெட்சப் = பிரட்டில் தடவ தேவையான அளவு






பஜ்ஜி மாவு


கடலை மாவு = ஒரு கப்
பொட்டு கடலை பொடி = ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
ரெட் கலர் பொடி = இரன்டு பின்ச்
சோம்பு தூள் = முக்கால் பதம் பொடித்தது
கருவேப்பிலை = ஒரு மேசை கரண்டி பொடியாக சாப் செய்தது
துருவிய இஞ்சி = ஒரு தேக்கரண்டி





முதலில் பிரெட் ஸ்லைஸை முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும்.

கீரின் சட்னி புளி சேர்க்காமல் லெமென் சேர்த்து தயாரித்து கொள்ளவும்.
கிரின் சட்னி
கருவேப்பிலை புதினா கொத்து மல்லி ஒரு கப் மண்ணில்லாமல் ஆய்ந்து பொடியாக சாப் செய்து அத்துட‌ன் இஞ்சி ஒரு துண்டு, ப‌ச்ச‌மிள‌காய் ஒன்று, சின்ன‌ வெங்காய‌ம் முன்று, உப்பு சிறிது எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து அரைத்து கொள்ள‌வும்.

கெட்சப்பையும் தயாராக வைக்கவும்.

பஜ்ஜி மாவில் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து கரைத்து கொள்ளவும், அதில் பொடியாக அரிந்த கருவேப்பிலையும் சேர்த்து கொள்ளவும்.




ஒரு பிரெட்டின் ஒரு பக்கம் கெட்சப்பையும், இன்னொரு பிரெட்டில் கிரீன் சட்னியையும் தடவி முடி பிறகு பஜ்ஜி மாவு கலவையில் தோய்த்து எண்ணையை காய வைத்து பொரித்து எடுக்கவும்







குறிப்பு
பிரெட் பஜ்ஜி எண்ணை கூட அவ்வளவா குடிக்காது, இப்படி ஸ்டப் செய்து பொரித்து சாப்பிடுவதால் புளிப்பு, இனிப்பு, காரம் என்று கூடுதல் சுவை.

சுவையான மாலை நேர டிபன் ரெடி, தொட்டுகொள்ள பேரிட்சை சட்னி ரொம்ப நல்ல காம்பினேஷன்.
பிள்ளைகளுக்கு இதில் எல்லா சத்துக்களும் சேர்கிறது. (பேரிட்சை, கொத்து மல்லி கருவேப்பிலை , புதினா இலைகள், பிரெட்) எல்லாமே ஹெல்தி

வித வித மான பஜ்ஜி வகைகள்


பேபி கார்ன் பஜ்ஜி


குழ‌ந்தைக‌ளுக்கு ரொம்ப‌ பிடித்த‌து, ச‌த்தும் அதிகம் இதை செய்யும் போது முழுவ‌து க‌ட‌லைமாவில் முக்கி பொரிக்காம‌ல் லேசாக‌ கார்ன் வெளியில் தெரிவ‌து போல் செய்தால் பிள்ளைக‌ளுக்கு ரொம்ப‌ பிடிக்கும்.

தேவையான‌ பொருட்க‌ள்

பேபிகார்ன் = ஆறு
க‌ட‌லை மாவு = முன்று மேசை க‌ர‌ண்டி
கார்ன் மாவு = ஒரு தேக்கர‌ண்டி
பொட்டு க‌ட‌லை பொடி = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு (கால் தேக்க‌ரண்டி)
பெப்ப‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
ரெடி க‌ல‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி
எண்ணை + ப‌ட்ட‌ர் = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு

செய்முறை

1.பேபி கார்னை ந‌ன்கு க‌ழுவி நீள‌வாக்கில் இர‌ண்டாக‌ க‌ட் ப‌ண்ணி கொள்ள‌வும்.

2.க‌ட‌லைமாவு, கார்ன் மாவு, பொட்டுக‌ட‌லை பொடியை ம‌ற்றும் உப்பு, பெப்ப‌ர் பொடி, பேக்கிங் ப‌வுட‌ர் அனைத்தையும் ப‌ஜ்ஜிமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.

3. மாவு கரைப்பது எப்போதும் அகலமான பாத்திரத்தில் கரைத்து கொள்ளவும்.அப்பதான் சரியாக தோய்ச்சி போட முடியும்.

4. பட்டர் + எண்ணையை காயவைத்து தீயின் அளவை மீடியமாக வைத்து வானலியில் கொள்ளும் அளவிற்கு போட்டு பொரித்து எடுக்கவும்.

5. சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கார்ன் பஜ்ஜி ரெடி டொமேட்டோ கெட்சப்புடன் சாப்பிட கொடுக்கவும், எல்லா கார்னும் நிமிஷத்தில் பறந்து விடும்




முட்டை பஜ்ஜி

இது ஒரு சத்தான முட்டை பஜ்ஜி, சில குழந்தைகளுக்கு அவித்த முட்டை பிடிக்காது, அவர்களுக்கு இப்படி பஜ்ஜியாக கொடுத்து விடலாம். நோன்பு காலங்களிலும் கஞ்சிக்கு செய்து கொள்ளலாம்.

தேவையான‌ பொருட்க‌ள்

முட்டை = இரண்டு
கடலை மாவு = அரை டம்ளர்
அரிசி மாவு = ஒரு மேசை கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ = கால் தேக்கரண்டி
பெப்பர் பொடி = சிறிது
ரெடி கலர் பொடி = கால் தேக்கரண்டி
இட்லி சோடா = சிறிது

செய்முறை

1. முட்டையை வேகவைத்து ஆறியதும் ஒன்றை நான்கு துண்டுகளாக போட்டு கொள்ளவும். மொத்தம் எட்டு துண்டுகள். முழுசா போட்டா அவ்வ‌ள‌வா ந‌ல்ல‌ இருக்காது முழுசா முட்டையை சாப்பிடுவது போல் இருக்கும். க‌ட் செய்து செய்வது ருசியாக‌ இருக்கும்.

2. க‌ட் செய்த‌ முட்டையில் சிறிது பெப்ப‌ர் பொடி, உப்பு தூள் தூவி கொள்ள‌வும். இது கேஸ் ட்ர‌புள் வ‌ராம‌ல் இருக்க‌ இப்ப‌டி தூவி கொள்ள‌லாம். இல்லை நேர‌ம் இருந்தால் லேசாக‌ பொரித்து பிற‌கு சுட்டாலும் ந‌ல்ல‌ இருக்கும்.

3. க‌ட‌லைமாவு,அரிசி மாவு, உப்பு,மிள‌காய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,இட்லி சோடா, ரெடிக‌ல‌ர் பொடி அனைத்தையும் ஒன்றாக‌ ப‌ஜ்ஜி மாவு ப‌த‌த்தில் க‌ரைத்து ஒவ்வொரு முட்டையாக‌ மெதுவாக‌ உடையாம‌ல் போட்டு பொரித்து எடுக்க‌வும்.

4. சுவையான‌ ச‌த்தான‌தொரு முட்டை ப‌ஜ்ஜி ரெடி.










வாழைக்காய் பஜ்ஜி


இது இந்துக்களின் பெண்பார்க்கும் விஷேஷங்களில் சொஜ்ஜி , பஜ்ஜி க்கு முக்கிய பங்குண்டு.இது திடீர் விருந்தாளிகளை சமாளிக்க ஏற்றது பஜ்ஜி தான்.நோன்புகாலங்களிலும் கஞ்சி கூட சாப்பிட சுட்டு கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்


வாழைக்காய் = ஒன்று பெரியது
கடலை மாவு = முன்று குழிகரண்டி அளவு
அரிசி மாவு = இரண்டு மேசைகரண்டி
மைதா மாவு = அரை தேக்கரண்டி
காஷ்மிரி சில்லி பொடி = முக்கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
பெருங்காயப்பொடி = கால் தேக்கரண்டி
சோம்புதூள் = கால் தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
இட்லி சோடா = கால் தேக்க்ரண்டி
ரெடி கலர் (அ) யெல்லோ கலர் பொடி = கால் தேக்கரண்டி

செய்முறை


1. வாழைக்காயை தோலெடுத்து நீளவாக்கில் வெட்டாமல் வட்ட வடிவமாக மெல்லிய வில்லைகளாக போட்டு கொள்ளவும். கடையில் போடுவது போல் நீளவாக்கில் போட்டு தோய்த்து சுடும் போது அதிக எண்ணை உள்ளே இழுக்கும்.இப்படி பொடியாக வெட்டுவதால் எண்ணையில் போட்டதும் சீக்கிரம் வெந்துவிடும். உடனே எடுத்து விடலாம். குழந்தைகளுக்கும் சாப்பிட இலகுவாக இருக்கும்.

2. வாழைக்காய் தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ரொம்ப தண்ணியாக இல்லாமலும், கட்டியாக இல்லாமலும் பஜ்ஜி பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

3. எண்ணையை சூடுப‌டுத்தி வான‌லியில் கொள்ளும் அள‌விற்கு போட்டு பொரித்து எடுக்க‌வும்.

4. சுவையான‌ வாழைக்காய் ப‌ஜ்ஜி ரெடி, புதினா துவைய‌ல்,பொட்டுகடலை துவ‌ல், கெட்ச‌ப்புட‌ன் சாப்பிட‌வும்.

5. இது விரும்பிய‌வ‌ர்க‌ள் நீள‌வாக்கிலும் க‌ட் செய்து சுட்டு சாப்பிட‌லாம்.
கொட‌ மிளகாய் பஜ்ஜி

மிளகாய் பஜ்ஜி என்றது மெரினா பீச் தான் நினைவுக்கு வரும், சில பேருக்கு சாப்பிட ஆசையா இருந்தாலும் அதில் உள்ள காரம் வயிற்று வலிக்கும், அல்சர் வரும் என்று சில சாப்பிடுவதில்லை. காரமில்லாமல் மிளகாய் பஜ்ஜி சாப்பிடவும் ஒரு வழி இருக்கு.இது வாய் க‌ச‌ப்பிற்கு ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கும்.

எப்போதும் போல் வாழைக்காய் ப‌ஜ்ஜிக்கு உள்ள‌ அள்விலேயே செய்ய‌லாம்.
ஆனால் மிள‌காயை க‌ழுவி நீள‌வாக்கில் இர‌ண்டாக‌ (அ) பெரிய‌ மிள‌காயாக‌ இருந்தால் நான்காக காம்போடு பிள‌க்க‌வும். உள்ளே உள்ள விதைகளை நீக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வினிகர்,சிறிது உப்பு, சர்க்கரை போட்டு கட் செய்த மிளகாயை பத்து நிமிடம் ஊறவைக்கவும். அதிக நேரம் ஊறினாலும் நல்ல தான் இருக்கும்.

இப்போது எப்போதும் போல அந்த ஊறிய மிளகாயை எடுத்து பஜ்ஜிகளாக சுட்டெடுக்கவும்.இனி இந்த‌ மிள‌காய் ப‌ஜ்ஜியை சாப்பிடும் போது ஆஸ் வூஸ் என்று சாப்பிட‌ தேவையில்லை. சுவைத்தே சாப்பிடலாம்.


கெட்சப்புடன் சாப்பிட ஆஹா ஆஹா ஆஹா சுவை அபாரம்.

குறிப்பு

பஜ்ஜி என்றது எண்ணையா பிழியும், அதை சுடும் போது இரன்டு முன்று டிஷு (அ) பேப்பர் ( அ) கண் வடி வைத்து நல்ல வடித்து எடுத்தால் எண்ணை வடியும்.அதை ம‌றுப‌டி எடுத்து வேறு டிஷு பேப்ப‌ரில் வைத்து சாப்பிட‌வும்.
ப‌ஜ்ஜியை எண்ணையில் போட்ட‌து சும்மா பெற‌ட்டி பெற‌ட்டி விட‌க்கூடாது.அப்ப‌ எண்ணை ரொம்ப‌ குடிக்கும்.

சிம்மில் வைத்தும் பொரிக்கூடாது, எண்ணை உள்ளே ரொம்ப‌ இழுக்கும்.
இது காய் க‌றி சாப்பிட‌ குழ‌ந்தைக‌ளுக்கு சாத‌த்திற்கு தொட்டு கொள்ள‌ இது போல் ஏதாவ‌து ஒரு காயில் பொரித்து கொடுக்க‌லாம்.

ப‌ஜ்ஜி என்றாலே பெரிய‌வ‌ர்க‌ள் முத‌ல் சிறிய‌வ‌ர்க‌ள் வ‌ரை விரும்பி சாப்பிடுவ‌து.

அதை ப‌ல‌ வித‌மாக‌ செய்ய‌லாம். இது அனைத்தும் நான் செய்யும் முறை.இதே போல் க‌த்திரிக்காய், காளிபிலெவ‌ர், வெண்டைக்காய் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், வெண்டைக்காய் எல்‌லா‌வ‌ற்றிலும் செய்ய‌லாம்.

சிக்கன் பஜ்ஜி


தே.பொருட்கள்

ப‌ஜ்ஜி மாவிற்கு


மைதா மாவு = முன்று குழிகரண்டி
கார்ன் பிளார் மாவு = ஒரு குழிகரண்டி
பேக்கிங் பவுடர் = ஒன்னறை தேக்கரண்டி
எண்ணை = முன்று தேக்கரண்டி
உப்பு ‍= சிறிது

சிக்கனில் மசாலா

சிக்க‌ன் = முன்னூரு கிராம் (போன்லெஸ்)
காஷ்மிரி சில்லி பொடி = அரை மேசை க‌ர‌ண்டி
உப்பு தூள் = ருசிக்கு தேவையான‌ அள‌வு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒன்ன‌றை தேக்க‌ர‌ண்டி
லெமென் ஜுஸ் ‍ = அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணை = ப‌ஜ்ஜி பொரிக்க‌ தேவையான‌ அள‌வு

செய்முறை

1. சிக்க‌னை ந‌ன்கு க‌ழுவி சிறிய‌ துண்டுக‌ள‌க‌ போட்டு கொள்ள‌வும்.
2. சிக்கனை சிறிய துண்டுகளாக போட்டு மசாலா போட்டு அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

3. ப‌ஜ்ஜி மாவு க‌ல‌க்க‌ வேண்டிய‌தை க‌ட்டியாக‌ க‌ரைத்து பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ள‌வும்.

4. எண்ணையை காய‌ வைத்து ப‌ஜ்ஜி போல‌ சிக்க‌னை மைதா க‌ல‌வையில் போட்டு தீயை மீடிய‌மாக‌ வைத்து வெந்த‌தும் பொரித்து எடுக்க‌வும்.
5. குழ‌ந்தைக‌ளுக்கு பிடித்த‌ ய‌ம்மி ய‌ம்மி சிக்க‌ன் ப‌ஜ்ஜி ரெடி, பெரிய‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும், செய்வ‌து ரொம்ப‌ சுல‌ப‌ம்.

குறிப்பு
ந‌ல்ல‌ சுவையான‌ சிக்க‌ன் ப‌ஜ்ஜி, இது போல் க‌ட‌லை மாவிலும் முட்டையெல்லாம் சேர்த்து செய்ய‌லாம்.இதே போல் இர‌ண்டு முன்று வ‌கையாக‌ செய்ய‌லாம்.

த‌க்காளி ம‌ற்றும் வெங்காய‌ ப‌ஜ்ஜி













தே.பொருட்க‌ள்

கடலை மாவு = அரை டம்ளர்
அரிசி மாவு = கால் டம்ளர்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் = தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்கரண்டி
ரெடி கலர் பொடி = பின்ச்
எண்ணை = ப‌ஜ்ஜி சுட‌ தேவையான‌ அள‌வு
ரெட் க‌ல‌ர் த‌க்காளி = இர‌ண்டு


செய்முறை

1. த‌க்காளியை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ க‌ட் செய்து வைக்க‌வும்.


2. ப‌ஜ்ஜி க‌ல‌க்க‌ தேவையான‌ பொருட்க‌ளை ஒன்றாக‌ சேர்த்து த‌யிர் ப‌த‌த்திற்கு க‌ல‌க்கி ஐந்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.


3. எண்ணை காய்ந்த‌தும் ப‌ஜ்ஜிக‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்.புளிப்பு சுவையுட‌ன் கூடிய‌ வித்தியாச‌மான‌ த‌க்காளி ப‌ஜ்ஜி ரெடி.

குறிப்பு
ப‌ஜ்ஜி வெங்காய‌ ப‌ஜ்ஜி சில‌ருக்கு எடுத்து தோய்த்து போடும் போது பிஞ்சி போய் விடும் அதுக்கு, வெங்காய‌த்தை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ வெட்டி சிறிது நேர‌ம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பிற‌குதோய்த்தால் கொஞ்ச‌ம் கிரிப்பாக‌ நிற்கும்.
மிள‌காய் ப‌ஜ்ஜி ரொம்ப‌ கார‌மாக‌ இருந்தால் சிறிது உப்பு, வினிக‌ர் சேர்த்து ஊற‌வைத்து பிற‌கு சுட்டால் கார‌மும் தெரியாது, சுவையும் வித்தியாச‌மாக‌ இருக்கும்.







ப‌ஜ்ஜி ரொம்ப‌ ஈசியா த‌யாரித்து விட‌லாம். இதை வாழைக்காய், உருளை,முட்டை,அப்ப‌ளம், வெங்காயாம்,க‌த்திரிக்காய்,வெங்காய‌ம்,பேபிகார்ன் எலாவ‌ற்றிலும் இதை த‌யாரிக்க‌லாம்.க‌ட‌லை மாவு கேஸ் என்ப‌தால் அதில் சோம்பு (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பூண்டு பொடி (அ) பொருங்காய‌ப் பொடி அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு ஏற்றவாறு போட்டு கொள்ள‌லாம்.இல்லை எல்லாமே ஒரு பின்ச்சும் போடலாம்.
காய்க‌றி சாப்பிட‌தா குழ‌ந்தைக‌ளுக்கு இது போல் செய்து கொடுக்க‌லாம்.வீட்டில் உள்ள‌ காயை வைத்து நினைத்தால் நிமிஷ‌த்தில் த‌யாரித்து விட‌லாம்.இத‌ற்கு தொட்டு கொள்ள‌ பொட்டு க‌ட‌லை துவைய‌ல், கெட்ச‌ப்,பேரிட்சை ச‌ட்னி , புதினா துவையல் எல்லாமே ந‌ல்ல‌ இருக்கும்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment