Thursday, December 9, 2010

நெல்லிக்கனி முதல் கசப்பாகவும் பின்னர் தித்திப்பாகவும் இருப்பது ஏன்?


பெரியவர்கள் சொல்லும் நெல்லிக் கனியும் முதல் கசப்பாகவும் பின்னர் இனிப்பாகவும் இருக்கும் என்பது மூதுரை. எல்லா நோய்களுக்கும் நிவாரணமளிக்கும் நெலிக்கனியின் நற்குணங்கள் பற்பல. பண்டைக்கால பாரதமக்களின் அன்றாட வாழ்கையின் பாகமாயிருந்தது நெல்லிக்கனியும் அதன் மருத்துவ குணங்களும் கிராமப் பகுதிகளிலும், காட்டுப் பிரதேசங்களிலும் நெல்லி மரங்கள் கனியை மென்று திரிவதை எப்போதும் காணலாம். மெல்லத் தொடங்கும் போது கசப்பும், பின்னர் தித்திப்பும் கலந்த ஒரு தனிப்பட்ட ருசியுடையது இக்கனி நெல்லியின் இந்த தன்மையிலிருந்து உண்டான மூதுரைக்குப்பின் சில உண்மைகள் அடங்கியுள்ளன. நெல்லிக் கனியில் அடங்கியுள்ள 'காலெய்ட்கள்'மற்றும் 'பானெய்ட்' கள் என்ற கூட்டுப் பொருட்கள் நமது நாவின் ருசிமையங்களில் நிறைகின்றன. இந்த மையம் சிறிது நேரத்துக்கு இந்த கூட்டுப் பொருட்களால் உணர்வற்ற நிலையில் இருக்கும். அப்போது கசப்பு அனுபவப்படுகின்றது. சிறிது நேரத்துக்குள் ருசிமையத்திலிருந்து இந்த கூட்டுப் பொருட்கள் அகன்று விட்டதும் நெல்லிக் கனியின் சர்க்கரை அம்சத்தின் ருசி நாம் அனுபவிக்கின்றோம். எனவே நெல்லிக்கனி முதலாவது கசப்பாக இருந்தாலும் பின் தித்திப்புடன் நம் உடலுக்கு மருத்துவ குணங்களையும் செலுத்துகின்றது என்ற நவீன மருத்துவமும் அங்கீகரிக்கின்றது.

தும்பை இருந்தால் வாழக்கை தும்பைப்பூ போலாகுமா?


வீட்டுவளாகத்தில் தும்பைச் செடி உண்டானால் தும்பைப் பூ போல் வெண்மையான சிரிப்புடன் வாழலாம் என்பதே இந்த கூற்றின் பொருள். தும்பைப் பூ போன்ற நிலா,தும்பைப் பூ போன்ற சோறு, போன்ற உவமானங்கள் நம் மனதில் என்றும் நிறைந்திருப்பவை. பண்டிகைக் காலங்களில் தெற்றி தும்பை முதலிய பூக்களின் மனதைக் கவரும் காட்சிகள். நம்மைவிட்டு நீங்குவதில்லை. மலையாளிகளின் ஓணம் பண்டிகையில் வீட்டு முற்றங்களின் சந்தன தரைகளில் ஒளியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் தும்பைப் பூவின் வசீகரமும் தூய்மையும் கவிஞர்கள் மனதையும் தூண்டிவிடுவதுண்டு. தும்பைச்செடியின் அற்புதமான மருத்துவகுணத்தை ஆயுர்வேத நூல்கள் சிறப்பித்துள்ளன. எந்த இயந்திரமயமான காலத்தில் வாழ்ந்தாலும் கிராமத்தின் சுத்தமும், மணமும்,சிறிதளவு கொன்னைப் பூவும் தும்பைப்பூவின் மணமும் மனதில் இருக்க வேண்டும் என்று மலையாளக் கவிஞர் வைலோப்பள்ளி பாடியுள்ளார். ஹைடெக்யுகத்தில் விரைவான உயர்ச்சியில் வேறுபட்டு நின்று போகும் கிராமத்துத் தனிமையை நிலை திறுத்தாவிட்டால் அது மனித வம்சத்தையே வேறுபடுத்தக் காரணமாகும். குழந்தைகளின் குடலில் புழுக்களால் உண்டாகும் நோயுற்ற நிலைக்கும் ஜீரணத்துக்கும் தும்பை பயனளிக்கும் மூர்ச்சை,ஜீரம்,ஜன்னி முதலான நோய்களுக்கு நிவாரணமாகக் கொடுக்கும் கோரோசனை மாத்திரையில் தும்பைப் பூ சேர்க்கப் பட்டுள்ளது. கண்ணில் ஏற்படும் சிறுகாயங்களுக்கு தும்பைப் பூவின் சாறெடுத்து கண்ணில் விடுவது நல்லது.தும்பைச் செடியை வேரோடு பிடுங்கி எடுத்து கழுவி சுத்தம் செய்து சிதைத்துச் சாறெத்து அயமோதகம் சேர்த்து வெயிலில் உலர வைத்து இடித்து பொடியாக்கி பரணியில் வைத்து, அதை மூன்று கிராம் வீதம் வயிறு சம்பந்தமான எந்த நோயிலிருந்தும் முழுநிவாரணம் பொறலாம். மகப் பேறுக்குப்பின் அளிக்கும் சிகிட்சையிலும் தும்பைக்கு மிக முக்கிய பங்குண்டு. இயற்கை சிகிட்சை அளிப்பவர்களும், தாய்மாரும் அனேகம் நோய்களுக்கு ஒற்றை மூலிகையாகத் தும்பையை உபயோகிக்கின்றனர். கிருமியின் பாதிப்பால் குழந்தைகளுக்கு வரும் வாந்தி முதலியவைக்கு தும்பைப் பூவும் இலையும் சிதைத்த சாறில் பால்காயம் அரைத்து கொடுப்பது நல்லது. பண்டைக் காலம் முதல் தும்பையின் மென்மையும் தூய்மையும் புரிந்து கொண்டிருந்ததனால் 'தும்பை இருந்தால் வாழ்க்கையும் தும்பைப்பூ போலிருக்கும்' என்று கூறிவந்தனர்.

தவளை கத்தினால் மழைபெய்யுமா?


தவளை கத்தினால் மழை எனறொரு மூதுரை நாம் கேட்டதுண்டு. ஆனால் அதுபோன்ற எதுவும் விஞ்ஞானம் அங்கீகரிக்க வில்லை. மழைபெய்ததற்கு பின்னரே தவளை கத்துவது. அதாவது மழைக்காலம் ஆரம்பித்த பின்னரே அவை "பேக்ரோ" என்று கூவ ஆரம்பிக்கின்றன. பெரும்பான்மையான தவளை இனங்களும் முட்டையிடுவது தண்ணீரிலாகும். அதனால் இவற்றின் இனப் பெருக்கத்துக்கும் மழைக்கும் சம்பந்தமுண்டு. மழைக்காலம் ஆரம்பிக்கும்போது ஆண்தவளைகள் இணையை வசீகரிக்க இவ்வாறு கத்துகின்றன. உண்மையில் இவை கத்துவதல்ல. சுவாசகோசத்திலிருந்து சக்தியாக வெளியேயும் உள்ளேயும் செல்லும் வாயு குரல் நாண்களில் தட்டும் போது கத்துவது போன்ற இவ்வோசை வெளிப்படிகின்றது. தவளையின் வாய்க் கடியில் இருக்கும் வாயுப்பைகள் பலூன் போல் விரிவடைந்து ஒரு ஒலிபெருக்கியாகச் செயல்படுகின்றது. ஓசையும் மிக உரக்க வெளியேறுகின்றது. பலவகைத் தவளைகளும் எழுப்பும் ஓசையில் வேறுபாடு இருந்தாலும் எல்லாவற்றிற்கும் தன் சொந்தம் இணைகளைக் கண்டறியும் திறன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

வீடுதோறும் மூலிகைச் செடி அவசியம் தேவையா?


ஒரு வீடென்றால் முற்றத்தில் மூலிகைச் செடிகள் நட்டு வளர்க்க வேண்டும் என்று முன் தலை முறைகளில் கண்டிப்பாகக் கடைபிடித்து வந்தனர். எந்த நோயுற்ற நிலைக்கும் முதலுதவிக்கு உதவுவது இதுபோன்ற மூலிகைகளே. ஆனால் குப்பிகளில் அடைத்து வரும் மருந்துகள் பெருகத் தொடங்கியதும் மூலிகைகளை மனிதன் மறந்து விட்ட நிலை உருவானது. நமது நாட்டில் பூஜைகளுக்காக உபயோகிக்கும் பூக்கள் மற்றும் இலைகள் எல்லாமே மருத்துவ குணங்கள் உடையவை. இவை எல்லாமே ஆயுர்வேத மருந்துகளில் சேர்க்கப்படுபவை. மேலும் நாட்டு வைத்தியத்தில் இவைகளை ஒற்றை மூலிகைகளாகப் பயன்படுத்துகின்றனர். வீட்டுமுற்றத்தில் மிகப் பிரியத்துக்குரிய நந்தியார் வட்டம் பூக்களை யார்தான் விரும்பாலிருக்க இயலும். இது விஷ்ணு சங்கரநாராணயன் சாஸ்தா என்ற தேவர்களுக்கு மிக விருப்பமான மருத்துவ குணமுடைய தாமரைப் பூ விஷ்ணுவுக்கும் கிருஷ்ணனுக்கும் பிரியமானவை. இது சூரியனின் நாயகியல்லவா!தேவி பூஜைக்காகப் பயன்படுத்துவது செம்பருத்தி,சிவபூஜைக்கு குவளையும் துளசியும் இவை எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.சரும நோய்களுக்கு நவீன மருத்துவமே பரிந்துரை செய்வது வேப்பிலை, வேம்பு மாரியம்மனின் வாசஸ்தானம் என்பது நம்பிக்கை. கண் சம்பந்தப் பட்ட நோய்களுக்கு உத்தமமருந்தாகவே நந்தியார் வட்டம் வீட்டு முற்றத்தில் நட்டிருப்பது. கருப்பைக்கு உறுதியளிப்பது செம்பருத்தி. இதன் இலைகளை இட்த்து பிழிந்து சத்தெடுத்து பெண்கள் இப்போதும் அருந்துகின்றனர். உட்புற சுரப்பிகளை சரிவர செயல்படச் செய்ய பிச்சிப்பூ சேர்ப்பதுண்டு என்று ஆயுர் வேதம் கூறுகின்றது. தெற்றிப்பூ குழந்தைகளிலுண்டாகும் கரப்பனுக்கு விசேஷ மருந்து. ஜீரணம் கோளாறுகளுக்கு துளசியிலையும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு குவளையும் மிகச் சிறந்தவை. எப்படியானாலும் ஒரு வீடானால் மூலிகைச் செடிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசாரியர் விதித்தது வீண்வார்த்தைகளோ மூட நம்பிக்கையோ அல்ல.

கோயில் கொடிமரத்தை விட உயரமான கட்டடம் கட்டினால் தீ பிடிக்குமா?


கோயிலில் நாட்டியிருக்கும் கொடிமரத்தை விட உயரத்தில் கட்டடம் எழுப்பினால் தீ பிடிக்கும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. கோயில் தமக்கு மிகவும் அவசியம் என்றாலும் இது போன்ற நம்பிக்கை சுத்த அனாவசியம் என்று இளைய தலைமுறை இதை அலட்சியப் படுத்துவது இன்றைய நிலை. மிகச்சரிதான்! கோயிலும் பூஜையும் பயனுள்ளவை என்றாலும் கொடிமரத்தை விட உயர்ந்த கட்டடம் கட்டுவதனால் என்ன குடி முழுகிவிடப் போகின்றது? எந்த அடிப்படையில் கட்டடம் தீபிடிக்கும் என்று கூறுகின்றனர் என்று கேட்டால் பதிலளிக்க வேண்டியதுதான். கோயில் கொடிமரத்தை விட உயர்ந்த கட்டடங்களில் தீபிடிக்க வாய்ப்பு மிக அதிகம் என்று விஞ்ஞானிகள் அங்கீகரித்த உண்மை. கோயில் முற்றத்தில் கொடிமரம் அதாவது துவஜம். அமைக்கும் போது தந்திர விதியும் வாஸ்து சாஸ்திரமும் அனுசரித்து செயல் படுகின்றோம். கொடிமரத்தின் கீழ மட்டத்தில் காணப்படும் நிதிக்கும்பம், பத்மம், கர்மம் என்ற பாகங்கள் பொதுவாக செம்பினால் ஆனவை அதற்கு மேல் பீடம் காணப்படும். கோயிலை மனித உடலாகக் கற்பனை செய்தால் கொடிமரம் அதன் முதுகெலும்பு என்று கருதுகின்றனர். கொடி மரத்தின் கீழ்பாகம் செம்பில் செய்வது மட்டுமல்ல கீழ மட்டம் மௌதல் மேல் நுனிவரை செம்பினால் பொதிந்தும் இருக்கும். இதெல்லாம் தந்திர விதிப்படி செய்யப்படுவது. கோயில் கொடிமரத்தை விட உயர்ந்த கட்டடத்தில் தீபிடிகும் என்பதை நவீன விஞ்ஞானமும் ஆமோதிக்கின்றது. கோயில்முற்றத்தில் அமைக்கப்படும் கொடிமரம் அந்த ஊரில் மிகம் உயரமாக இடிதாங்கியாகச் செயல் படுகின்றது. எத்தனை சக்தியாக மின்னல் உண்டானாலும் கொடிமரம் அதை "எர்த்" செய்து ஊரிலுள்ள கட்டடங்களை அழிவிலிருந்து காப்பாற்றும். ஆனால் அதைவிட உயரமான கட்டடங்கள் கட்டியிருந்தால் மின்னல் முதலாவது பாதிப்பது அந்தக் கட்டடத்தையே என்பது நிஜம். கொடிமரத்தை விட உயரமாக கட்டடம் எழுப்பினால் அது தீபிடிக்கும் என்பதன் முனோர்கள் கூறியிருந்ததன் சரியான காரணம் இதுவே.

வீட்டின் தரிசனம் ஏன் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்?


புதிய சூழ்நிலைகளில் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்றாலும் வீடுகட்டும் போது அதன் தரிசனம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைய வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் போதிக்கின்றது. வீடு எந்த திசையை நோக்கியிருந்தால் என்ன வீடு ஐசுவரியத்துடன் இருந்தால் போதாதா என்று பலரும் கேட்கலாம். ஆனால் தரிசனம் வாஸ்திப் பிரகாரம் இருந்தால் ஐசுவரியம் கூடும் என்பது இப்போதைய கண்டுபிடிப்பு. தரிசனம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி கட்டடப்பட்டிருக்கும் வீடுகளுக்கு நவீன சாஸ்திரப் படியான பின் துணை உறுதியாக்கப் பட்டுள்ளது. நம்நாட்டில் கிடைக்கும் மழை, காற்று,சூரிய ஒளி என்பவற்றைக் கணக்கிலெடுத்து வாஸ்து சாஸ்திரம் இந்த விதி ஏற்படுத்தியுள்ளது. மேலும், வடக்கு திசை நோக்கி தரிசனம் வைத்து வீடுகட்டினால் கூடுதல் ஐசுவரியம் உண்டாகும் என்றும் செய்துள்ளது.'ஓசோன்' பாளத்தில் பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற கண்டுபிடிப்பு இதனுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறலாம். இவ்வாறு நிகழும் போது சூரியனிலிருந்து வரும் 'அல்ட்ரா வையலட்' கதிர்கள் நேரடியாக பூமியில் பதியும். இது போன்று தீமை விளைவிக்கும் அல்ட்ரா வையலட் கதிர்கள் நேரடியாக வீட்டின் அங்கணத்தில் பதியும் போதுண்டாகும் தீமைகளைத் தவிர்க்க வடக்கு தரிசனம் கூடுதல் ஏதுவாடிருக்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் வடக்கு அரை கோளத்தில் நம்நாடு இருப்பதால் சூரியன் கூடுதல் காலம் தெற்கு மாறிக் காணப்படும். அதனால் தெற்கு தரிசனமுள்ள வீடுகளில் வெப்பம் அதிகமாயிருக்கும்.

அக்னிக் கோணில் சமயற்கட்டு அமைக்கலாமா?


இன்றும் வீடு கட்டும் போது பெரியவர்கள் அக்னி மூலையில் சமயற்கடு அமைக்கலாகாது'என்று அவ்வாறு அமைத்தால் வீடுக்கு தீ பிடிக்கும் என்பதே நம்பிக்கை. தீ பிடிக்கும் சாத்தியம் அதிகம் உண்டு என்பதாலே அக்னிக் கோணில் சமயற்கட்டு கட்டக்கூடாதுதென்று விதித்துள்ளனர். அஷ்டதிக்குகள் அதாவது எட்டுதிசைகளில் ஒவ்வொன்றுக்கும் காவல் காரராக ஒவ்வொரு தேவதை உண்டென்பது நம்பிக்கை. அப்படி தென் மேற்கு திசையான அக்னிக் கோணின் அதிபதியாகக் கணக்கிடுவது அக்னி தேவன் ஆகும். அக்னிக் கோணில் சமயற்கட்டு அமைத்தால் பருவமழைக் காற்றினால் அக்னிக் கோணில் அமைத்த சமயற்கட்டிலிருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. அதனால் ஓலையால் கட்டிய கூரைகளுள்ள வீடுகள் இதனால் தீ பிடிக்கும் சாத்தியம் உண்டல்லவா. இப்போதுள்ள வீடுகள் கான் கீரீட் என்றும், சமயலுக்கு விறகு அல்ல வாயு என்றும் கூறி தேற்றிக் கொள்ள வேண்டாம். சமயல் வாயு ஆனாலும் அதில் கசிவு உண்டானால் அக்னிக் கோணிலுள்ள சமயற்கட்டில் தென்மேற்குக் காற்றடித்தால் தீ பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அக்னிக்கோணில் சமயற்கட்டமைத்தால் தீ பற்றிக் கொள்ளும் என்பதற்கு இதுவே காரணம். மேலும் சமயற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது கிழக்கு வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

வீட்டின் தெற்கினி ஏன் உயர்ந்திருக்க வேண்டும்?


புதிய வீடுகள் காங்க்ரீட் சிற்பங்களாக நாம் உயர்த்திக் கட்டும் இக்காலத்தில் தெற்கினி ஏது? ஆனாலும் வீட்டின் தெற்கினி உயர்ந்து நிற்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. தெற்கினி என்றால் வீட்டின் தெற்குப் பாதத்திலுள்ள கட்டு. ஏன் இந்தப் பாகத்தை மட்டும் உயர்த்திக் கட்ட வேண்டும் என்று ஒரு நியாயமான கேள்வி எழலாம். இதன் பதில் மிக சுலபமானது.வீட்டின் வேறுபக்கங்களில் தெற்கு வெயிலின் தீமையான ஈடுபாடு இல்லை. தெற்குப்பாகத்தில் உள்ள கட்டை உயர்த்தி எழுப்புவது தெற்கு வெயிலிலிருந்து வீட்டைப் பாதுகாப்பதற்காகவே. சரிவுள்ள மேல் கூரைகளும் வெயிலிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன. அதற்காகவே பழைய வீடுகளில் சாய்ந்திறங்கும் மேல் கூரைகள் அமைத்தனர்.

வாசற்படியில் உட்காரத் கூடாது ஏன்?


வாசற்படியில் இருக்கும் சிறுவர்களை பாட்டிமார் விரட்டி அடிப்பதுண்டு. வாசற்படியில் அமரக் கூடாது என்று அன்புடன் உபதேசிப்பதும் உண்டு. வாசல் வழியாக வரும் போகும் நபர்கள் தட்டி விழும் சாத்தியம் உள்ளதாலே இவ்வாறு கூறுகின்றனர் என்று கருதி வருகின்றோம். ஆனால் வாசற்படியிலோ நிலைப்படியிலோ இருக்கக் கூடாதென்பது சரியான காரணத்துடன் என்பது கண்டறிந்துள்ளனர். 'டெளசிங்ராட்' என்ற கருவியை வாசற்படியில் பிடித்தால் வாசற்படியிலிருந்து எதிர் சக்திகள் (நெகடிவ்ஃபோர்சஸ்) வெளியாவது காணலாம். இதனால் வாசற்படியில் அமர்ந்தால் நம் உடலில் எதிர் சக்திகள் புகுந்து செல்லும். இதை அன்றே புரிந்து கொண்டிருந்த ஆசாரியர்கள் வாசற்படியில் உட்காருவதை சக்தியாக எதிர்த்திருந்தனர். வாசற்படிக்கு உட்பக்கமோ வெளிப்பக்கமோ கூடதென்பதற்கும் சரியான காரணமும் இதுவேதான். வாசல் நிலையின் நாலு பக்கங்களும் சமசதுர வடிவிலுள்ளதானால் நெகடிவ் சக்தி வெளிவருகின்றது. வாஸ்து சாஸ்திரத்தை மிக முக்கியமாகக் கருதும் சீன மக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கும் வாசல்கள். மற்றும் ஜன்னல்களின் நிலைகள் வேறு வடிவத்தில் மேல் பாகம் நோக்கி வளைந்திருக்கக் காணலாம். இது நெகடிவ் சக்திகளைத் தவிர்ப்பதற்காகவே, நமது கோயில் வாசல்களிலும் இவ்விதமே அமைத்துள்ளனர்.

கிணற்று நீரில் சூரிய ஒளி படிய வேண்டுமா?


எங்கேயாவது ஒரு கிணறைத் தோண்டி அதிலிருந்து நீர் இறைத்துப் பயன்படுத்துவதல்ல வழக்கம். ஆதிகாலம் முதல் நாம் கிணறு தோண்டுவதற்கு தனிப்பட்ட இடத்தை கண்டு பிடிப்பதுண்டு. கிணற்றைக் குறித்து நாம் பல நம்பிக்கைகளும் ஆசாரங்களும் கடைபிடித்து வருவதுண்டு. எங்கு கிணறு தோண்டினாலும் அங்கு சுலபமாக தண்ணீர் கிடைக்கப் பெற வேண்டும் என்பது கட்டாயம். அதனால் தண்ணீர் கிடைப்பதை முன் கூட்டியே கண்டறிந்து கிணறு தோண்டுமிடத்தை முடிவு செய்ய வேண்டும். ஒரு தென்னை ஈக்கும் ஒரு சிறு கம்பும் சேர்ந்த கருவியால் பார்த்து நம் முன்னோர்கள் தண்ணீர் கிடைக்குமிடத்தை கண்டுபிடித்திருந்தனராம். இதை வைத்து பூமியின் நாடித்துடைப்பையும் அளந்திருந்தனராம். மேலும்: உபயோகிக்கும் கிணற்று நீரில் சூரிய ஒளி தாராளமாகப் படிய வேண்டும் என்பதும் கண்டு பிடித்திருந்தனர். சூரியனை வாழ்கையின் முக்கிய கடகமாகக் கண்டிருந்த நம் முன்னோர்கள் சூரிய ஒளி கிணற்று நீரில் பதிய வேண்டும் என்று விதித்திருந்தனர். சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் வைட்டமின் அடங்கிய கதிர்கள் கிணற்று நீரில் படியும் என்று அறிந்திருந்தனர். ஆனால் இதை விட முக்கியமாக சூரிய ஒளி பதியும் கிணற்று நீரிலிருந்து அனுகூல சக்தி (பாசிடிவ்ஃபோர்ஸ்) புறப்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். ஆனால் குழாய் நீரிலிருந்து புறப்படுவது நெகடிவ் சக்தி என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

பால் காய்ச்சும் வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது எதற்கு?


புதுமனை கட்டி முடித்து அதற்கு புகு விழா நடத்தும் போது மாவியலைத் தோரணம் கட்டுவது வழக்கம். இதன் பயன்கள் தெரியாவிட்டாலும் இவ்வாறு செய்வதில் பெரும் பான்மையான மக்கள் கருத்தாக இருந்து வருகின்றனர். பால் காய்ச்சுச் சடங்குகள் எவையெல்லாம் என்பது அனேகருக்கும் தெரியும். புதிதாகக் கட்டிய வீட்டில் நடுவில் அமைந்திருக்கும் அறையில் இதற்காக வைக்கப்பட்ட புதிய அடுப்பில் வீட்டுத் தலைவி ஒரு புதிப் பானையில் பாலை ஊற்றி சூடாக்குகின்றாள். பால் கொதித்து பொங்கி நிறைந்து கவிந்தொழுக வேண்டும் என்பது நம்பிக்கை. இதைக் காணும் போது வீட்டுத் தலைவருக்கும் வந்து சேர்ந்திருப்போருக்கும் ஒரே கொண்டாட்டம்தானே! பரிசுத்தமானதால் பாலைச் சூடாக்கி புதுமனைக்குள் செல்கின்றோம். இதற்குப் பின்னால் ஆழமான ஆத்மீக உண்மைகள் இருப்பதாக ஆசாரியர் கூறுகின்றனர். எப்படியானாலும் பால் காய்ச்சும் வீட்டுக்குள் செல்லும் போது ந்ம்மை முதலாவது வரவேற்பது வாசலில் மாவிலைத் தோரணங்கள். ஆனாலும் இதை யாரும் அவ்வளவு பொருட்டாக எடுப்பதில்லை. மாவிலைத் தோரணத்துக்குப் பின்னாலுள்ள உண்மைகளை பண்டைக் காலத்திலேயே அறிந்திருந்ததனால் இந்த வழக்கம் இன்றும் உள்ளது. பால்காய்ப்பு என்றல்ல எல்லா முக்கிய சடங்கிற்கும் சிலர் மாவிலையை கனப்படுத்துவதுண்டு. பால் காய்ச்சும் சடங்கிற்காக அனேகம் மக்கள் அந்த வீட்டில் வந்து சேருவதுண்டு. அப்படி அதிகம் பேர் வந்து சேருமிடத்தில் வாயு அசுத்த மாவது இயற்கை. இந்த அசுத்த வாயுவை சுத்தம் செய்ய மாவிலைக்கு இயலுமாம். மாவிலையை வாசலிலும் வீட்டிற்குள்ளும் கட்டுவது இதற்காகவே. இதற்கு பதிலாக மாவிலை வடிவில் ப்லாஸ்டிக் இலைகள் கட்டுவதுமுண்டு. இதனால் பயனில்லை என்பது மட்டுமல்ல தீமையுண்டு என்பதே உண்மை. மாவிலைக்கு நோயணுக்களின் சக்தியை அழிக்க இயலும் என்றறிந்திருந்த முன்னோர்கள் மாவிலையால் பல்துலக்குவதுண்டு. கிணற்றை சுத்தம் செய்ய இறங்கும் போது கிணற்றிலுள்ள அசுத்த வாயுவில் சிக்கி மூர்ச்சையாகும் நிகழ்வுகள் நாம் அறிந்துள்ளோம் ஆழமான கிணற்றில் இறங்குவதற்கு முன் மாமரத்தின் ஒரு கிளையை ஒடித்து கட்டியிறக்கி கழற்றிய பின் வெளியில் எடுத்தால் சுத்த வாயு கிடைக்கும் என்று நாம் பண்டைய மக்கள் சொல்லக் கேட்டதுண்டு.

நீண்ட கூந்தலுடைய குழந்தைக்கு வளர்ச்சி குறையுமா?


நீண்ட கூந்தல் அழகின் அறிகுறி என்று பெண்கள் கருதுகின்றனர். கூந்தலைப் பராமரிப்பதற்காக ஏராளம் பணமும் செலவிடுகின்றனர். நவீன காலத்துப் பெண்கள். பண்டைய சரித்திர புராணப் பெண்களுடைய சித்திரங்கள் பார்த்தாலும் நீண்ட கூந்தலை எடுத்துக் காட்டுவதாகக் காணலாம். ஆனால் நீண்ட கூந்தலுடைய பெண் குழந்தைக்கு வளர்ச்சி குறைவு என்றொரு நம்பிக்கை நிலைத்துள்ளது.ஆண் குழந்தைகள் விஷயத்திலும் இந்நம்பிக்கை உண்டு. உடலின் வளர்ச்சியை விருத்தி செய்வதற்கு நீண்டு வளரும் கூந்தலை கத்தரித்து விடும் சில மக்கள் பகுதிகளும் பாரதத்திலுண்டு. எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் முடியில் மையப்படுத்தியிருப்பதனால் நீண்ட கூந்தலுடைய சில பெண் குழந்தைகளில் வளர்ச்சி குன்றியிருப்பதைக் காணலாம்.

ருத்திராட்சை அணிந்தால் பாவம் தணியுமா?


ருத்திராட்சை அணிந்தால் பாவம் தணியும் என்று ஓர் நம்பிக்கை உண்டு. இறை நம்பிக்கையின் பாகமாகவும் இறைவன் அருகாமைக்காகவும் ருத்திராட்சம் சிலர் அணிகின்றனர். விதிப்படி ருத்திராட்சை அணிந்தால் பாவம் நீங்கும் என்றும் இறைவன் அருகாமையுண்டாகும் என்று நம்பியிருக்கின்றனர். கழுத்தில் முப்பத்திரண்டு,சிரசில் நாற்பது காதில் ஆறுவீதம், கைகளில் பன்னிரண்டு வீதம்,புஜத்தில் பதினாறுவீதம் சிகயில் ஒன்று, விருக்ஷஸ்தானத்தில் நூற்றிஎட்டு என்ற கணக்கில் ருத்திராட்சம் அணிந்தால் அது பரமேஸ்வரனேயாகும் என்று நாரதரிடம் நாராயண மகரிஷி வெளிப்படுத்தும் ஒரு பாகம் தேவி பாகத்தில் இடம் பெற்றுள்ளது. விதிப்படியல்லா விட்டாலும் ருத்திராட்சம் அணியும் நபர்கள் அனேகம் பேர் இன்றைய காலத்திலும் காணலாம். சிலர் தங்கம் அல்லது வெள்ளியால் ருத்திராட்சத்தை கட்டுவதுண்டு. சிலர் நூலில் கோத்தும் ருத்திராட்சை அணிகின்றனர். விதிப்படியல்லாமல் ருத்திராட்சை அணிவதனால் சில தீங்குகள் வரலாம் என்று ஆசாரியர் வெளிப்படுத்துகின்றனர். ருத்திராட்சை அணிகின்றவர்கள் உணவு விஷயத்திலும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கின்றனர். ருத்திராட்சம் அணிந்திருப்பவர்கள் அசைவ உணவுகள் அருந்தக் கூடாது. போதைப் பொருட்கள் மதுபானம் முதலியவையும் பயன்படுத்தலாகாது. சிவப்பு வெங்காயம், வெள்ளைப்பூண்டு,முருங்கைக்காய் முதலியவையும் அருந்துவதில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைவன் அருகாமை கிடைக்கப் பெறும் என்று மத நம்பிக்கை கூறும் போது, மருத்துவ குணங்களைப் பெறலாம் என்று மருத்துவத் துறை உறுதியளிக்கின்றது. எந்தநிலையிலும் ருத்திராட்சம் அணியத் தொடங்கலாம் என்றாலும், கிரகணம்,விஷீசம் கிரமம்,உத்தராயனம்,தக்ஷிணாயனம் என்ற நாட்களில் ருத்திராட்சம் அணிந்தால் சக்ல பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்குமாம். ருத்திராட்சையின் மகிமையைப்பற்றி பத்மபுராணத்தில் வியாசர் விவரித்துள்ளதைக் காணலாம். ருத்திராட்சை எவரும் அணியலாம் என்றும் அணிந்தாலே பாவங்கள் அழிந்து விடும் என்பதே. தொட்டால் சுவர்க்கம் கிடைக்கும், அணிந்தால் மோட்சம் கைகூடும் என்று வியாசர் கூறியுள்ளார். சிரசு,உரசு,புஜம் என்பவற்றில் ருத்திராட்சை அணிந்தால் சிவனுக்கு சமமாக மாறலாம் என்றும் எல்லா முயற்சிகளும் சாதனைகளாக்கலாம் என்றும்,அவர்வசிக்கும் பிரதேசமே புண்ணிய பூமியாகுமென்றும் கூறுகின்றார். புராணங்கள் எடுத்துரைப்பதற்கு மேல் மருத்துவத்துறை இதன் நற்குணங்களை மிகவும் புகழ்கின்றது. ருத்திராட்சை கழுத்திலணிவதால் புற்று நோய் முதலிய நோய்கள் கூட தணியும் என்று அண்மையில் வெளிவந்துள்ள சில ஆராய்ச்சிக்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம்,தாகம் விக்கல் போன்றவை மாறுவதற்கு ருத்திராட்சை நல்லது என்று ஆயுர் வேதம் உறுதிகூறுகின்றது. கபம்,வாதம்,தலைவலி முதலிய பல நோய்களுக்கும் துன்பங்களுக்கும் ருத்திராட்சம் மருந்தாகும் என்று ஆயுர் வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தியடையச் செய்யும் என்று ருத்திராட்சையைச் சிறப்பித்து நிரூபித்திள்ளனர். இது சில மன நோய்களுக்கும் சாந்தமளிக்கும் என்று கண்டுள்ளனர். மேலும் பல மருந்துகளிலும் ருத்திராட்சை ஒரு சேர்வைப் பொருளாகும். ருத்திராட்சம் வறுத்து நாவில் பூசினால் பேச்சுத்திறனை மறுபடியும் பெற்றுள்ளதாக பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கின்றோம். ருத்திராட்சை பசுவின் சிறுநீர்,துளசிநீர்,இளநீர்,பிரம்மி என்பவை சேர்த்து பிரம்ம முகூர்த்தத்தில் அருந்துவது புத்தி விருத்தியடைய உதவும் எனக் கண்டறிந்துள்ளனர். கண்டகாரி, திப்பலி என்பவையுடன் ருத்திராட்சை சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். பார்க்கப் போனால் ருத்திராட்சையின் ஒளடத குணங்கள் ஏராளம் ஏராளம்.இதுதான் ருத்திராட்சை அணிவதிலும் நம் முன்னோர்கள் மிகமுக்கியத்துவம் அளித்திருந்தனர்.

குழந்தைகள் ஏன் நிழல் பார்த்து விளையாடக் கூடாது?

பசுவை கோமாதாவாகச் சிறப்பித்துக் கொண்டால் பசு இறைச்சியை உணவாகக் கொள்ளும் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். நற்குணங்களும் நன்மைகளும் நிறைந்த பசுவைக் கொன்று உண்ணுவதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவர்களிடம் எப்படி நன்மை எதிர் பார்க்க இயலும். ஆனாலும் கோமாதா என்ற கருத்து ஆதிகாலம் முதல் பாரத மக்களிடையே இருந்து வந்தது. தூய்மையின் சின்னமாக விளங்கும் . பசுவை மாதாவாகக் கருதுவதற்கான காரணங்கள் பல உள்ளன. பசுவின் பால்,சாணம்,சிறுநீர் என்பவை தூய்மையானது என்று கருதுகின்றோம். மேலும் பசுவை காட்சி காண்பது கூட நன்மையென்று முந்தலைமுறை நம்பியிருந்தது. கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு கருத்தும் பாரத மக்களிடையே உண்டு. கோக்களை (பசுக்களை) பாலிக்கும் கிருஷ்ணனை பக்தர்கள் மிக நேசித்திருந்தனர். நிலையான பாரத கலாச்சாரத்தில் கோமாதவுக்கு மிக முக்கியமான இடமளித்திருந்தனர். அமுதம் வழங்கும் தாயைப் போல கருணை காட்டும் பசுவை தாயாக நினைப்பதிலும் பராமரிப்பதிலும் பாரத மக்கள் காட்டும் தூய்மையான ஆர்வத்தி மேல் நாட்டவரில் பலரும் அங்கீகரித்துள்ளனர். வேறோரு உயிரினத்தை சிறப்பாகவும் பரிசுத்தமாகவும் காண இயலும் கலாச்சாரம் மெச்சப்பட வேண்டியது என்று மேல் நாட்டவர் கருத்து. பசுவிலிருந்து நமக்கு முக்கியமாகத் தருவது பால். ஊட்டச்சத்தாகவும் மருந்தாகவும் காலாகாலமாகப் பயன்படுத்தி வரும் பாலிலிருந்து தயிர், வெண்ணை,நெய் முதலியவையும் பசு நமக்காக வழங்குகின்றது. பொதுவாக மலத்தை அசுத்தமாகக் கருதும் நாம் சாணத்தை தாவரங்களுக்கு இது உணவாகவும் பயன்படுத்துகின்றோம். சில மருந்துகளில் சேர்ப்பதற்காக பசுவின் சிறுநீர் பயன்படுகின்றது. திவ்ய மருந்தாகக் கருதி வரும் கோரோசனை பசுவிலிருந்து கிடைக்கின்றது என்று பலருக்கும் தெரியாது. இப்படி மனிதனுக்கு எல்லாவிதத்திலும் பயனளித்து வரும் ஒரு சாதுவான பிராணியை தாய் என்று நினைப்பதில் தவறில்லை. பாட்டிமார் முற்றத்தைப் பெருக்கி சாணம் கலக்கித் தெளிப்பதும் தரையை சாணத்தால் பூசுவதும் அதன் தூய்மையை மனதில் கொண்டுதான் என்பது இன்றைய தலைமுறை ஏற்றுக் கொள்வதில்லை.

குழந்தைகள் ஏன் நிழல் பார்த்து விளையாடக் கூடாது?


குழந்தைகள் நிழலைப் பார்த்து விளையாடும் போது பெரியவர்கள் கண்டிப்பது வழக்கம் நிழுலுடன் நடப்பது,நிழலிடம் சேட்டைகள் செய்வது, நிழலில் காணும் பிரதிபிம்பத்தைத் தாக்குவது, முதலிய விளையாட்டுகளில் குழந்தைகள் உற்சாகத்துடன் ஈடுபடுவதுண்டு. குழந்தைகள் நிழலைக் கண்டு பயம் கொள்ள சாத்தியமுண்டு. சில நேரங்களில் பூதமோ பேயோ என்று நினைத்து பயம் கொள்ள வாய்ப்பு உண்டென்று மன சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் நிழலிடம் விளையாடும் போது தன் சூழ்நிலையை அறியாமல் விபத்துக்கள் நேர்ந்து விடலாம் என்பதும் இதைத்தடை செய்ய ஒரு காரணமாக உள்ளது.

அமாவாசி விரதம் ஆசிர்வாதம் பெற்றுத்தருமா?


விரதங்களை ஆசரிப்பது நம் முன்னோர்கள் தம் வாழ்க்கையின் பாகமாகவே கருதியிருந்தனர். இறைவன் அருளுக்குப் புறமே, இது போன்ற விரதங்கள் நித்திய வாழ்வில் செலுத்தும் செல்வாக்கை அறிந்திருந்தனர் பண்டைய மக்கள். செல்வம்,உடல்நலம் சந்ததிச்செல்வம் முதலியவை பலனாகக் கிடைக்குமாறு கடைப் பிடித்திருந்த அமவாசி விரதத்தைக் குறித்து நம் பண்டைக் காலத்து மக்களுக்கு சில உண்மைகளும் தெரிந்திருந்தன. காலை புண்ணிய தீர்த்தத்தில் குளித்த பின் பலி அர்பணம் செய்தல்,ஒரு வேளை விரதம் முதலியவை அனுசரித்திருந்தனர். ஆடி, தை. மாசி, ஐப்பசி மாதங்கள் வரும் அமாவாசி மிக முக்கியமானதாக நினைத்திருந்தனர். அமாவாசிக்கு முன் தினமும் அமாவாசி அன்றும் ஒரு வேளையே உணவருந்துவதுண்டு. அமாவாசியன்று சந்திரனில் ஒளியில்லாத பாகம் பூமிக்கு நேருக்கு நேராக வருகின்றது. இது மனித உடலில் சில பாதிப்புக்கள் உண்டாக்குகின்ரது. இதில் விளையக் கூடிய தீங்குகளைத் தவிர்க்கவே அமாவாசி விரதம் விதித்திருக்கலாம். சந்திரனுக்கு பூமியில் பாதிப்புண்டாக்கலாம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் கடல் வேலியேற்றமும் வேலியிறக்கமும்.

தூங்கும் போது நீண்டு நிமிர்ந்து படுக்க வேண்டுமா?


இரவில் தூங்குகின்றவர்களைக் கவனித்தால் மிக சுவாரசியமாக இருக்கும். பல வகையில் பலரும் படுத்திருப்பார்கள். சரிந்து படுப்பவர்கள்,மலர்ந்து படுத்திருப்பவர்கள், கவிழ்ந்து திடப்பவர்கள், என்று பலவகைகள் காணலாம். சிலர் சுருண்டும் கைகால்கள் மடக்கி வைத்தும் தூங்குவதைப் பார்க்கலாம். ஆனால் நீண்டு நிமிர்ந்து கிடப்பது இறையருளின் பாகம் என்று முதியோர்கள் கூறுவதுண்டு. நவீன அறிவியல் அடிப்படையில் பார்த்தாலும் இதுவே சரி என்று வெளிப்படும். இரத்த ஓட்டத்துக்கு தடங்கல் வராமல் இருக்க வேண்டுமானால் தூங்கும் போது நீண்டு நிமிர்ந்து கிடக்க வேண்டும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது.

விஷ்ணு பூஜைக்குள்ள பூக்கள் எவை?


விஷ்ணு பூஜைக்குள்ள பூக்களைப்பற்றி,கோயில் ஆசார இரகசியங்களில் கூறப்பட்டிருக்கின்றது. விஷ்ணு பூஜைக்கு ஏதாவது பூக்கள் போதாதா என்று கேட்கலாம். கிருஷ்ண துளசி, ராமதுளசி,வெள்ளைத்தாமரை,செந்தாமரை, பிச்சகம்,ஜமந்தி,முல்லை, காக்கத்தி முல்லை;நாகம், காட்டு, செணோகம், நந்தியார் வட்டம், மூக்குத்தி,செம்பருத்தி, நொச்சிமல்லிகை,செண்பகம்,குவளை,நீலத்தாமரை,கைதை,புதுமுல்லை,சிவப்பு முல்லை என்ற பூக்கள் விஷ்ணு பூஜைக்கு உத்தமமான பூக்கள். வெறும் தேவபூஜைக்கு எடுக்கும் பூக்களாக இவற்றை காண வேண்டியதில்லை. இவற்றின் மருத்துவகுணங்களைப்பற்றியும் இவை சுவாசித்தால் பெறும் பயங்களைப்பற்றியும் மருத்துவநூல் வெளிப்படுத்துகின்றது.

கறிவேப்பிலை கையில் கொடுக்கலாமா?


நம்நாட்டு சமயலுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே கறிவேப்பிலையை கருதுகின்றறோம். எல்லோரும் கறிவேப்பிலையை கறியுடன் சாப்பிடுவதில்லை என்றாலும் சமயல் செய்யும் போது கறிவேப்பிலை இல்லாமல் செய்வதில்லை. ஆனால் கையில் கொடுத்தால் கொடுப்பவரும் வாங்குபவரும் விரைவில் சண்டை போட்டுக் கொள்வார்களாம். இதனால் நாம் கறிவேப்பிலையைக் கையில் கொடுப்பதில்லை. கறிவேப்பிலை வெந்துவிட்டால் அதில் குணம் எதுவுமில்லை என்றாலும் பச்சைக் கறிவேப்பிலையிலிருந்து நெகடிவ் சக்திகள் புறப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர். கையில் கறிவேப்பிலையைக் கொடுக்காததும் இதனால் தான். இதைக் கூறும் போது தனியாகக் கவனிக்க வேண்டிய விஷயம் எதுவென்றால், செம்பருத்தி, முல்லை துளசி முதலிய செடிகளிலிருந்து பாசிடிவ் சக்திகளே உருவாகின்றன. அதனால் இவை வீட்டு முற்றத்தில் நட்டு வளர்க்கின்றோம். ஆர்கிட்,அந்துரியம் முதலியவற்றிலிருந்து நெகடிவ் சக்தி உருவாகின்றது. நவீன அலங்காரச் செடிகள் வளர்ப்பவர்கள் கவனிக்கவும்!

மாவிலையால் பல் தேய்க்க வேண்டுமா?


நவீன பேஸ்ட் மற்றும் பிரஷ் பௌஅன்படுத்தி இன்றைய தலைமுறை பல்துலக்கும் போது இதை பழமைவாதிகள் விரும்புவதில்லை. அவர்கள் மாவிலையால் பல்துலக்கி பழகிவிட்டனர். மாவிலையால் பல்தேய்த்தால் பற்கள் மல்லிப்பூ போல் வெண்மையாகும் என்று மட்டும் அவர்கள் அறிந்திருந்தனர். மேலும் இன்றைப்போல பேஸ்ட் குளிக்குமிடத்துக்குச் செல்வதில்லை. குளத்திக்கோ நதிக்கோ செல்லும் வழியில் ஏதாவது ஒரு மாமரத்திலிருந்து இலை பறித்தெடுத்து அதை இரண்டாக மடித்து தேய்த்துச் செல்வது வழக்கம். உணவருந்திய பின் வாய் கழுவினாலும் உணவின் அம்சங்கள் பற்களுக்கிடையே இருக்கும் இதிலிருந்து நோயணுக்கள் உருவாகி பற்சிதைவு முதலிய நோய்கள் வரலாம். பற்கள் சுத்தமானாலும் மாவிலை அணுக்கள் அழிக்க வல்லது என்று கண்டறிந்ததனாலே அதைப் பல் துலக்க பயன்படுத்துகின்றனர்.

கிரக தோஷங்கள் கோயில்களை பாதிப்பதில்லையா?


பொதுவாக கிரக தோஷங்கள் பூமியிலுள்ள மனிதர்களையும், விலங்கினங்களையும் எல்லா சரங்களையும் பாதிப்பது வழக்கம். ஆனால் கோயிலையும் கோயில் சமூகத்தையும் ஒன்றும் பாதிப்பதில்லை. நமது பிரதேசத்தில் சில கிரகங்களின் கதிர்கள் நேரடியாகப் படிவதில்லை. வாயு மண்டலத்திலிருந்து அந்தந்த கிரகங்களின் கதிர்களை கோயில் விக்கிரகங்கள் ஈர்த்து வளையங்களாக நிரந்தரமாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றன. கிரகங்களின் கதிர்களின் ஏற்றதாழ்வு கோயிலுக்குள் பாதிப்புண்டாக்காத முறையில் அங்கே பரப்பப்படுகின்ற காந்தக் கதிர்கள் பாதுகாத்து வருகின்றன. இந்த கதிர் பிரகாசம் ஒரு கவசமாக பக்தர்களுக்கு அமைகின்றது என்று இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அதனால் பொதுவாக வந்து சேரும் கிரகப் பிழைகளை அகற்ற சம்பந்தப்பட்ட தேவர்கள் குடி கொள்ளும் கோயில்களில் ஆராதனை செய்து வலம் வந்தால் போதுமானது.

தீர்த்த கரையில் கோயில் அமைக்கவேண்டுமா?


கோயில் கட்ட வேண்டிய முறையைக் குறித்து தெளிவான ஆசாரிய விதிகள் உள்ளன. ஆத்மிகமாக ஒதுங்கியுள்ள இந்த விதிகளில் நவீன சாஸ்திர அடிப்படையிலும் பயன் உள்ளதாக அயல் நாட்டினர் புரிந்து கொண்டதால் இவைகளைப் பின்பற்றினர். தீர்த்தங்கரையிலோ, நதி கரையிலோ, கடலோரத்திலோ கோயில் கட்ட வேண்டும். நதிகள் சேருமிடத்தும், மலையடிவாரத்திலும், குன்றுகளிலும், கோயில் அமைக்கலாம். காடுகளிலும் கிராமத்திலுள்ள சிறுகாடுகளிலும், சந்நியாசிகளின் ஆசிரமத்திலும், மக்கள் வசிக்கும் கிராமத்திலும், தலைநகரத்திலும், பட்டணங்களிலும் ஐசுவரியம் நிறைந்த பிற இடங்களிலும் ஆசாரியர்கள் மேற்பார்வையில் கோயில்கள் அமைக்கலாம்.

சமயற்கட்டில் வெங்காயத்தை மூடிவைக்க வேண்டுமா?


சமயற்கட்டில் வெங்காயத்தை மூடி வைக்க வேண்டும் என்றால் இன்றைய பெண்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மாசு படுவதற்கோ, திருட்டுப்போவதற்கோ வாய்ப்பில்லாத போது ஏன் அடைத்து வைக்க வேண்டும் என்று கேட்கலாம். வெங்காய வகைகள், கோஸ்வர்க்கங்கள் முதலிய உணவுப் பொருட்கள் நெகடிவ் சக்தி வெளி விடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு டெளசிங்ராட் உபயோகித்துத் தெரிந்து கொள்ளலாம். சமயற்கட்டில் அடைத்து வைப்பதும் இதனால் என்பதுவே நிஜம். இதுபோலவே மாமிச வகைகள் முந்திரிப்பருப்பு, போன்றவைகளும் நெகடிவ். சக்தி வெளியிடுகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

ஆரத்தி எடுப்பதன் பின்னுள்ள இரகசியம் என்ன?


விஞ்ஞானமும் நவீன வாதமும், முற்போக்கு வாதமும் எல்லாம் நம் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்திர்யிருந்த போதிலும் சில நம்பிக்கைகள் இன்றும் தவிர்க்க முடியாதவையாக நீடித்து நிற்கின்றன.இதில் ஒன்று தான் ஆரத்தி எடுப்பது. தூரத்துப் பயணங்கள் கழிந்து வரும் குடும்பத்தினர்,திருமணம் முடிந்து மணமகன் வீட்டுக்கு வரும் தம்பதிகள், மகப்பேறு முடிந்திருக்கும் தாய் முதலியோரைப் பொதுவாக ஆரத்தி எடுப்பதுண்டு. தண்ணீரில் மஞ்சள் அரைத்துச் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகின்றது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்கள் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்குச் சுற்றும் மூன்று முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்பிக்கு கிருமிகளை அழிக்கும் திறன உண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

மணமகளை விளக்கு வழங்கி வரவேற்க வேண்டுமா?


சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்கையிலும் திருமணம் முடிந்து வரும் மணமகளை வீட்டில் பிரவேசிப்பதற்கு முன் ஏற்றிய குத்துவிளக்கைக் கொடுத்து வர வேற்பது வழக்கம். இன்றும் இந்த சடங்கை அனேக வீடுகளில் நிகழ்ந்து வருகின்றது. திருமணம் முடிந்து வந்து சேரும் மணமகளை,மணமகனின் தாய் அல்லது சகோதரி குத்துவிளக்கை வழங்கி அழைத்துக் கொண்டு வருவதுண்டு. இது நம்பிக்கைகளின் பாகமாகவே நிலை நின்று வருகின்றது. தான் லட்சிதேவியின் சின்னமான விளக்குமாக வீட்டுக்குள் பிரவேசிப்பது என்று பெண்ணின் மனதில் தோன்றுவதற்காக இதை ஆசாரித்து வருகின்றனர். ஆனால் மனதார இந்தபுதிய சூழ்நிலைக்குப் பொருத்தப்படும் மன நிலையை இது போன்ற சடங்குகள் உதவியாயிருக்கும் என்பதை நவீன மனநூல் சுட்டிக் காட்டுகின்றது. மேலும் ,மாமியார்,நாத்த்னார் போர்கள் சக்தி பெற்றிருக்கும் இந்த காலத்தில் நல்லதான ஓர் உறவினை முதலாவதாகவே தொடங்குவதற்கும் இந்த சடங்கு நன்மையாயிருக்கும்.

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்


27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்.. நட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

நட்சத்திர படி குழந்தை பெயர்கள்

நட்சத்திர படி குழந்தை பெயர்கள்


A B C D E F G
1 Baby Names with Starting Letter in Tamil, English & Other Lanugages
2 S.No Star Tamil Letter English Letter Other Languages Astronomical Star
3 1 அசுபதி சு, சே, சோ, ல CHU,CHEY,CHO,LA Chu,Che,Cho,La Sheretan, Asvini
4 2 பரணி லி, லு, லே, லோ LI,LU,LEY,LO Lee,Lu,Le,Lo Bharani
5 3 கிருத்திகை அ, இ, உ, எ AO,Ee,UO,A A,E,U,Ea Alcyone, Krittika
6 4 ரோகிணி ஒ, வ, வி, வு O,VA,VEE,VOO O,Va,Vi,Vu Aldebaran, Rohini
7 5 மிருகசீரிஷம் வே, வோ, கா, கி VAY,VO,KAA,KE We,Wo,Ka,Ki Orionis
8 6 திருவாதிரை கு, க, ச, ஞ KOO,GHAA,JNA,CHA Ku,Gha,Ing,Chh Betelegeuse, Ardra
9 7 புனர்பூசம் கே, கோ, ஹ, ஹி KAY,KO,HAA,HEE Ke,Ko,Ha,Hi Pollur,Punarvasu1 &2 ,Castor
10 8 பூசம் ஹூ, ஹே, ஹோ, ட HOO,HAY,HO,DAA Hu,He,Ho,Da Pusya
11 9 ஆயில்பம் டி, டு, டே, டோ DEE,DOO,DAY,DO De,Du,De,Do Asleasa, Acubens
12 10 மகம் ம, மி, மு, மெ MAA,MEE,MOO,MAY Ma,Me,Mu,Mee Regulus, Magha
13 11 பூரம் மோ, ட, டி, டு MO,TAA,TEE,TOO Mo,Ta,Ti,Tu Zosma,PuraPhalguni 1-2
14 12 உத்திரம் டே, டோ, ப, பி TAY,TO,PAA,PEE To,Pa,Pe,Pu Denebola,Uttara Phalguni 1-2
15 13 அஸ்தம் பூ, ஷ, ந, ட PU,SHAA,NAA,THA Pu,Sha,Na,Tha Algorel, Hasta
16 14 சித்திரை பே, போ, ர, ரி PAY,PO,RAA,REE Pe,Po,Ra,Re Spica, Citra
17 15 சுவாதி ரு, ரே, ரோ, த RU,RAY,RO,TAA Ru,Re,Ro,Taa Arcturus, Svati
18 16 விசாகம் தி, து, தே, தோ THEE,THOO,TAHY,THO Ti,TU,Tea,To Zuben El Genubi, Visakha,
19 17 அனுஷம் ந, நி, நு, நே NA,NEE,NOO,NAY Na,Ne,Nu,Ne Dschubba, Anuradha
20 18 கேட்டை நோ, ய, இ, பூ NO,YAA,YEE,YOO No,Ya,Yi,Yu Antares, Jyestha
21 19 மூலம் யே, யோ, ப, பி YAY,YO,BAA,BEE Ye,Yo,Ba,Be Schaula, Mula
22 20 பூராடம் பூ, த, ப, டா BU,DHAA,BHA,DHA Bhu,Dha,pha,Dha Purvasaha 1-2, Kaus Australis
23 21 உத்திராடம் பே, போ, ஜ, ஜி BAY,BO,JAA,JEE Bhe,Bho,Ja,Ji Nunki, uttarasadha
24 22 திருவோணம் ஜூ, ஜே, ஜோ, கா JU,JAY,JO,GHA Ju,Khi,Je,Khu,Jo,Khe,Gha,kho Altair, Sravana
25 23 அவிட்டம் க, கீ, கு, கூ GAA,GEE,GOO,GAY Ga,Gi,Gu,Ge Rotanev, Dhanistha 1-2, Saulocin
26 24 சதயம் கோ, ஸ, ஸீ, ஸூ GO,SAA,SEE,SOO Go,Sa,Si,Su Satabhisaj
27 25 பூரட்டாதி ஸே, ஸோ, தா, தீ SAY,SO,DAA,DEE Se,So,Da,Di Scheat, Purva Bhadrapada 1-2
28 26 உத்திரட்டாதி து, ச, ஸ்ரீ, ஞ DHU,THA,SA,GHEE Du,Tha,Jha,Da Algenib, Uttara Bhadrapada 1-2
29 27 ரேவதி தே , தோ, ச, சி DE,DO,CHAA,CHEE De,Do,Cha,Chi Revati