Tuesday, October 26, 2010

இனிப்பு



சிகப்பரிசி மாவு புட்டு -



தேவையானவை
சிகப்பரிசி புட்டு மாவு – 400 கிராம்
தேங்காய் துருவல் – அரை முறி (முழு தேங்காயில் பாதி)
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 25 கிராம்
செய்முறைஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டி யில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து எடுக்கவும்.
அவிந்து புட்டு மணம் வந்த்தும் அதை ஒரு வாயக்ன்ற பாத்திரத்தில் கொட்டி தேங்காய் துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறி நெய்யை உருக்கி ஊற்றவும்.

பால் பழம் சேர்த்து பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கூடவே ஆஃப் பாயில் (அ)வெங்காய முட்டை சேர்த்து சாப்பிட நல்ல் இருக்கும்.
இதுக்கு சர்க்க்ரை சேர்க்காமல், சென்னா மசாலா, முழுபாசி பயறு மசாலா தொட்டும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாழைபழம் சேர்த்து உருண்டையாக உருட்டி வைத்தால் சத்தமில்லாமல் காலி ஆகும்.


கோதுமை மாவு குழி பணியாரம் - atta kuzipaniyaram


தேவையானவை
கோதுமை மாவு = முக்கால் டம்ளர்
இட்லி மாவு - ஒரு குழி கரண்டி
ரவை - ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று
தேங்காய் துருவ‌ல் = கால் ட‌ம்ளர்
முந்திரி - இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது
உப்பு = ஒரு சிட்டிக்கை
வெல்ல‌ம் = முக்கால் டம்ளர் (பொடித்தது)
ஏலப்பொடி = அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணை = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு

செய்முறை
வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும்.
கோதுமை மாவில் இட்லி மாவு,ரவை,முட்டை,முந்திரி,உப்பு,ஏலப்பொடி,வடித்த வெல்லம் அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும்.
கலவை கட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கலக்கி சிறிது நேரம் ஊறவக்கவும்.
குழிபணியார சட்டிய காயவைத்து கொஞ்சமாக எண்ணை விருப்பபட்டால் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
குட்டி குட்டியா பார்க்க வே அழகா இருக்கு சுட்டு வைத்தா லபக் லபக் க்குன்னு வாயில் போய் விடும்.

இது ஏற்கனவே நான் செய்த கோதுமை மாவு அப்பம் தான், இப்ப சிலபொருட்கள் சேர்த்து குழிபணியாரமா சுட்டாச்சு.

குழிபணியாரம் எனக்கு ரொம்ப பிடிச்சது ஆனால் ஓவ்வொரு முறை ஊரிலிருந்து சட்டி வாங்கி வரனும் என்று நினைத்து அதிக லக்கேஜ் காரணமா வாங்க முடியாம போய் விடும். இங்கு அதிக காசு கொடுத்து வாங்கனும்.ரொம்ப ஆசையா இருந்தா இதை தயாரித்து விட்டு என்னையில் அப்பம் போல் சுட்டு சாப்பிடுவது. இல்லை ஆச்சி செட்டி நாடில் வாங்கி சாப்பிடுவது
இந்த தடவை எப்படியோ வாங்கி வந்துவிட்டேன். நான் ஸ்டிக் என்பதால் அதிக எண்ணையும் தேவைபடல.

குழி பணியார மாவுக்கு
புழுங்கல் அரிசி – ஒரு ஆழாக்கு
பச்ச அரிசி – ஒரு ஆழாக்கு
உளுந்து - அரை ஆழாக்கு
வெந்தயம் – அரை தேக்கரண்டி

மாவை 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து புளிக்க வைத்து இனிப்பு மற்றும் காரவகைகளை விரும்பம் போல் சுட்டு சாப்பிடலாம்.


கேசரி லட்டு - kesari laddu



தேவையான பொருட்கள்
ரவை = ஒரு கப்
பட்டர் = கால் கப்
சர்க்கரை = ஒரு கப்
நெய் = இரண்டு தேக்கரண்டி
பாதம், முந்திரி = ஐந்து
கிஸ்மிஸ் பழம் = ஆறு
ரெட் கலர் பொடி = இரண்டு பின்ச்


செய்முறை

1. நெயில் பாதம் ,முந்திரி பொடியாக அரிந்து,கிஸ்மிஸ் சேர்த்து கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும்.பட்டரை உருக்கி அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறமாக வறுக்கவும்.

2. அதற்குள் பக்கத்து அடுப்பில் ரவை ஒரு கப்பிற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்து அதில் கலர் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

3. கொதித்ததும் வறுத்து கொண்டிருக்கும் ரவையில் கொட்டி கை விடாமல், கட்டி தட்டாமல் ஊற்றி கிளறவும்.

4. ரவை சிறிது கெட்டியாகி வரும் போது சர்க்கரை கொட்டி கிளறி, வறுத்த முந்திரி,பாதம்,கிஸ்மிஸ் ஐ கலந்து இரக்கவும்.




ஆறியதும் அதை உருண்டைகளாக பிடித்தோ (அ) டைமண்ட் ஷேப்பிலோ கட் பண்ணவும்.

குறிப்பு

இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.முந்திரி பாதத்தை பொடித்தும் போட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.

நொய் உருண்டை







அவார்டுடன் ஷீர் குருமா


விளக்கப்படத்துடன் கீழே உள்ள லிங்கில் கொடுத்துள்ளேன்.



ஈத் ஸ்பெஷல் மிட்டாகானா

இஸ்லாமிய திருமணங்களில் பிரியாணியுடன் செய்யும் இனிப்பு வகையில் இந்த மிட்டாகானா மிகவும் பிரசத்தி பெற்ற இனிப்பு வகையாகும். இதற்கடுத்து தான் கேசரி, பிரெட் ஹல்வா எல்லாம்

தேவையான பொருட்கள்

நல்ல தரமானபாசுமதி அரிசி – கால் கப்
கேசரிகலர் மஞ்சள் (அ) சிவப்பு
உப்பு – அரை சிட்டிக்கை
இனிப்பில்லாத கோவா – ஒரு மேசை கரண்டி
சர்க்கரை – அரைகப்
நெய் – இரண்டு மேசை கரண்டி
தாளிக்க
பட்டை – சிறிய துண்டு
முந்திரி , ரெயிசின்ஸ் – தலா ஆறு

செய்முறை
முதலில் அரிசியை களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.



ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க வைத்து சாதம் வடிப்பது போல் உதிரியாக வடிக்கவும்.(தண்ணீர் கொதித்து அரிசி தட்டியதும் அதில் கலர் பொடி + உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிக்கவும்.








நெய்யை உருக்கி முந்திரி ரெயிசின்ஸ் கருகாமல் வறுத்து எடுத்துவிட்டு, அதில் பட்டை தாளித்து வடித்த சாத்த்தை கொட்டி கிளறி சர்க்கரை சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும்.

சர்க்கரை உருகும் போது கோவாவை சேர்த்து கிளறி சேர்ந்து வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி ரெயிசன்ஸை சேர்த்து கிளறி இரக்கவும்..






கோவா கிடைக்கவில்லை என்றால், இரண்டு மேசைகரண்டி நீடோ பால் பவுடரை அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிகக் விட்டு சுண்டி கோவா பதம் வந்ததும் அதை எடுத்து சேர்க்கவும்.



குறிப்பு:
கல்யான பிரியாணிக்கு ஏற்ற ஸ்வீட் (மிட்டாகானா) இதை நிறைய கல்யாணத்துக்கு செய்யும் போது பாதி டால்டா பாதி நெய் சேர்த்து செய்வார்கள். இதில் கொடுத்துள்ள அளவு முன்று பேர் சாப்பிடும் அளவு.

நிறைய செய்ய இந்த அளவு.






அரிசி – அரை கிலோ(நல்ல தரமான வசனை பாசுமதி அரிசி)
மஞ்சள் (அ) ரெட் கலர் பொடி – கால் தேக்கரண்டி உப்பு – கால் தேக்கரண்டி சர்க்கரை – ஒரு கிலோ இனிப்பில்லாத பால்கோவா - 100 கிராம்
டால்டா - 100 கிராம்

தாளிக்க
நெய் – 25கிராம்முந்திரி - 100 கிராம் கிஸ்மிஸ் பழம் – 25 கிராம்
பட்டை - ஒரு இரண்டு அங்குல துண்டு













.


உருளை கிழங்கு ஹல்வாவும் இனிப்பு சோமாஸும்







உருளை கிழங்கு - ஒன்று பெரியது
கடலை பருப்பு - இரண்டு மேசை கரண்டி
நெய் - முன்று தேக்கரண்டி
பாதம் - ஐந்து
பாதம் எஸன்ஸ் - இரண்டு சொட்டு
பால் - கால் கப்
ஏலக்காய் - இரண்டு
சாப்ரான் - இரண்டு பின்ச்
ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்





1.உருளை கிழங்கை நன்கு வேக வைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.

2.கடலை பருப்பை களைந்து ஐந்து நிமிடம் ஊறவைத்து சுண்டல் பததில் கிள்ளு பதமாக வேக வைக்கவும்.

3.பாதத்தை ஊறவைத்து தோலெடுத்து வைக்கவும்.

4.மிக்சியில் வெந்த கடலை பருப்பு,ஏலக்காய்,பாதம், பால் சாஃரான் சேர்த்து அரைக்கவும்.

5.ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் மசித்த உருளை கிழங்கு மறும் அரைத்த கடலை பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.

6.ஏற்கனவே வெந்து இருப்பதால் இரண்டு நிமிடம் கிளறி அதில் சர்க்கரை சேர்க்கவும்.

7.ரெட் கலர் பொடியும் சிறிது கரைத்து ஊற்றி கொள்ளவும்.8.கடைசியில் சிறிது பதம் எஸன்ஸும், மீதி நெய் சேர்த்து கிளறவும்.நன்கு கிளறி ஹல்வா பதம் வந்ததும் இறக்கவும்.







சோமாஸுக்கு மைதா ,பட்டர்,உப்பு, சர்க்கரை சேர்த்து குழைத்து இதை பூரணமாக உள்ளே வைத்து மூடி சுடவும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


குறிப்பு

************

அப்பா சூப்பர் ஹல்வா குழந்தைகளுக்கு வாயில் ஏதும் தட்டாமல் சப்பு கொட்டி கொண்டு உள்ளே போகும்.

இதில் நட்ஸ் உங்கள் இழ்டம் தான் கொஞ்சம் அதிகமாக சேர்ப்பதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம்.

ஒன்பது மாதம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

இதை சோமாஸ் செய்ய பூரணமாகவும் பயன் படுத்தலாம்

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக தாயாரிக்கலாம்.

பட்டர் சேர்த்தால் இன்னும் நல்ல கிளற வரும்.


பேரித்தம் பழம் இனிப்பு சட்னி - dates sweet chutney


குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், நல்ல எனர்ஜியும் கிடைக்கும், கிஸ்மிஸ் பழம் சேருவதால் சளி தொல்லைக்கும் குட் பை சொல்லலாம்.
தேவையான பொருட்கள்பேரித்தம் பழம் - எட்டு
கிஸ்மிஸ் பழம் - பதினைந்து
புளி - ஒரு கொட்டை பாக்குஅளவு
உப்பு - ஒரு பின்ச்
வெல்லம் - ஒரு பிட்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி (வருத்தது)
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி



செய்முறை
முதலில் கிஸ்மிஸ் பழம், பேரித்தம் ,புளியை கொட்டை நீக்கி விட்டு முன்றையும் கழுவி ஒரு பவுளில் வைத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வேக வைத்து வெளியில் எடுத்து ஆறவைக்க வேண்டும்.
ஆறியதும் அதை மிக்சியில் போட்டு அதனுடன், வெல்லம்,உப்பு,சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு சட்னி ரெடி.
குறிப்பு:பஜ்ஜி, சமோசா, வடை போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம்.


ஜோவர் ஆட்டா,ராகி லட்டு

தேவையானவை

ஜோவர் ஆட்டா - அரை கப்
சர்க்கரை - இரண்டு மேசை கரண்டி
ராகி - கால் கப்
நெய் ஒரு மேசை கரண்டி
நட்ஸ் - இரண்டு மேசை கரண்டி (பொடியாக அரிந்தது)
ஏலக்காய் - ஒன்று



செய்முறை
1. நட்ஸ் வகைகளை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

2. ஜோவர் ஆட்டா, ராகியை லேசாக வறுக்கவும்.
சர்க்கரையை ஏலக்காயுடன் சேர்த்து பொடித்து கொள்ளவும்.

3. மாவுடன் சர்க்கரை, நட்ஸ் சேர்த்து சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

4. இதன் மனமும் ருசியும் சொல்ல வார்த்தைகள் இல்லை.


விஜியின் ராகி லட்டு பார்த்ததும் ஜோவர் ஆட்டாவில் இதை செய்து பார்த்தேன்.

ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு.


பிரட் ஹல்வா - bread halva





தேவையான பொருட்கள்

பிரெட் பாக்கெட் – 1 சிறிய பாக்கெட்
பால் – 4 டம்ளர்
இது பால் பவுடர் கரைத்து காய்ச்சி செய்தது.
நெய் – 50 கிராம்
டால்டா – பிரெட் பொரிக்க தேவையான அளவு
பாதம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
கிஸ்மிஸ் – சிறிது
ஏலக்காய் – 2
ரெட் கலர் பொடி – சிறிது
ஸ்வீட்ன கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்

சர்க்கரை – 200 கிராம்


செய்முறை



தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
பாலில் ஏலம் சேர்த்து கால் பாகம் வற்றும் அளவிற்கு காய்ச்சவும்






பிரெட்டை டால்டாவில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எல்லா பிரெட்டையும் பொரித்து எடுக்கவும்





பாலில் பாதம் முழுவதும் + சிறிது முந்திரியை ஒன்றூம் பாதியுமாக பொடித்து சேர்க்கவும்.








பாலில் பொரித்து வைத்துள்ள பிரெட்டை உதிர்த்து சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பிறகு சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.








கடைசியாக ஸ்வீட்ன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்








இடையில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, கலர் பொடியை கரைத்து சேர்த்து ஹல்வா பத்த்தில் கிளறவும்








கடைசியாக முந்திரியை பொடியாக அரிந்து , ரெயிஸின்ஸுடன் நெயில் வறுத்து சேர்க்கவும்












சுவையான பிரெட் ஹல்வா ரெடி.



குறிப்பு:
கொஞ்சம் தளர்வாக கிளறினால் தான் நல்ல இருக்கும் ரொம்ப ரிச் ஸ்வீட்.
இன்னும் ஒன்று பாதத்தை முதலே பாலில் சேர்த்து கிளறுவதை விட கடைசியாக சேர்த்து கிளறினாலும் நரு நருன்னு நல்ல இருக்கும்.
பிரெட்டை மொருகலாக பொரித்ததும் தூளாக்காமல் வேண்டிய வடிவில் கட் செய்து ஒரு வாயகன்ற த்ட்டில் பரத்தி சுகர் சிரப்பில் போட்டு, அப்படியே மேலேயே காய்ச்சி ஊற்றி நட்ஸ்களை பொரித்து சேர்த்தால் ஹைத்ராபாத்தில் செய்யும் டபுள் கா மீட்டா ரெடி


பாயா குருமா, வட்லாப்பம்


எல்லோருக்கும்உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும். அன்னையர் தின வாழ்த்துக்கள்.

இது என் அம்மாவின் ஸ்பெஷல் முட்டை வட்லாப்பம்,சின்னதில் ஓவ்வொரு புது வருடபிறப்புக்கும் கண்டிப்பாக செய்வார்கள்.


இது இஸ்லாலிய இல்லத்தில் கல்யாணவீடுகளில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் பல உணவுகளில் இந்த காம்பினேஷனும் உண்டு. (இடியாப்பம், வட்லாப்பம், கால் பாயா, ரொட்டி)


வட்லாப்பம்
முட்டை - பத்து
சர்கக்ரை - இரண்டு டம்ளர்
தேங்காய் ஒரு முறி முழுவதும்
ஏலக்காய் - முன்று
முந்திரி - 6
நெய் - அரை தேக்கரண்டி

செய்முறை


தேங்காயை அதிகம் தண்ணீர் ஊற்றாமல் கட்டியாக பால் எடுக்கவும்.
முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து , தேங்காய் பால்,சர்க்கரை, முட்டையை ஒன்றாக நன்கு கலக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெயில் வறுத்து சேர்க்கவும்.
ஏலக்காயை அப்படியேவும் போடலாம், நேரம் கிடைப்பவர்கள் ஏலக்காயின் உள்ளே இருக்கு விதைகளை மட்டும் எடுத்து லேசாக வறுத்து பொடித்து போட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
எல்லாம் கலக்கிய்தும் கலவையை ஒரு முடி போட்ட சில்வர் டிபன் பாக்ஸில் வைத்து குக்கரி ஆவி வந்து வெயிட் போட்டு ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து இரக்கவும். குக்கர் அடியில்







சரியான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.

சுவையான சூப்பரான முட்டை வட்லாம் ரெடி.



இது இடியாப்பம், ஆப்பம், தோசை ஆகியவற்றிற்கு பொருந்தும், இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாகும்.

பாயா குருமா
ஆட்டுகால் - ஒரு செட்
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்ச மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு தூள் - ருசிக்கு தேவையான அளவு
த்னியாதூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி, புதினா - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசைகரண்டி
எண்ணை - நான்கு மேசை கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா நான்கு
தயிர் - நான்கு மேசைகரண்டி
தேங்காய் - அரை மூறி
முந்திரி - பத்து
கசகசா- ஒரு மேசைகரண்டி

செய்முறை

1. முதலில் சுத்தம் செய்த பாயாவில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு ,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசை கரண்டி அளவு சேர்த்து கலக்கி குக்கரில் நன்கு வேகவிடவும், பாய வேக 20 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை குறைத்து வைத்து பிறகு வேகவிட்டு இரகக்வும்.

2. தேங்காய்,கசகச, முந்திரியை நல்ல மையாக அரைத்து கொள்ளவும்.

3. ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணையை காயவைத்து பட்டை + கிராம்பு+ஏலம் சேர்த்து வெடிய விட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்.

4. அடுத்து சிறிது கொத்துமல்லி ,புதினா, தக்காளி, பச்சமிளகாய், மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு தூள், எல்லாம் சேர்த்து வதக்கி, தயிரையும் சேர்த்து நன்கு கிரேவி பதம் வர தீயின் தனலை சிம்மில் வைத்து கூட்டை
கிரிப்பாக்கவும்.

5. கால் வெந்ததும் கூட்டில் அரைத்த தேங்காய் கலவையையும் ஊற்றி தேவைக்கு குழம்பு பததிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு தேங்காய் வாடை அடங்கும் வரை கொதிக்க விட்டு, மீதி உள்ள கொத்து மல்லி புதினாவை தூவி இரகக்வும்



.

குறிப்பு

குருமா என்று சொல்லும் போது தனியாத்தூள் அதிகமாக சேர்க்க தேவையில்லை. நாங்க ரொம்ப கம்மியாக தான் இதில் சேர்ப்போம், சில பேருக்கு தனியாதூள் சேர்த்து செய்து பழக்கம் ஆகையால் குறைந்த அளவில் இதில் கொடுத்துள்ள்ளேன்.
கால்பாயா மிளகு சால்னாவில் (மிளகு, தனியா தூள் கூடுதலாகவும் சேர்க்கனும்) இது பாயா குருமா.
ஆட்டு பாட்ஸில், கால், குடலில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் ஆகையால் அதிக எண்ணை தேவையில்லை.
இதற்கு கோதுமை ரொட்டி நல்ல இருக்கும்.
நடக்க ஆரம்ப்பிக்கும் குழந்தைகளுக்கு இது காரமிலலாமல் அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது,
அதிக கால் வலி மூட்டு வலி உள்ளவர்களும் அடிக்கடி செய்ட்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment