Monday, October 25, 2010

குழிபணியாரம்

கொத்துமல்லி குழிபணியாரம் - coriander kuzipaniyaram




இது இட்லி, தோசைக்கு அரைத்து மீந்து போன மாவில் நான் கொத்துமல்லி தோசை செய்வேன்,(இன்னும் இந்த கலவையில் மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் சேர்த்தும் சில சமையம் செய்வேன் ரொம்ப நல்ல இருக்கும். மிளகாய் பொடியுடன் சூப்பராக இருக்கும்.) இப்ப அது குழிபணியாரமாகிவிட்ட்து.











மீந்து போன இட்லிதோசை மாவு – ஒரு டம்ளர்
மைதா – அரை டம்ளர்
ரவை – கால் டம்ளர்
கொத்துமல்லி தழை – ஒரு பஞ்ச்
பச்ச மிளகாய் – இரண்டு
வெங்காயம் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
ஆப்ப சோடா – அரை பின்ச்
முந்திரி – 4 (பொடியாக அரிந்த்து




செய்முறை:



1.மாவில் மைதா ரவை,ஆப்ப சோடா, உப்பு யை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும் .
2.வெங்காயம் ,பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்க்கவும்.
3.கொத்துமல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி பொடியாக நருக்கி சேர்க்கவும்.






4. குழிபணியார சட்டியை காயவைத்து பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.



5.தொட்டு கொள்ள வெங்காய உளுந்து துவையல் பொருத்தமாக இருக்கும்.


கோதுமை மாவு குழி பணியாரம் - atta kuzipaniyaram


தேவையானவை
கோதுமை மாவு = முக்கால் டம்ளர்
இட்லி மாவு - ஒரு குழி கரண்டி
ரவை - ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று
தேங்காய் துருவ‌ல் = கால் ட‌ம்ளர்
முந்திரி - இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது
உப்பு = ஒரு சிட்டிக்கை
வெல்ல‌ம் = முக்கால் டம்ளர் (பொடித்தது)
ஏலப்பொடி = அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணை = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு

செய்முறை
வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும்.
கோதுமை மாவில் இட்லி மாவு,ரவை,முட்டை,முந்திரி,உப்பு,ஏலப்பொடி,வடித்த வெல்லம் அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும்.
கலவை கட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கலக்கி சிறிது நேரம் ஊறவக்கவும்.
குழிபணியார சட்டிய காயவைத்து கொஞ்சமாக எண்ணை விருப்பபட்டால் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
குட்டி குட்டியா பார்க்க வே அழகா இருக்கு சுட்டு வைத்தா லபக் லபக் க்குன்னு வாயில் போய் விடும்.

இது ஏற்கனவே நான் செய்த கோதுமை மாவு அப்பம் தான், இப்ப சிலபொருட்கள் சேர்த்து குழிபணியாரமா சுட்டாச்சு.

குழிபணியாரம் எனக்கு ரொம்ப பிடிச்சது ஆனால் ஓவ்வொரு முறை ஊரிலிருந்து சட்டி வாங்கி வரனும் என்று நினைத்து அதிக லக்கேஜ் காரணமா வாங்க முடியாம போய் விடும். இங்கு அதிக காசு கொடுத்து வாங்கனும்.ரொம்ப ஆசையா இருந்தா இதை தயாரித்து விட்டு என்னையில் அப்பம் போல் சுட்டு சாப்பிடுவது. இல்லை ஆச்சி செட்டி நாடில் வாங்கி சாப்பிடுவது
இந்த தடவை எப்படியோ வாங்கி வந்துவிட்டேன். நான் ஸ்டிக் என்பதால் அதிக எண்ணையும் தேவைபடல.

அறுசுவையின் சைலண்ட் ரீடர் ஜெயஸ்ரீ சவுதியில் இருக்கிறாங்க என் ரெசிபிகளை மட்டுமே பார்த்து செய்வார்கள். ரசப்பொடி, சாம்பார் பொடி , குழந்தைகளுக்கு சத்துமாவு பொடி எல்லாம் என் முறை படி தான் திரித்து வைத்து கொள்வார்கள். அவங்க முதல் பையனுக்கு இருமலுக்கு, மாமனார் ஹாட் பிராப்ளம் க்கு டயட் ரெசிபி ( எல்லாமே அறுசுவையில் கொடுத்துள்ளேன்), இரண்டாவது குழந்தை உண்டான போது ரெசிபிகள், குழந்தை பிறந்த பிறகு டிப்ஸ்கள் எல்லாம் மெயிலிலேயே கேட்டு கொள்வார்கள். இரண்டு வருடமாக பேசி கொண்டு இருக்கோம், எப்படியும் 15 நாட்களுக்கு ஒரு முறை போன் செய்வார்கள்,அவர்களிடம் தான் குழிபணியாரத்துக்கு சரியான அளவு எப்பட்டி என்று கேட்டேன். அவர்கள் சொன்ன அளவு படி இனிப்பு மற்றும் காரம் செய்து பார்த்து ரொம்ப அருமையாக வந்த்து.
மிக்க நன்றி ஜெயஸ்ரீ, போட்டோ எடுக்கல எடுத்தால் போடுகிறேன். அதற்கு பிறகு வெரைடியா என் ஐடியாவில் 7 வகை செய்து பார்த்தாச்சு எல்லாம் சூப்பர்.
இன்னும் நிறைய ஐடியா இருக்கு குழிபணியாரத்துக்கு, பள்ளிக்கும், ஆபிஸுக்கும் எடுத்து போக ரொம்ப வசதியா இருக்கு. வரும் நேரம் கிடைக்கும் போது ஒன்று ஒன்றா..

குழி பணியார மாவுக்கு
புழுங்கல் அரிசி – ஒரு ஆழாக்கு
பச்ச அரிசி – ஒரு ஆழாக்கு
உளுந்து - அரை ஆழாக்கு
வெந்தயம் – அரை தேக்கரண்டி

மாவை 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து புளிக்க வைத்து இனிப்பு மற்றும் காரவகைகளை விரும்பம் போல் சுட்டு சாப்பிடலாம்.

மைதா குழிபணியாரம், அப்பம் - Maida kuzipanyaaram


மைதா = ஒரு டம்ளர்
முட்டை = 2
உப்பு = ஒரு சிட்டிக்கை
சர்க்கரை (அ) வெல்லம் = அரை டம்ளர்
கட்டி தேங்காய் பால் = முக்கால் டம்ளர்
நெய் + எண்ணை சுட தேவையான அளவு





மைதா,முட்டை, உப்பு, ச‌ர்க்க‌ரை,தேங்காய் பால் எல்லாவ‌ற்றையும் ரொம்ப கட்டியாகவும் இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல் மீடியமாக கரைக்கவும்.






ப‌ணியார‌ ச‌ட்டியில் எல்லா குழியிலும் சிறிது நெய் க‌ல‌ந்த‌ எண்ணையை ஊற்றி மாவை ஊற்ற‌வும்.






தீயை மித‌மாக‌ வைத்து எல்லாவ‌ற்றையும் மெதுவாக‌ திருப்பிவிட‌வும்.















சுவையான‌ மைதா குழிப‌ணியார‌ம் ரெடி.

இது என் அப்ப‌ம்


கோதுமை மாவு = ஒரு டம்ளர்
முட்டை = ஒன்று
தேங்காய் துருவ‌ல் = கால் ட‌ம்ளர்
உப்பு = ஒரு சிட்டிக்கை
வெல்ல‌ம் = அரை டம்ளர் (பொடித்தது)
ஏலப்பொடி = அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணை = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு







கோதுமை மாவு, உப்பு,தேங்காய் துருவ‌ல்,ஏல‌ப்பொடி ஒன்றாக‌ க‌ல‌க்க‌வும்.
வெல்ல‌த்தை சிறிது த‌ண்ணீரில் சூடாக்கி க‌ரைத்து ம‌ண்ணில்லாம‌ல் வ‌டிக‌ட்டி சேர்த்து முட்டையும் சேர்த்து ந‌ன்கு கெட்டியாக‌ க‌ரைக‌க்வும்.


எண்ணையை சூடாக்கி, ஒரு ஒரு க‌ர‌ண்டி அள‌வு ஒன்றோடு ஒன்று ஒட்டாத‌வாறு ஊற்றி எடுத்து எண்னையை வ‌டிய‌விட்டு சாப்பிட‌வும்.
இதில் முட்டை சேருவ‌தால் ந‌ல்ல‌ பொங்கி வ‌ரும்.


முட்டை பிடிக்காத‌வ‌ர்க‌ள், வாழைப்ப‌ழ‌ம் சேர்த்து , ஒரு சிட்டிக்கை சோடாமாவும் சேர்த்து சுட்டெடுக்க‌வும். இதை தோசை ப‌த‌த்திற்கு க‌ரைத்து தோசைக‌ளாக‌வும் சுட்டெடுக்க‌லாம்.

இதில் முக்கால் டம்ளர் வெல்லம் (அ) சர்க்கரை சேர்த்தால் நல்ல இருக்கும்.
இதில் அரை டம்ளர் தான் சேர்த்துள்ளேன் இனிப்பு அதிகம் விரும்புவோர். முக்கால் டம்ளர் வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment