கொத்துமல்லி பொட்டு கடலை துவையல் - coriander roasted gram chutney
//கொத்துமல்லி கீரை எடை குறைக்கவும், உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றவும், இரத்ததை சுத்தபடுத்தவும், மெயினா கேன்சர் நோயாளிகளுக்கு இந்த சட்னி கீமோ தெரபியால் நாக்கு மறத்து போய் சுவை தெரியாமல் இருக்கும் போது இந்த துவையலை அரைத்து அவர்கள் தினம் சாப்பிட்டால் வாய்க்கு ருசிபடும். //
தேவையானவை
கொத்துமல்லி தழை - ஒரு பஞ்ச்
லெமன் - அரை பழம்
பெரிய பச்ச மிளகாய் - ஒன்று
இஞ்சி துறுவல் - கால் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் - அரை ( தேவைபட்டால்)
பொட்டு கடலை - ஒரு கை பிடி
உப்பு - கால் ஸ்பூன் (ருசிக்கு ஏற்ப கூட்டிகொள்ளவும்)
1. கொத்து மல்லி தழையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
2. சிறிது நேரம் தண்ணீரில் மூழ்க வைத்தாலே மண் அடியில் தங்கிவிடும்.
மிக்சியில் பொட்டுகடலை,பச்சமிளகாய், தேங்காய் இது முன்றையும் ஒரு திருப்பு திருப்பவும்.
3.பிறகு இஞ்சி துறுவல், லெமன் சாறு,உப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
குறிப்பு:-
தோசை, ஆப்பம், இட்லி, உப்புமா, சேமியா பிரியாணி,குழிபணியாரம் எல்லா வகையான உணவு களுக்கும் பொருந்தும்
கொத்துமல்லி புதினா காம்பு,பேரித்த பழ சட்னி
தேவையானவை
பேரித்தம் பழம் - 8
ரெயிஸின்ஸ் - 4
கொத்து மல்லி காம்பு அரை கைபிடி, புதினா காம்பு கால் கைபிடி
வினிகர் - கால் ஸ்பூன்
வருத்து திரித்த சீரகம் - அரை தேக்கரண்டி
புதினா தழை - சிறிது
புளி - கொட்டை பாக்கு அளவு
மிளகாய் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிக்கை
செய்முறை
1. பேரித்தம் பழத்தையும், ரெயிஸின்ஸையும் கால் டம்ளர் தண்ணீரில் ஊறவைக்கவும்
2.பேரித்தம் பழத்த்தின் கொட்டையை நீக்கி விட்டு மைக்ரோ வேவில் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
3.ஆறியதும் அதனுடன் புளி,மிளகாய் தூள்,உப்பு,கொத்து மல்லி புதினா காம்பு, வினிகர் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குறிப்புஇதில் கொத்துமல்லி, புதினா தழை சேர்த்து அரைப்பார்கள் நான் காம்புகளை சேர்த்து அரைத்துள்ளேன்.
சாமோசா, சோமாஸ்,எல்லா வகையான வடை பஜ்ஜி, ஸ்பிர்ங் ரோலுக்கு பொர்ந்தும்.
தி ரீ இன் ஒன் (சாசேஜ், மின்ட் துவையல்,ஹல்வா சாண்ட்விச்) Three in one
ரொம்ப சிம்பிள் ஈசியா செய்து சாப்பிடும் காலை உணவு
குட்டி பன் = முன்று
சாசேஜ் = ஒன்று
ஹல்வா = ஒரு மேசை கரண்டி
மின்ட் துவையல் = ஒரு மேசை கரண்டி
தி ரீ இன் ஒன் (சாசேஜ், மின்ட் துவையல்,ஹல்வா சான்ட்விச்)
1. சாசேஜ் போன குறீப்பில் சொன்னபடி வேகவைத்து கொள்ளவும்.
புதினா துவையல் அரைத்து கொள்ளவும்.
புதினா துவையல் அரைத்து கொள்ளவும்.
2. ஏதாவது ரெடி மேட் ஹல்வா (அ) வீட்டில் செய்த கேரட், பீட்ரூட்,தக்காளி ஹல்வா ரெடியாக வைத்து கொள்ளவும்.
3. குட்டி பன்னை இரண்டாக அரிந்து அதை சிறிது பட்டர் தடவி நான் ஸ்டிக் பேனில் லேசாக சூடு படுத்தி கொள்ளவும்.
4. ஒரு பன்னில் துவையல், மற்றொரு பன்னில் ஹல்வா, இன்னும் ஒன்றில் சாசேஜ் பொடியாக அரிந்து வருத்தது வைத்து மூடவும்.
சுவையன முன்று வகையான சான்ட்விச் ரெடி.
அவரவர் விருப்பபடி குழந்ந்தைகளுக்கு சாசேஜ், பெரியவர்கள், மின்ட் சாண்ட்விச்சும் சாப்பிடலாம்.
வெள்ளை வாயு கஞ்சி
வெள்ளை நோன்பு கஞ்சியும், பொட்டு கடலை துவையலும்..
இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலத்தில் செய்யும் பல வகை கஞ்சியில் இதுவும் ஒரு வகையாகும்.
இது வெள்ளை தேங்காய் பால் கஞ்சி, அல்சர் உள்ளவர்களுக்கு, ஜுரம் வந்தவர்களுக்கும் கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
வேகவைக்க
ரவை போல் பொடித்த அரிசி (நொய்) = அரை டம்ளர்
வருத்த பாசி பருப்பு = ஒரு மேசை கரண்டி
மிளகு = 7
சீரகம் = ஒரு தேக்கரண்டி
பூண்டு = ஐந்து பல்
உப்பு = ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம் = நான்கு
தாளிக்க
எண்ணை = ஒரு தேக்கரண்டி
நெய் = ஒரு தேக்கரண்டி
பட்டை = ஒரு சிறிய துண்டு
சின்ன வெங்காயம் = நான்கு (பொடியாக அரிந்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி
கொத்து மல்லி தழை = சிறிது
தேங்காய் பால் = அரை டம்ளர்
செய்முறை
1. அரிசி நொயையும் ,வெந்தயம், பாசி பருப்பையும் களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
2. அதில் பூண்டு, மிளகு, சீரகம்,உப்பு சேர்த்து முன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். குக்கரில் வேகவைக்கும் போது தீயின் அனலை குறைத்து வைக்கவும்.இல்லை என்றால் விசில் வரும் போது தெரிக்கும்.இது இரண்டு முன்று விசிலில் வெந்து விடும்.
3. சூடாக இருக்கும் போதே சற்று கிளறி விட்டு, ரொம்ப கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
4. தாளிக்க கொடுத்துள்ளவைகளை முதலில் தனியாக ஒரு சிறிய தாளிக்கும் சட்டியில் எண்ணை + நெய் ஊற்றி பட்டையை போட்டு வெடிக்க விட்டு சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொத்துமல்லி தழையும் தேங்காய் பாலும் சேர்த்து வெந்து வைத்துள்ள கஞ்சியில் சேர்த்து கொதிக்க விட்டு இரகக்வும்.
இதற்கு தொட்டு கொள்ள பொட்டுகடலை துவையல் ரொம்ப நல்ல இருக்கும். (அ) புதினா துவையலும் தொட்டு சாப்பிடலாம்.
பொட்டு கடலை துவையல்
தேவையான பொருட்கள்
பொட்டு கடலை = கைக்கு ஒரு கை பிடி
தேங்காய் பத்தை = இரண்டு
பச்சமிளகாய் = ஒன்று
இஞ்சி சிறிய துண்டு
வெங்காயம் = கால் துண்டு
உப்பு = ருசிக்கு தேவையான அளவு
செய்முறை
1.முதலில் தேங்காய் பத்தை + பச்சமிளகாய் பொட்டு கடலையை சேர்த்து அரைக்கவும்.
2. பாதி அரைந்ததும் இஞ்சி + வெங்காயம் + உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குறிப்பு:
நோன்பு காலத்தில் வெள்ளை கஞ்சி , மசால் வடை, பொட்டு கடலை துவையல் தொட்டு சாப்பிட இதமாக இருக்கும்.
இது நோன்பு காலத்தில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் பல வகை கஞ்சியில் இதுவும் ஒரு வகையாகும்.
இது வாயு தொல்லை, கேஸ் பிராப்ளம் உள்ளவர்கள்,வயதானவர்களுக்கு காரம் இல்லாமல் சாப்பிட கொடுக்கும் ஒரு சத்தான ஆகாரம், இதை பிரவுன் கோதுமை பர்கலிலும் செய்யலாம்.

தக்காளி சட்னி
தக்காளி இஞ்சி சட்னி
அரைக்க
நன்கு பழுத்த தக்காளி = நான்கு
இஞ்சி = ஒரு அங்குல துண்டு
கான்ச் மிளகாய் = ஒன்று
தேங்காய் துருவல் = ஒரு மேசை கரண்டி
உப்பு = சிறிது
தாளிக்க
எண்ணை = அரை தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயம் = ஒரு பின்ச்
செய்முறை
தக்காளியை பொடியாக அரிந்து, இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து அத்துடன் தக்காளி,உப்பு, காஞ்ச மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.
சுவையான தக்காளி இஞ்சி சட்னி ரெடி
குறிப்பு
இது கர்பிணி பெண்கள் வாய்க்கு ருசி படும்.தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும், செய்வதும் சுலபம்.
எல்லாவகையான தோசை அடைக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.

No comments:
Post a Comment