புளிப்பு மாம்பழ மாங்காய் தொக்கு
புளிப்பு மாம்பழ மாங்காய் தொக்கு
மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது, வாங்கி வந்தால் மாங்காய் மாம்பழம் இரண்டுமே புளிப்பு எல்லாத்தையும் தொக்க்காக செய்து விட்டேன்.. முன்று பழங்கள் இரண்டே நாளில் காலி.
தேவையானவைபுளிப்பு மாங்காய் - ஒன்று
புளிப்பு மாம்பழம் - இரண்டு
வெந்தயம் - வருத்து பொடி செய்தது அரை தேக்கரண்டி
கார மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - ஒரு மேசை கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
தாளிக்க
நல்லெண்ணை - முன்று மேசை கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - இரண்டு சிட்டிக்கை

மாங்காய், மாம்பழம் இரண்டையும் தோலிடுத்து பொடியாக நறுக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மாங்காய், மாம்பழம் இரண்டையும் சேர்த்து , வெந்தயப்பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
கடைசியாக வெல்லம் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வதக்கி இரக்கவும்.
ஆறியதும் பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.

ருசி அபாரம்.
இதில் மாம்பழ குழம்பு, மாம்பழ கேசரி போன்றவைகளூம் செய்யலாம்
இதில் மாம்பழ குழம்பு, மாம்பழ கேசரி போன்றவைகளூம் செய்யலாம்
(கர்பிணி பெண்களுக்கு மசக்கை நேரத்தில் வாய்க்கு ருசிபடும்)
உப்பு நெல்லிக்காய் மற்றும் இனிப்பு நெல்லிக்காய்
//கர்பிணி பெண்களுக்கு மசக்கையின் போது வாய்க்கு ருசி படும், கேன்சர் நோயாளிகளுக்கு கீமோ தரபி செய்ததும், வாயிக்கு எந்த ருசியுமே தெரியாது, கொமட்டலாகவே இருக்கும் அந்த சமயத்தில் இதை போட்டு அவர்களுக்கு கொடுக்கலாம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. //
உப்பு நெல்லிக்காய்
பெரிய நெல்லிக்காய் = பத்து
உப்பு = ஒரு தேக்கரண்டி
பச்சமிளகாய் = ஐந்து
நெல்லிக்காயை சைடில் கீறி விட்டு ஒரு பெரிய வாயன்ற சட்டியில் தண்ணீரை கொதிக்க விட்டு நெல்லிக்காயை போட்டு உடனே அடுப்பை அனைக்கவும்.
நெல்லிக்காயில் பச்சமிளாகாயை கீறி போட்டு, உப்பும் சேர்த்து நன்கு குலுக்கி விடவும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
உப்பு + பச்ச மிளகாய் காரம் நெல்லிக்காயில் ஏறி, சாப்பிட சூப்பரா இருக்கும்.
நெல்லிக்காய் = பத்து
சர்க்கரை = கால் கப்
தேன் = ஒரு மேசைகரண்டி
உப்பு = ஒரு சிட்டிக்கை
சர்க்கரை = கால் கப்
தேன் = ஒரு மேசைகரண்டி
உப்பு = ஒரு சிட்டிக்கை
நெல்லிக்காயை சைடில் கீறி விட்டு (அ) ஒரு ஃபோர்கை கொண்டு எல்லா பக்கமும் குத்தி விடவேண்டும்.
ஒரு பெரிய வாயன்ற சட்டியில் தண்ணீரை கொதிக்க விட்டு நெல்லிக்காயை போட்டு உடனே அடுப்பை அனைக்கவும்.
சர்க்கரையை கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிக்கை உப்பு போட்டு காய்ச்சி அதில் நெல்லிக்காயை சேர்த்து தேனையும் ஊற்றி ஊறவிட்டு சாப்பிடவும்.
கவனிக்க:
நெல்லிக்காய் உட்கொள்வது முடி உதிர்வதை தவிர்க்கும், இதை வேக வைத்து இனிப்பு ஊறுகாய்,கார ஊறுகாய் போட்டும் சாப்பிடலாம்.பொடியாக அரிந்து நெல்லிக்காய் சாதம் செய்தும் சாப்பிடலாம்.
//கர்பிணி பெண்களுக்கு மசக்கையின் போது வாய்க்கு ருசி படும், கேன்சர் நோயாளிகளுக்கு கீமோ தரபி செய்ததும், வாயிக்கு எந்த ருசியுமே தெரியாது, கொமட்டலாகவே இருக்கும் அந்த சமயத்தில் இதை போட்டு அவர்களுக்கு கொடுக்கலாம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. //
// ஜுரம் வந்து வாய் கசப்பிற்கும் இது நல்ல இருக்கும், சளி அதிமாகி ஆன்டிபயாட்டிக் எடுத்து கொள்ளும் போது அந்த மருந்து நாக்கு மறத்து போய், என்ன சாப்பிட்டாலும் ருசி தெரியாது. அப்படி உள்ளவ்ர்களும் இது சாப்பிட்டால் பலன் உண்டு இது என் அனுபவம்... //
அவசர மாங்காய் ஊறுகாய்
இதுக்கு புளிப்பும் இனிப்பும் சேர்ந்த கிளிமூக்கு மாங்காயாக இருந்தால் நல்ல இருக்கும்.
ஒரு பெரிய மாங்காய் = ஒன்று
உப்பு = தேவைக்கு
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
வெல்லம் = ஒரு சின்ன துண்டு
உப்பு = தேவைக்கு
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
வெல்லம் = ஒரு சின்ன துண்டு
வறுத்து பொடிக்க
காஞ்ச மிளகாய் = நான்கு
வெந்தயம் = கால் தேக்கரண்டி
தனியா = அரை தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை = இரண்டு மேசை கரண்டி
கடுகு = அரை தேகக்ரண்டி
காஞ்ச மிளகாய் = ஒன்று
கருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று பல்
காஞ்ச மிளகாய் = நான்கு
வெந்தயம் = கால் தேக்கரண்டி
தனியா = அரை தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை = இரண்டு மேசை கரண்டி
கடுகு = அரை தேகக்ரண்டி
காஞ்ச மிளகாய் = ஒன்று
கருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று பல்
1 . வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கொஞ்சமா எண்ணையில் வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
2. மாங்காயயை பொடியாக அரிந்து கொள்ளவும், கொட்டையை தூக்கி போட்டுவிட வேண்டாம் அதை சாம்பார் (அ) மீன் குழம்பில் போட்டு கொள்ளலாம்.
3. ஒரு வானலியில் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.
4. மாங்காயை போட்டு கிளறவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பொடித்த பொடியையும் போட்டு நன்கு பிறட்டி ஐந்து நிமிடம் வேகவிட்டு கடைசியாக வெல்லத்தை தூவி இரக்கவும்.
செய்யும் போதே நாவில் நீர் ஊற ஆரம்பித்து விடும்.
அப்படியே இரண்டு முன்று நாட்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டியது தான். கரிபிணி பெணகள் வாய்க்கு ருசிபடும், ஏன் நமக்குதான்.
குறிப்பு
வறுத்து பொடிக்க சோம்பேறி தனமா அப்படியே எண்னையில் போட்டு தாளிக்கவும், மிளகாய் தூள் ஒரு தேகக்ரண்டி, வெந்தய பொடி (அ) வெந்தயம், தாளித்தும் எண்ணையில் போட்டு விட்டு பிறகு மாங்காயை போட்டு பிறட்டவும், கலரும் சூப்பராக வரும்.
No comments:
Post a Comment