Monday, October 25, 2010


சிக்கன் பிரியாணி - chicken biriyani


தேவையானவை
பாசுமதி அரிசி – அரை கிலோ

Ø சிக்கன் - அரை கிலோ
Ø வெங்காயம் – கால் கிலோ
Ø தக்காளி – கால் கிலோ
Ø தயிர் - கால் டம்ளர்
Ø இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டரை மேசைக்கரண்டி
Ø கொத்தமல்லி - கால் கட்டு
Ø புதினா - எட்டு இதழ்
Ø பச்சை மிளகாய் - நான்கு
Ø மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி
Ø எலுமிச்சை - பாதி பழம்
Ø பட்டை - ஒரு இன்ச் அளவு ஒன்று
Ø கிராம்பு - இரண்டு
Ø ஏலம் - ஒன்று
Ø எண்ணெய் - கால் டம்ளர்
Ø நெய் - ஒரு தேக்கரண்டி
Ø உப்பு - தேவைக்கு

செய்முறை

Ø முதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

Ø எலும்புடன் சேர்ந்த சிக்கனை (அரை கிலோ) கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

Ø எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி போடவும் பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.

Ø இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

Ø தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும். சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது. தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.

Ø தக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு கிளறி தயிரையும் சேர்த்து நல்ல வேக விடவும்.

Ø மூடி போட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.Ø நல்ல வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு அரிசி உலை கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கொஞ்சமாக லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கவும்.

(அப்ப தான் சாதம் உதிரியாக வரும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.)Ø ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கீழே கொட்ட வேண்டாம்)20 நிமிடம் தம்மில் விட்டு உடையாமல் கிளறி இரக்கவும்.

பிரான் சப்ஜி சேமியா பிரியாணி - prawn vej semiya biriyani




தேவையான பொருட்கள்


இறால் = கால் கிலோ
சேமியா = கால் கிலோ
உருளை கிழங்கு = 1 (சிறியது)
கேரட் = 1 (சிறியது)
பட்டாணி = ஒரு மேசை கரண்டி
சோளம் = ஒரு மேசைகரண்டி (புரோஷன்)
பீன்ஸ் = ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ = இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் = இரண்டு
தக்காளி = இரண்டு
கொத்து மல்லி தழை = சிறிது
புதினா = சிறிது
எண்ணை = முன்று மேசைகரண்டி
நெய் (அ) டால்டா) = ஒரு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
பச்ச மிளகாய் = ஒன்று
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = ஒரு பின்ச்
உப்பு = தேவைக்கு
ப‌ட்டை = அரை அங்குல‌ அளவு
ஏல‌ம் = ஒன்று
கிராம்பு = இர‌ண்டு








செய்முறை

இறாலை சுத்தம் செய்து வயிற்றிலும்,முதுகிலும் உள்ள அழுக்கை கீறி எடுத்து விட்டு அரைதேக்கரண்டி வினிகர் ஊற்றி இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி தண்ணீரைவடித்து வைக்கவும்.






சேமியாவை நெய் (அ) டால்டா ஒரு தேக்கரண்டி சேர்த்து கரியாமல் சிவற வருத்து வைக்கவும்.

காய் க‌றிக‌ளை ந‌ன்கு க‌ழுவி அரிந்து வைக்க‌வும்.




சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு, ஏலம் போட்டு வெடிய விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு பெஸ்ட் போட்டு பச்சை வாடை போகும் வதக்கவும்.

கொத்து மல்லி, புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

தக்காளியை பொடியாக நருக்கி சேர்த்து, பச்சமிளகாயும் போட்டு தீயின் அனலை சிம்மில் வைத்து வேக விடவும்.




தக்காளி மசிந்ததும் இறால், அரிந்து வைத்திருகும் காய்கள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்


காய், ம‌ற்றும் இறால் வெந்து ந‌ல்ல‌ கூட்டு போல் எண்ணை தெளிந்து மேலே வ‌ரும், தீயை சிம்மிலேயே வைக்க‌வும்.









வெந்த‌தும் சேமியா ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்னீர் ஊற்றி கொதிக்க விட்டு சேமியாவை போட்டு அடி பிடிக்காமல் கிளறி கொஞ்சமா இருக்கும் போது அடுப்பை அனைத்து விடவேண்டும்.அந்த சூட்டிலீயே இருக்கி தம் ஆகிவிடும்.






புதினா சட்னி, நார்த்தங்காய் ஊறுகாய், இஞ்சி டீயும்.
தொட்டுக்க நல்ல இருக்கும்


குறிப்பு:



அப்படி வெளியில் கட்டி கொண்டு போவதா இருந்தால் தண்ணீர் கொஞ்சம் கூடுதல ஊற்றி கொள்ளுங்கள். இறாலை முதலே போட்டு விட்டால் ரப்பர் மாதிரி ஆகிவிடும். இறலுடன் கேரட் சேர்த்தால் சுவை அதிகம், இறால் சூடு அது கேரட் சேரும் போது ஒன்றும் ஆகாது.



இஸ்லாமிய இல்ல விஷேஷங்களில், கல்யாணங்களில் மட்டன் சேமியா பிரியாணி ரொம்ப பேமஸ் அதை இறாலில் இங்கு செய்து உள்ளேன்,

மட்டனாக இருந்தால் வேகும் நேரம் கொஞ்சம் அதிகமாகும், இதை சிகக்னிலும் செய்யலாம். காலை டிபனுக்கு முட்டையிலும் செய்யலாம்.
காய்கறிகள் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

கல்யாண பிரியாணியும், பிரியாணி வரலாறும்.



ஊருக்கு போனதும் வருசையா கல்யாணங்கள் தான், இது முதல் போனதும் வெட்டியாச்சு வாழை இலையில் உட்கார்ந்து பந்தியில் சொந்தங்களோடு உட்கார்ந்து சாப்பிடும் போது ஒரே ஆனந்தம் தான்.

இவ்வளவும் நான் சாப்பிடல சொந்தங்களை பார்த்ததே பாதி வயிறு நிறைந்து விட்டது. இது எதிரில் இருந்த இலை
மட்டன் பிரியாணி, தயிர் சட்னி, பிரெட் ஹல்வா, எண்ணை கத்திரிக்காய்.




(இது ஆசியா பிளாக்கில் இருந்து சுட்ட போட்டோ, முன்பே கல்யாணத்தில் களத்தில் எடுத்த போட்டோக்கள் எடுத்து பதிவு போட வைத்திருந்தேன், இப்ப எடுத்து எடிட் செய்ய நேரமில்லை.)


முன்பெல்லாம் களச்சாப்பாடு தான், பெரிய பெரிய தலாவில் ஐந்து நபர்கள் உட்கார்ந்து சாப்பிடுவோம்.
ரொம்ப நல்ல இருக்கும், யார் எவ்வளவு சாப்பிட்டார்கள் என்று கணக்கே தெரியாது.
நான் சின்ன வயசில் வெளியூரில் இருந்ததால் , களச்சாப்ப்ட்டில் உட்கார்ந்தால் ரொம்ப சுத்தம் பார்ப்பேன்.
கரெக்டா என்க்கு வரை பாத்தி கட்டி நடுவில் உள்ளது மட்டும் சாப்பிடூவேன், தெரியாத்தனாமா நாலு பெருசுகள் மத்தியில் மாட்டி கொண்டேன்.
அவஙக் நாலு பேரும் போட்டி போட்டு கொண்டு ரவுண்டு கட்டினார்கள் என்ன இந்த பொண்ணு சாப்பிடாம வேடிக்க்கை பார்க்குது என்று கிண்டாலாகவும் சொன்னார்கள்.
என்ன இது எல்லோரும் ஒரே தட்டில் சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியமாய் பார்த்தேன். கடைசியில் கல்யாணமாகி மாமியார் வீட்டில் , எல்லோரும் வந்தால் விசேஷங்களில் நாலு தாலா எடுத்து இரண்டு பந்தியும் சாப்பாடு களறி முடிந்துடும். அங்கு சாப்ப்பிட்டு பிறகு பழகி விட்டது. இப்ப வாழை இலையில் தான்




இங்குள்ள அரபிகளும் இப்படி தான் களச்சாப்பாடுதான். சாப்பிடுவார்கள். ஒருவீட்டுக்கு சாப்பாடு அனுப்புவதா இருந்தாலும் பெரிய தாலா(களத்தில்) தான் சாப்பாடு அனுப்புவார்கள்.
இப்படி தான் மஸ்கட் போயிருந்த போதுஅந்த வீட்டில் நான்கு பேமிலி பெரிய வில்லாவில் சேரிங் அதில் ஒரு சூடானி வீட்டில் நிறைய பேர், சமைத்து முடித்ததும் பிள்ளைகுட்டிகளோடு அவர்கள் ஒரே தாலாவில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
இது எல்லா நாடுகளிலும் தொன்று தொட்டு வருகிறது போல.
நாங்களும் எல்லா பிள்ளைகலுக்கும் ஊட்டி விடுவதா இருந்தால் பெரிய தட்டில் மொத்தமா போட்டு உருட்டி ஊட்டி விடுவோம், பிள்ளைகள்போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவார்கள்.



இது அடுத்த கல்யாணம்

மட்டன் பிரியாணி, மிட்டா கானா, தயிர் சட்னி, எண்ணை கத்திரிக்காய், சிக்கன் பிரை, ஐஸ் கிரீம்.



முன்பெல்லாம் பெரிய 10 படி தேக் ஷாவில் செய்வார்கள் இப்ப சட்டியில் செய்கிறார்கள்.





இப்படி தான் சமையனாக்கள் முன்பெல்லாம் தெருவில்வைத்து நிறைய செய்வதா இருந்தால் செய்வார்கள் , ஆட்டோவில் போற வழியில் பார்த்ததும் பையன் தான் சொன்னான் உடனே போட்டோ எடுங்க மம்மி என்று உடனே ஒரு கிளிக்

இது நான் செய்த ஸ்பெஷல் மட்டன் பிரியாணி,கேபேஜ் கேரட் மையானஸ் சாலட்.

மீன் பிரியாணி





மீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி







ஆம்பூர் மட்டன் பிரியாணி







வெஜ் பிரியாணி





மேலே உள்ள பிரியாணிகளை லேபிள் பகுதியில் பிரியாணியை கிளிக் செய்தால் வரும்
இன்னும் தொடரும் என் பிரியாணி குறிப்புகள் பல குறிப்புகள் செய்து (சிக்கன் பிரியாணி, இறால் பிரியாணி) வைத்து நேரமின்மையால் போஸ்ட் செய்ய முடியாமல் இருக்கு.



இது இஸ்லாமிய இல்ல கல்யாணத்தில் வைக்கும் மிட்டாகானா குறிப்பு பிறகு பார்க்கலாம்.










ஆனால் எனக்கு சமீபத்தில் தெரிந்த செய்தி, மும்தாஜ் முதல் முதல் ஷாஜஹான் விருந்துக்கு வ்ந்த போது அரிசியையும் கறியையும் ஒன்றாக சேர்த்து புதுவிதமான ஒரு உணவு தயாரித்து கொடுத்தார்களாம், அது தான் பிரியாணி என்று பெயர் வந்து.



பிறகு தான் நாளடைவில் பிரியாணியா மாறி ஊர் ஊருக்கு பல ருசிகளில் பிரியாணி தயாரிக்கிறார்கள். தலப்பா கட்டுபிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டி நாடு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி,எங்க ஊர் கல்யாணபிரியாணி என்று இன்னும் பல பிரியாணி வகைகள்.



பிரியாணி எப்படி வந்தது, போன பதிவுல பஜ்ஜிய பற்றி அய்யுப் மூலமா தெரிந்து கொண்டோம். பிரியாணிய பற்றி இங்கு போய் தெரிந்து கொள்ளுங்கள். பிரியாணியின் வரலாறு.

ஆம்பூர் மட்டன் பிரியாணியும் தேங்காய் தயிர் சட்னியும்


ஆம்பூர் மட்டன் பிரியாணி


சாதரணமாக வடித்து செய்யும் பிரியாணிக்கும் ஆம்பூர் பிரியாணிக்கு வித்தியாசம் இருக்கு. இது ரோட்டோர கடைகளில் பார்சல் பிரியாணிபோல் போடுவார்க்ள், மொத்தமா நிறைய வடித்து தட்ட முடியாது அதற்கு இது போல் வேகவைத்து தண்ணீர் அளந்து ஊற்றுவதால் ஈசியாக செய்து விடலாம்.





பேச்சுலர்களும் ஈசியாக செய்துடலாம்.




தேவையானவை

தரமான பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரைகிலோ
பழுத்த ரெட் பச்ச மிளகாய் - ஆறு
காஷ்மீரிசில்லி (அ) மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
கொத்துமல்லி தழை
புதினா
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை -இரண்டு
உப்பு தூள் - தேவைக்கு (சுமார் ஆறு தேக்கரண்டி)
எண்ணை - 200 மில்லி
நெய் - 50 மில்லி
லெமன் -அரைபழம்






செய்முறை

1. அரிசியை லேசாக களைந்து ஊறவைக்கவும்.

2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.

3. வாயகன்ற பாத்திரத்த காய வைத்து அதில் பட்டை ,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடியவிட்டு வெங்கயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.

4. வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.


5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.

6. அடுத்து உப்பு,மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.

7. மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வந்ததும்

8. மட்டன் கூட்டு அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தார் போல் தண்ணீர் ஊற்றவும்.
9. ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிடவும்.
10 முக்கால் பதம் வெந்ததும் கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து ,பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.


சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.













தேங்காய் தயிர் சட்னி





இதற்குதொட்டு கொள்ள இஸ்லாமிய இல்ல திருமனங்களில் முன்பு செய்யும் தேஙகாய் தயிர் பச்சடி செய்துள்ளேன்.


தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - கால் கப்
பொட்டு கடலை - ஒன்றும் பாதியுமாய் பொடித்தது இரண்டு மேசை கரண்டி
உப்பு சிறிது
பச்சமிளகாய் - இரண்டு( பொடியாக அரிந்தது)
வெங்காயம் - பெரியது ஒன்று (பொடியாக அரிந்தது)
கொத்து மல்லி தழை - சிறிது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.







டிஸ்கி: மகளிர் தினம் அன்று மண் சோறு செய்து அதில் ஒளித்து வைத்திருந்த முட்டை அதிராவிற்கு கிடைக்காமல் போகவே, ஆம்பூர் பிரியாணிக்குள் ஒளித்து வைத்துள்ள முட்டையை அதிராவிற்கு மட்டும் கொடுக்கிறேன்.

முதலில் இந்த பிரியாணிய செய்து சாப்பிடுங்கள், அடுத்து பிரெட் ஹல்வா போடுகிறேன்.

அரபிகாரர்களின் பிரியாணி(தோழிகளுக்காக)

ஒரு பழக்கடையே நடுவுல வைத்து சாப்பிடுவது இந்த அரபிகளால் தான் முடியும்.

அரபிகாரர்களின் பிரியாணி இப்படி மூட்டை முட்டையா அரிசிய கொட்டி செய்து இத செய்ற சமையன ரொம்ப (கல்யாண சமையல் சாதம் சாப்பிடும் மாய ஜால பூதம் போல இருந்தால் தான் எறி நின்றி கிளற முடியும் போல‌





இந்த கிணற்றில் எத்தனை முழு ஆட்டை இரக்கியிருப்பார்கள்.





//ப‌ழ‌ங்ககால‌த்தில் இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் பெரிய‌ த‌ட்டு தாலாவில் தான் அதை க‌ல‌ம் என்று சொல்வார்க‌ள் ஒரு க‌ள‌த்தில் ஐந்து பேர் கூட்டாக‌ உட்கார்ந்து சாப்பிடுவார்க‌ள்.
இஸ்லாமியர்கள் இப்படி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது சகோதரத்துவமும், ஒற்றுமையையும் உண்டாகும்,ரிஸுக் விஸ்திரணம் (உணவில் அபிவிருத்தி)ஏற்படும்.
இது இஸ்லாமிய‌ இல்ல‌ க‌ல்யாண‌ங்க‌ளில் 5 ந‌ப‌ர்க‌ள் ஒரு தாலா(ச‌ஹ‌ன், க‌ல‌த்தில்) உட்கார்ந்து சாப்பிடுவோம்.
சில இடங்களில் வாழையிலையிலும் சாப்பிடுவோம்//

டிஸ்கி:இது அருசுவை தோழிகள் (அதிரா, இலா, ஜீனோ,இமா, செல்வி அக்கா, கவி,ஆசியா,ஸாதிகா அக்கா,ஹுஸைன்னாம்மா, பாயிஜா,மேனகா, கீதா ஆச்சல் பீ சீரியஸ், இளமதி, உமா, சகோ.ஹைஷ் இவர்களுக்காக போட்ட பிரியாணி , வாங்க எல்லோரும் சாப்பிடலாம்.
நிறைய என்பதால் என்னால் செய்ய முடியல ஆகையால் ஆள்வைத்து சமைத்தேன் ஹா ஹா.
(இது 3 மண் சாப்பாடு , 1 மண் என்றால் 4 கிலோ)
சகோ.ஹைஷ், அதிரா இலாவிற்கு தெரியாம் இரண்டு முட்டை பிரியாணியுனுள் ஒளித்து வைத்துள்ளேன் . பார்த்து சாப்பிடுங்கள்.

"இது மகளிர் தின ஸ்பெஷல் பிரியாணி" மகளிர் தின கொண்டாட்டம்
மகளிர் தின ஸ்பெஷல் பதிவில் என்னிடம் ஏதும் ஸ்பெஷலா போடலையான்னு கேட்டவர்களும்,மற்ற தோழிகளும் இந்த விருந்தில் கலந்து கொள்ளலாம். 

பிரியாணி தம் போடும் டிப்ஸ்



பிரியாணி என்றாலே இஸ்லாமிய‌ர்க‌ளின் க‌ல்யாண‌ பிரியாணி என்றால் அனைவ‌ருக்கும் விருப்ப‌மே.

நிறைய பேருக்கு இந்த பிரியாணி தம் சந்தேகம் உண்டு இதில் சில டிப்ஸ்கள் கொடுத்து எனக்கு தெரிந்ததை விளக்கி உள்ளேன். இது அனைவருக்கும் பயன் படும் என்று நினைக்கிறேன்.


ம‌ற்ற‌ ச‌மைய‌லை விட‌ இது தான் செய்வ‌து ரொம்ப‌ சுல‌ப‌ம், ஈசியும் கூட‌.
பிரியாணிக்கு கூட்டு கிரேவி த‌யாரித்து விட்டு. கிரேவி த‌யாரிகும் போதே அரிசியை ஊற‌ போட்டு விட‌வேண்டும்.20 நிமிட‌ம் என்ப‌து போதுமான‌து, அத‌ற்கு அதிகமாக‌ ஊறினாலும் ப‌ர‌வாயில்லை. உலை கொதிக்கும் போது சீக்கிர‌த்தில் எடுத்து விட‌லாம்.
வ‌டித்து த‌ம் போட்டால் தான் ருசியான‌ பிரியாணி.

பிரியாணி செய்ய‌ தாளிக்க‌ உலை கொதிக்க‌ என்று இர‌ண்டு ச‌மமான‌ ச‌ட்டி தேவை., சின்ன‌ ச‌ட்டியில் உலை கொதிக்க‌ போட்டால் அரிசி சிக்கி பாதி வெந்து வேகாம‌ல் இருக்கும்.
த‌ண்ணீர் ந‌ன்றாக‌ கொதிக்கும் போது அரிசியை த‌ட்ட‌வேண்டும்.உட‌னே 7 லிருந்து ப‌த்து நிமிட‌த்திற்குள் முக்கால் பாக‌ம் வெந்து விடும், உட‌னே பெரிய‌ க‌ண் வ‌டிக‌ட்டியில் ஊற்றி க‌ஞ்சியை த‌னியாக‌ எடுத்து வைக்க‌னும்.


த‌ம் போடும் க‌ருவி த‌னியாக‌ விற்கிற‌து, அது கிடைக்காத‌வ‌ர்க‌ள்.

க‌ன‌மான‌ தோசைக்க‌ல்லை கேஸ் அடுப்பின் மேல் வைக்க‌லாம்.
அரிசி கொதிக்க வைக்க அதே அளவு சட்டி கிடைக்காதவர்கள்.

ஒரே அளவில் இரண்டு சட்டியில் சமமாக கொதிக்கவைத்தும் வடித்து தம் போடலாம்.
சாதம் ரொம்ப‌ வெந்த‌ பிற‌கு த‌ம் போட்டால் குழைந்து பிரியாணி க‌ளி, க‌ஞ்சியாகி விடும்.





தம் போடும் முறை (அந்த தம் கிடையாது)




கேஸ் அடுப்பில் தீயின் தனலை மிக‌ மெல்லிய‌ அள‌வில் வைத்து அத‌ன் மேல் த‌ம் போடும் க‌ருவி (அ) க‌ன‌மான‌ தோசைக‌ல்லை வைத்து அத‌ற்கு மேல் பிரியாணி ச‌ட்டியை வைத்து மூடி போட்டு வ‌டித்த‌ சுடு க‌ஞ்சியை ச‌ட்டியில் மேல் வைத்து 20 நிமிட‌ம் த‌ம்மில் விட‌வும்.

வெந்த‌தும் எடுத்து ரொம்ப‌ போட்டு கிள‌ற‌க்கூடாது. லேசாக‌ பிர‌ட்டி விட‌வேண்டும்.




இது பிரியாணி பதிவில் ரிஷி கேட்ட கேள்வி


(1. இந்த பாத்திரம் வைத்தாலும் பிரியாணி வெந்து கீழிறக்கும் வரை அடுப்பு சிம்மில் எரிய வேண்டுமா?

2. நேரடியாக அடுப்பில் வைப்பதற்கும் இந்த தம்போடும் கருவியில் வைப்பதற்கும் என்ன வித்தியாசம்? நெருப்பு நேரடியாக படாது ஆனால் சூடு மட்டும் செல்லும் என்று நினைக்கிறேன். சிலர் அகன்ற தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மேல் பிரியாணி சட்டியை வைக்க சொல்லி தம் போட சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனாலும் அப்படி செய்தால் பிரியாணி பொல பொலவென ட்ரையாக வருவதில்லை. )




1. தாளித்த கூட்டு தனியாக முதலே வைத்திருந்தால். அரிசி கொதித்து வடிக்கும் சமையத்தில் சிம்மில் வைத்து சூட்டுபடுத்தி தம்மில் ஏற்றும் போது முழுவதும் 20 நிமிடமும் தீ சிம்மில் எரிய வேண்டும்.

2. தம் போடும் கருவி அல்லது தோசை தவ்வா வைத்தால் அடிபிடிக்காது.நெருப்பு நேராக படாது.
சில‌ர் வாய‌க‌ன்ற‌ பாத்திர‌த்தில் த‌ண்ணீரை மேலே வைப்பார்க‌ள். இது த‌ண்ணீர் இல்லை வ‌டித்த‌ சூடான‌ க‌ஞ்சி. அப்ப‌டி இல்லையானால் க‌ன‌மான‌ பாத்திர‌மும் வைக்க‌லாம்.
சாதம் பொல பொலன்னு வரலை என்றால் நீங்கள் முக்கால் பதத்தில் வடிக்காமல் நல்ல வெந்து வடித்து இருப்பீர்கள்.



நிறைய சாதம் வைக்கும் போது தம் ஆகிக்கொண்டு இருக்கும் போது பாதியில் எடுத்து கிளறி பிரட்டி விட்டு மீண்டும் வைக்கவும்.
அரிசி கொதிக்க வைக்க பெரிய சட்டி இல்லாதவர்கள். கூட்டில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு தண்ணீர் வற்றும் போது இதே போல் தீயை சிம்மில் வைத்து புழுங்க விட்டு இரக்கவும்


இதே ஹைத்ராபாத் பிரியாணி ஒரு தனி வகை, அதில் வெங்காயத்தை பொரித்து போடுவார்கள், தக்காளி சேர்க்கமாட்டார்கள், தக்காளிக்கு பதில் தயிர் அதிகம் சேர்ப்பார்கள். மற்றும் வாசனை பொருள்கள் அதிகம் இருக்கும்
குக்கரில் பிரியாணி வைப்பவர்கள் குறைந்த தனலில் முன்று விசிலில் இரக்கி விடவும்.

செட்டி நாடு பிரியாணி வகைகள் மிளகு, தேங்காய் பால், மற்ற மசாலாக்களை எல்லாம் அரைத்து சேர்த்து அப்படியே தண்ணீர் அளந்து ஊற்றி செய்வார்கள்.
கீழே உள்ள லிங்கில் முன்று வகையான பிரியாணி உள்ளது அதில் குக்கர் முறையும் இருக்கு
மீன் பிரியாணி
வெஜ் பிரியாணி

சென்னையில் கல்யாணஙகளில் 10 படி தேக்ஷாவில் தான் செய்வார்கள்,அவர்கள் தம் போட நெருப்பு மூட்டி தான் பிரியாணி செய்வார்கள். அதில் கீழே நெருப்பு எல்லாம் எடுத்து தேக் ஷா மூடியின் மேல் போட்டு விடுவார்கள். மீதி நெருப்பை அடுப்பை சுற்றி போடுவார்கள், அந்த தனலிலேயே வெந்து விடும், நிறைய ஆக்கும் கல்யாண பிரியாணியின் ருசிக்கு ஈடு இனை எதுவுமே இல்லை.

மீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி

பாசுமதி அரிசி - ஒரு கிலோ ( ஐந்து டம்ளர் , 5 ஆழாக்கு)
மட்டன் - முக்கால் கிலோ
உருளை 150, கேரட் 100, பீன்ஸ் 50, - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ (நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்)
தக்காளி - அரை கிலோ (நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்)
தயிர் - 175 மில்லி (முக்கால் டம்ளர்)
எண்ணை - 225 மில்லி (ஒன்னே கால் டம்ளர்
நெய் - முன்று தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - அரை கட்டு
புதினா - கால் கட்டு
பச்ச மிளகாய் - ஆறு (இரண்டாக ஒடித்து கொள்ளவும்)








ரெடி கலர் பொடி - கால் தேக்கரண்டி
எலுமிச்சை - ஒரு பழம்
பட்டை - இரண்டு அங்குலம் ஒன்று
கிராம்பு - நான்கு
ஏலம் - முன்று
பிரிஞ்சி இலை - இரண்டு
ஷா ஜீரா - ஒரு தேக்கரண்டி


இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து மேசை கரண்டி குவியலாக
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு






செய்முறை



1. தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைக்கவும்.
2. சட்டியை காயவைத்து எண்ணையை அளந்து ஊற்றவும்.பட்டை, பிரிஞ்சி இலை, ஷா ஜீரா, ஏலம் கிராம்பு எல்லாம் போட்டு வெடிய விடவும்.
3.நீளமாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் சுருண்டவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி நன்கு வாடை போய் கலர் மாறும் வரை வதக்கனும், இல்லை சிம்மில் கூட ஐந்து நிமிடம் வைக்கலாம்.
5.அடுத்து கொத்து மல்லி தழை புதினாவை போட்டு வதக்கி ஒரு நிமிடம் விடவும்.
6.தக்காளி அரிந்து போட்டு , பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.
7.தக்காளியை மூடி போட்டு நன்கு மடங்க விட வேண்டும்.







8.அடுத்து மட்டனை போட்டு வதக்கவும்.







9.. மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் போட்டு நன்கு வதக்கி ஐந்து நிமிடம் விடவும்.


10.அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்








11. அடுத்து கேரட்,உருளை, பட்டானியை சேர்த்து வதக்கவும்.








12.பிறகு தயிரை கலக்கி சேர்க்கவும்.
13. பாதி எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
14. கிளறி மூடி போட்டு நன்கு கூட்டு கிரிப்பாகி மட்டன், காய்களை வேக விடவும்










16.நல்ல தீயை குறைத்து வைத்து 20 நிமிடம் வேக விடவும். இடையில் இரு முறை எடுத்து கிளறி விடவும்.



17. இப்போது பிரியாணி கூட்டு ரெடி எண்ணை மேலே தெளிந்து வரும். எவ்வளவுக்கு எவ்வள்வு சிம்மில் வைத்து செய்கிறீர்கலோ அவ்வள்வு அடி பிடிக்காம இருக்கும்.






ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் முக்கால் பாக தண்ணீர் வைத்து கொதிக்க விட்டு அதில் சிறிது கொத்துமல்லி புதினாவை போடவும்.கொதி வந்ததும் அரிசியை அரிசியை தட்டி உப்பு சேர்த்து கிளறி விடவும்.
19. முக்கால் பாகம் வெந்ததும் அடுப்பை அனைக்கவும்.
20.ஒரு பெரிய கண் வடிகட்டியில் அரிசியை வடிக்கவும்.








22.அடுப்பை ஏற்றி தீயை சிம்மில் வைத்து அதன் மேல் தம் போடும் கருவியை வைக்கவும்.
23.இப்போது மட்டன் கூட்டு உள்ள சட்டியை ஏற்றி அதில் வடித்த அரிசியை தட்டவும்.
24.லேசாக பிறட்டி விடவும்.
25.அரை பழ எலுமிச்சை சாற்றில் சிறிது ரெட் கலர் பொடி, மற்றும் கால் டம்ளர் வடித்த சூடான கஞ்சியை சேர்த்து சாதத்தின் மேல் வட்ட வடிவமாக ஊற்றவும்.
26.மூடி போட்டு வடித்த சூடான கஞ்சியை அதன் மேல் ஏற்றி 20 நிமிடம் தம்மில் விடவும்.












27.நன்கு அடியில் இருந்து மேல் வரை சாதத்தை மிலாய்க்கவும்(பிறட்டவும்).
28 சுவையான பிரியாணி ரெடி.
29.சுவையாண மீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி ரெ







குறிப்பு:


இது மீலாது விஷாவில் (நபிகள் பிறந்த நாளையொட்டி) முன்பு 20 வருடம் முன் இப்ப ஓதுகிறார்களா இல்லையான்னு தெரியல.ஒவ்வொரு தெருவில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து மவுலூது ஓதி (அவர் புகழ் பாடி) எல்லோருக்கும் ஒரு தொன்னையில் விளம்புவர்கள். அப்போது சாப்பிட்ட‌ பிரியாணி இந்த டேஸ்டில் தான் இருக்கும்.
இது சாதராணமா அடிக்கடி வீட்டில் செய்வது தான்,அப்போது சாப்பிட்ட‌ பிரியாணி இந்த டேஸ்டில் தான் இருக்கும். ஆகையால் இதில் மீலாது ஸ்பெஷ‌ல் பிரியாணி என்று கொடுத்துள்ளேன். இதை ஏற்க‌ன‌வே போன‌ வ‌ருட‌ம் த‌மிழ் குடும்ப‌த்திலும் கொடுத்துள்ளேன்.


இது இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கும் பல வகை பிரியாணியில் இதுவும் ஒரு வகை, இது வடித்து தம் போடுவது.
அதே அளவு சட்டி இல்லாதவர்கள் அரிசி ஒரு பங்கிற்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்கவிட்டு அரிசியை அப்படியே அதில் சேர்த்து இதே போல் தம் போடவும்.
இதை சிக்கனிலும் செய்யலாம், சிக்கனில் செய்யும் போது ரொம்ப நேரம் வேகவிடதேவையில்லை இல்லை என்றால் கரைந்து எலும்பு தான் தேரும். இதற்கு அரைகிலோ மட்டன் கூட போதுமானது.
இதற்கு தொட்டு கொள்ள தால்சா கட்டியாக செய்தது, எண்ணை கத்திரிக்காய், தயிர் சட்னி,போன்றவை ஆகும்.
அதில் செய்யும் ஸ்வீட் மிட்டாகானா (அ) கேசரி) வீட்டில் நாம் நமக்கு பிடித்த தக்காளி ஹல்வா, கேரட் ஹல்வா,பீட்ரூட் ஹல்வா, பீர்னி, ஷீர் குருமா,இதில் ஏதாவது ஒன்றை செய்து கொள்ளலாம்
 
 
 
 

No comments:

Post a Comment