Thursday, December 9, 2010

ருத்திராட்சை அணிந்தால் பாவம் தணியுமா?


ருத்திராட்சை அணிந்தால் பாவம் தணியும் என்று ஓர் நம்பிக்கை உண்டு. இறை நம்பிக்கையின் பாகமாகவும் இறைவன் அருகாமைக்காகவும் ருத்திராட்சம் சிலர் அணிகின்றனர். விதிப்படி ருத்திராட்சை அணிந்தால் பாவம் நீங்கும் என்றும் இறைவன் அருகாமையுண்டாகும் என்று நம்பியிருக்கின்றனர். கழுத்தில் முப்பத்திரண்டு,சிரசில் நாற்பது காதில் ஆறுவீதம், கைகளில் பன்னிரண்டு வீதம்,புஜத்தில் பதினாறுவீதம் சிகயில் ஒன்று, விருக்ஷஸ்தானத்தில் நூற்றிஎட்டு என்ற கணக்கில் ருத்திராட்சம் அணிந்தால் அது பரமேஸ்வரனேயாகும் என்று நாரதரிடம் நாராயண மகரிஷி வெளிப்படுத்தும் ஒரு பாகம் தேவி பாகத்தில் இடம் பெற்றுள்ளது. விதிப்படியல்லா விட்டாலும் ருத்திராட்சம் அணியும் நபர்கள் அனேகம் பேர் இன்றைய காலத்திலும் காணலாம். சிலர் தங்கம் அல்லது வெள்ளியால் ருத்திராட்சத்தை கட்டுவதுண்டு. சிலர் நூலில் கோத்தும் ருத்திராட்சை அணிகின்றனர். விதிப்படியல்லாமல் ருத்திராட்சை அணிவதனால் சில தீங்குகள் வரலாம் என்று ஆசாரியர் வெளிப்படுத்துகின்றனர். ருத்திராட்சை அணிகின்றவர்கள் உணவு விஷயத்திலும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கின்றனர். ருத்திராட்சம் அணிந்திருப்பவர்கள் அசைவ உணவுகள் அருந்தக் கூடாது. போதைப் பொருட்கள் மதுபானம் முதலியவையும் பயன்படுத்தலாகாது. சிவப்பு வெங்காயம், வெள்ளைப்பூண்டு,முருங்கைக்காய் முதலியவையும் அருந்துவதில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைவன் அருகாமை கிடைக்கப் பெறும் என்று மத நம்பிக்கை கூறும் போது, மருத்துவ குணங்களைப் பெறலாம் என்று மருத்துவத் துறை உறுதியளிக்கின்றது. எந்தநிலையிலும் ருத்திராட்சம் அணியத் தொடங்கலாம் என்றாலும், கிரகணம்,விஷீசம் கிரமம்,உத்தராயனம்,தக்ஷிணாயனம் என்ற நாட்களில் ருத்திராட்சம் அணிந்தால் சக்ல பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்குமாம். ருத்திராட்சையின் மகிமையைப்பற்றி பத்மபுராணத்தில் வியாசர் விவரித்துள்ளதைக் காணலாம். ருத்திராட்சை எவரும் அணியலாம் என்றும் அணிந்தாலே பாவங்கள் அழிந்து விடும் என்பதே. தொட்டால் சுவர்க்கம் கிடைக்கும், அணிந்தால் மோட்சம் கைகூடும் என்று வியாசர் கூறியுள்ளார். சிரசு,உரசு,புஜம் என்பவற்றில் ருத்திராட்சை அணிந்தால் சிவனுக்கு சமமாக மாறலாம் என்றும் எல்லா முயற்சிகளும் சாதனைகளாக்கலாம் என்றும்,அவர்வசிக்கும் பிரதேசமே புண்ணிய பூமியாகுமென்றும் கூறுகின்றார். புராணங்கள் எடுத்துரைப்பதற்கு மேல் மருத்துவத்துறை இதன் நற்குணங்களை மிகவும் புகழ்கின்றது. ருத்திராட்சை கழுத்திலணிவதால் புற்று நோய் முதலிய நோய்கள் கூட தணியும் என்று அண்மையில் வெளிவந்துள்ள சில ஆராய்ச்சிக்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம்,தாகம் விக்கல் போன்றவை மாறுவதற்கு ருத்திராட்சை நல்லது என்று ஆயுர் வேதம் உறுதிகூறுகின்றது. கபம்,வாதம்,தலைவலி முதலிய பல நோய்களுக்கும் துன்பங்களுக்கும் ருத்திராட்சம் மருந்தாகும் என்று ஆயுர் வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தியடையச் செய்யும் என்று ருத்திராட்சையைச் சிறப்பித்து நிரூபித்திள்ளனர். இது சில மன நோய்களுக்கும் சாந்தமளிக்கும் என்று கண்டுள்ளனர். மேலும் பல மருந்துகளிலும் ருத்திராட்சை ஒரு சேர்வைப் பொருளாகும். ருத்திராட்சம் வறுத்து நாவில் பூசினால் பேச்சுத்திறனை மறுபடியும் பெற்றுள்ளதாக பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கின்றோம். ருத்திராட்சை பசுவின் சிறுநீர்,துளசிநீர்,இளநீர்,பிரம்மி என்பவை சேர்த்து பிரம்ம முகூர்த்தத்தில் அருந்துவது புத்தி விருத்தியடைய உதவும் எனக் கண்டறிந்துள்ளனர். கண்டகாரி, திப்பலி என்பவையுடன் ருத்திராட்சை சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். பார்க்கப் போனால் ருத்திராட்சையின் ஒளடத குணங்கள் ஏராளம் ஏராளம்.இதுதான் ருத்திராட்சை அணிவதிலும் நம் முன்னோர்கள் மிகமுக்கியத்துவம் அளித்திருந்தனர்.

No comments:

Post a Comment