பெரியவர்கள் சொல்லும் நெல்லிக் கனியும் முதல் கசப்பாகவும் பின்னர் இனிப்பாகவும் இருக்கும் என்பது மூதுரை. எல்லா நோய்களுக்கும் நிவாரணமளிக்கும் நெலிக்கனியின் நற்குணங்கள் பற்பல. பண்டைக்கால பாரதமக்களின் அன்றாட வாழ்கையின் பாகமாயிருந்தது நெல்லிக்கனியும் அதன் மருத்துவ குணங்களும் கிராமப் பகுதிகளிலும், காட்டுப் பிரதேசங்களிலும் நெல்லி மரங்கள் கனியை மென்று திரிவதை எப்போதும் காணலாம். மெல்லத் தொடங்கும் போது கசப்பும், பின்னர் தித்திப்பும் கலந்த ஒரு தனிப்பட்ட ருசியுடையது இக்கனி நெல்லியின் இந்த தன்மையிலிருந்து உண்டான மூதுரைக்குப்பின் சில உண்மைகள் அடங்கியுள்ளன. நெல்லிக் கனியில் அடங்கியுள்ள 'காலெய்ட்கள்'மற்றும் 'பானெய்ட்' கள் என்ற கூட்டுப் பொருட்கள் நமது நாவின் ருசிமையங்களில் நிறைகின்றன. இந்த மையம் சிறிது நேரத்துக்கு இந்த கூட்டுப் பொருட்களால் உணர்வற்ற நிலையில் இருக்கும். அப்போது கசப்பு அனுபவப்படுகின்றது. சிறிது நேரத்துக்குள் ருசிமையத்திலிருந்து இந்த கூட்டுப் பொருட்கள் அகன்று விட்டதும் நெல்லிக் கனியின் சர்க்கரை அம்சத்தின் ருசி நாம் அனுபவிக்கின்றோம். எனவே நெல்லிக்கனி முதலாவது கசப்பாக இருந்தாலும் பின் தித்திப்புடன் நம் உடலுக்கு மருத்துவ குணங்களையும் செலுத்துகின்றது என்ற நவீன மருத்துவமும் அங்கீகரிக்கின்றது.
No comments:
Post a Comment