புதிய வீடுகள் காங்க்ரீட் சிற்பங்களாக நாம் உயர்த்திக் கட்டும் இக்காலத்தில் தெற்கினி ஏது? ஆனாலும் வீட்டின் தெற்கினி உயர்ந்து நிற்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. தெற்கினி என்றால் வீட்டின் தெற்குப் பாதத்திலுள்ள கட்டு. ஏன் இந்தப் பாகத்தை மட்டும் உயர்த்திக் கட்ட வேண்டும் என்று ஒரு நியாயமான கேள்வி எழலாம். இதன் பதில் மிக சுலபமானது.வீட்டின் வேறுபக்கங்களில் தெற்கு வெயிலின் தீமையான ஈடுபாடு இல்லை. தெற்குப்பாகத்தில் உள்ள கட்டை உயர்த்தி எழுப்புவது தெற்கு வெயிலிலிருந்து வீட்டைப் பாதுகாப்பதற்காகவே. சரிவுள்ள மேல் கூரைகளும் வெயிலிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன. அதற்காகவே பழைய வீடுகளில் சாய்ந்திறங்கும் மேல் கூரைகள் அமைத்தனர்.
No comments:
Post a Comment