Thursday, December 9, 2010

தும்பை இருந்தால் வாழக்கை தும்பைப்பூ போலாகுமா?


வீட்டுவளாகத்தில் தும்பைச் செடி உண்டானால் தும்பைப் பூ போல் வெண்மையான சிரிப்புடன் வாழலாம் என்பதே இந்த கூற்றின் பொருள். தும்பைப் பூ போன்ற நிலா,தும்பைப் பூ போன்ற சோறு, போன்ற உவமானங்கள் நம் மனதில் என்றும் நிறைந்திருப்பவை. பண்டிகைக் காலங்களில் தெற்றி தும்பை முதலிய பூக்களின் மனதைக் கவரும் காட்சிகள். நம்மைவிட்டு நீங்குவதில்லை. மலையாளிகளின் ஓணம் பண்டிகையில் வீட்டு முற்றங்களின் சந்தன தரைகளில் ஒளியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் தும்பைப் பூவின் வசீகரமும் தூய்மையும் கவிஞர்கள் மனதையும் தூண்டிவிடுவதுண்டு. தும்பைச்செடியின் அற்புதமான மருத்துவகுணத்தை ஆயுர்வேத நூல்கள் சிறப்பித்துள்ளன. எந்த இயந்திரமயமான காலத்தில் வாழ்ந்தாலும் கிராமத்தின் சுத்தமும், மணமும்,சிறிதளவு கொன்னைப் பூவும் தும்பைப்பூவின் மணமும் மனதில் இருக்க வேண்டும் என்று மலையாளக் கவிஞர் வைலோப்பள்ளி பாடியுள்ளார். ஹைடெக்யுகத்தில் விரைவான உயர்ச்சியில் வேறுபட்டு நின்று போகும் கிராமத்துத் தனிமையை நிலை திறுத்தாவிட்டால் அது மனித வம்சத்தையே வேறுபடுத்தக் காரணமாகும். குழந்தைகளின் குடலில் புழுக்களால் உண்டாகும் நோயுற்ற நிலைக்கும் ஜீரணத்துக்கும் தும்பை பயனளிக்கும் மூர்ச்சை,ஜீரம்,ஜன்னி முதலான நோய்களுக்கு நிவாரணமாகக் கொடுக்கும் கோரோசனை மாத்திரையில் தும்பைப் பூ சேர்க்கப் பட்டுள்ளது. கண்ணில் ஏற்படும் சிறுகாயங்களுக்கு தும்பைப் பூவின் சாறெடுத்து கண்ணில் விடுவது நல்லது.தும்பைச் செடியை வேரோடு பிடுங்கி எடுத்து கழுவி சுத்தம் செய்து சிதைத்துச் சாறெத்து அயமோதகம் சேர்த்து வெயிலில் உலர வைத்து இடித்து பொடியாக்கி பரணியில் வைத்து, அதை மூன்று கிராம் வீதம் வயிறு சம்பந்தமான எந்த நோயிலிருந்தும் முழுநிவாரணம் பொறலாம். மகப் பேறுக்குப்பின் அளிக்கும் சிகிட்சையிலும் தும்பைக்கு மிக முக்கிய பங்குண்டு. இயற்கை சிகிட்சை அளிப்பவர்களும், தாய்மாரும் அனேகம் நோய்களுக்கு ஒற்றை மூலிகையாகத் தும்பையை உபயோகிக்கின்றனர். கிருமியின் பாதிப்பால் குழந்தைகளுக்கு வரும் வாந்தி முதலியவைக்கு தும்பைப் பூவும் இலையும் சிதைத்த சாறில் பால்காயம் அரைத்து கொடுப்பது நல்லது. பண்டைக் காலம் முதல் தும்பையின் மென்மையும் தூய்மையும் புரிந்து கொண்டிருந்ததனால் 'தும்பை இருந்தால் வாழ்க்கையும் தும்பைப்பூ போலிருக்கும்' என்று கூறிவந்தனர்.

No comments:

Post a Comment