Thursday, December 9, 2010

அக்னிக் கோணில் சமயற்கட்டு அமைக்கலாமா?


இன்றும் வீடு கட்டும் போது பெரியவர்கள் அக்னி மூலையில் சமயற்கடு அமைக்கலாகாது'என்று அவ்வாறு அமைத்தால் வீடுக்கு தீ பிடிக்கும் என்பதே நம்பிக்கை. தீ பிடிக்கும் சாத்தியம் அதிகம் உண்டு என்பதாலே அக்னிக் கோணில் சமயற்கட்டு கட்டக்கூடாதுதென்று விதித்துள்ளனர். அஷ்டதிக்குகள் அதாவது எட்டுதிசைகளில் ஒவ்வொன்றுக்கும் காவல் காரராக ஒவ்வொரு தேவதை உண்டென்பது நம்பிக்கை. அப்படி தென் மேற்கு திசையான அக்னிக் கோணின் அதிபதியாகக் கணக்கிடுவது அக்னி தேவன் ஆகும். அக்னிக் கோணில் சமயற்கட்டு அமைத்தால் பருவமழைக் காற்றினால் அக்னிக் கோணில் அமைத்த சமயற்கட்டிலிருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. அதனால் ஓலையால் கட்டிய கூரைகளுள்ள வீடுகள் இதனால் தீ பிடிக்கும் சாத்தியம் உண்டல்லவா. இப்போதுள்ள வீடுகள் கான் கீரீட் என்றும், சமயலுக்கு விறகு அல்ல வாயு என்றும் கூறி தேற்றிக் கொள்ள வேண்டாம். சமயல் வாயு ஆனாலும் அதில் கசிவு உண்டானால் அக்னிக் கோணிலுள்ள சமயற்கட்டில் தென்மேற்குக் காற்றடித்தால் தீ பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அக்னிக்கோணில் சமயற்கட்டமைத்தால் தீ பற்றிக் கொள்ளும் என்பதற்கு இதுவே காரணம். மேலும் சமயற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது கிழக்கு வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

No comments:

Post a Comment