Thursday, December 9, 2010

நீண்ட கூந்தலுடைய குழந்தைக்கு வளர்ச்சி குறையுமா?


நீண்ட கூந்தல் அழகின் அறிகுறி என்று பெண்கள் கருதுகின்றனர். கூந்தலைப் பராமரிப்பதற்காக ஏராளம் பணமும் செலவிடுகின்றனர். நவீன காலத்துப் பெண்கள். பண்டைய சரித்திர புராணப் பெண்களுடைய சித்திரங்கள் பார்த்தாலும் நீண்ட கூந்தலை எடுத்துக் காட்டுவதாகக் காணலாம். ஆனால் நீண்ட கூந்தலுடைய பெண் குழந்தைக்கு வளர்ச்சி குறைவு என்றொரு நம்பிக்கை நிலைத்துள்ளது.ஆண் குழந்தைகள் விஷயத்திலும் இந்நம்பிக்கை உண்டு. உடலின் வளர்ச்சியை விருத்தி செய்வதற்கு நீண்டு வளரும் கூந்தலை கத்தரித்து விடும் சில மக்கள் பகுதிகளும் பாரதத்திலுண்டு. எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் முடியில் மையப்படுத்தியிருப்பதனால் நீண்ட கூந்தலுடைய சில பெண் குழந்தைகளில் வளர்ச்சி குன்றியிருப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment