Tuesday, September 28, 2010

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 10 நாட்கள் கழித்து டிசம்பர் 16 1992ல் இடிப்பு குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அப்போது பஞ்சாப் மற்றும் சண்டிகர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்படுவதாக மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்பாலே வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் ஆணையம் அறிக்கையை சமர்பிக்க வேண்டுமென இந்த அறிவிக்கையில் கூறப்பட்டது. பின்வருபவற்றை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ரிபரான் ஆணையத்திற்கு பணிக்கப்பட்டது. ­ 1. டிசம்பர் 6 1992ல் அயோத்தியில் ராமஜென்மபுமி-பாபரி மஸ்ஜித் வளாகத்தில் கட்டடம் இடிக்கப்படுவதற்கு வழிவகுத்த சம்பவங்களும் சூழல்களும் நிகழ்வுகளும் யாவை? 2. ராமஜென்மபூமி-பாபரி மஸ்ஜித் கட்டடம் இடிக்கப்படுவதில் உத்தரபிரதேச முதல்வர், அமைச்சர்கள் அதிகாரிகள் தனி மனிதர்கள் தொடர்புடைய அமைப்புகள் ஆற்றிய பங்கு? 3. ராமஜென்மபூமி-பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு மற்றும் ஏனைய ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் யாவை? 4. டிசம்பர் 6 1992ல் செய்தியாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவை என்ன? 5. இந்த விசாரணைக்கு தொடர்பான ஏனைய விவரங்கள்? தனது விசாரணைக்கான வரம்புகளாக மேலே கூறப்பட்டுள்ளவற்றை தெரிவிக்கும் நீதிபதி ரிபரான் தனது அறிக்கையை தொடங்குவதற்கு முன்பு பின்வருமாறு குறிப்பிடுகிறார்: அயோத்தியில் டிசம்பர் 6 அன்று இருந்த கட்டடம் ஒரு ஹிந்து கோயிலா அல்லது பள்ளிவாசலா அல்லது வேறு எதாவது கட்டடமா என்று விசாரித்து கூறுமாறு எனக்கு பணிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தாலும் தனது விசாரணை வரம்பிற்கு அப்பால் சென்று தனது அறிக்கையில் சில தவறான தகவல்களை நீதிபதி ரிபரான் அளித்துள்ளார். அவரது அறிக்கையின் இரண்டாம் அத்தியாயம் அயோத்தியும் அதன் பூகோள அமைப்பும் என்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர் சொல்லும் கருத்துகளை ஆய்வு செய்வோம். லிபரான் தனது அறிக்கையில் அயோத்தி பற்றி குறிப்பிடும் போது: அயோத்தி ராமர் பிறந்த நகரம். அயோத்தி மற்றும் அதன் கலாச்சரம் குறித்து ஏராளமான ஆய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ராமயணத்திலேயே அயோத்தி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதால் ஹிந்துக்களின் பார்வையில் அது முக்கிய நகரமாக அமைந்துள்ளது. பழங்கால அயோத்தி ஹிந்து வாழ்வு மற்றும் கலாச்சாரத்தின் மையமாக அமைந்திருந்தது. ஒரு பல் சமய சமூகம் நல்ரிணக்கத்துடன் வாழ்ந்த நகரமாக அது அமைந்திருந்தது. தமது நம்பிக்கைகளுக்கு ஏற்ப வழிபாடுகளை நடத்துவதற்கு அங்கு சுதந்திரம் இருந்தது. கோயில் இயக்கவாதிகளின் கூற்றுபடி பாபரின் உத்தரவின் படி மீர் பாகி ராமர் கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசலை கட்டினார். அயோத்தி அவ்த் மாகாணத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. வகுப்பு மற்றும் மத மோதல்கள் இல்லாமல் அவ்த் மாகாணம் அமைதியாக இருந்தது. இதே போல் தான் அயோத்தியும் அமைந்திருந்தது. ராமபக்தரகளுக்கு மிக முக்கிய நகரமாக அயோத்தி விளங்குகின்றது. ஹிந்துக்களுக்கு மிக முக்கிய யாத்திரக நகரமாக விளங்குகின்றது. அயோத்தியில் டிசம்பர 6 அன்று இடிக்கப்பட்ட கட்டடம் பள்ளிவாசலா அல்லது கோயிலா அல்லது வேறு ஒரு கட்டடமா என்று விசாரிக்கும் பொறுப்பு தனக்கு அளிக்கப்படவில்லை என்று கூறும் நீதிபதி ரிபரான் பண்டைய அயோத்தி பற்றி ஒரு தலைபட்சமான வரலாற்றை அளித்துள்ளார். அவரது அறிக்கையில் சொல்லப்படாத பண்டைய அயோத்தி வரலாற்றை நாம் பாரப்போம். முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் அவரகளின் புதல்வரும் வரலாற்று பேராசிரியருமான சர்வப்பள்ளி கோபால் அவர்களும் 24 வரலாற்று அறிஞர்களும் அயோத்தியின் பண்டைய வரலாற்றைப் பற்றி பின்வருமாறு விவரிக்கிறாரகள்: ராம கதை தான் ராமரின் கதையைக் கூறும் மூலமாகும். இந்த ராம கதை இப்போது நமக்குக் கிடைப்பதில்லை. இந்த மூலக் கதையை ஒரு நீண்ட காவியமாக மீண்டும் எழுதினார் வால்மீகி. இது ஒரு காவியமாக இருப்பதால் இதில் வரும் பாத்திரங்கள் இடங்கள் உட்பட சம்பவங்களில் பெரும்பாலனவை கற்பனையாகத்தான் இருக்க முடியும். ஏற்றுக் கொள்ளத் தக்க சரித்திர ஆதாரங்களால் நிரூபிக்கப்படும் வரை இதில் வரும் கதாபாத்திரங்களையும் இடங்களையும் நிகழ்ச்சிகளையும் சரித்திரத்தின பார்வையில் ஆதாரப்புர்வமானது என்று வரலாற்று ஆய்வாளரகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் ஐதீகங்கள் பெரும்பாலும் வரலாற்று ஆதாரங்களுக்கு முரணாகவே இருக்கின்றன. நீதிபதி ரிபரானின் அயோத்தி வரலாறு தவறானது என்பதற்கு எடுத்துக்காட்டாக மேலும் இந்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவதை அடுத்த இதழில் பாரப்போம். (இன்ஷா அல்லாஹ்) தொடரும்......

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 10 நாட்கள் கழித்து டிசம்பர் 16 1992ல் இடிப்பு குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அப்போது பஞ்சாப் மற்றும் சண்டிகர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்படுவதாக மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்பாலே வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் ஆணையம் அறிக்கையை சமர்பிக்க வேண்டுமென இந்த அறிவிக்கையில் கூறப்பட்டது. பின்வருபவற்றை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ரிபரான் ஆணையத்திற்கு பணிக்கப்பட்டது. ­

1. டிசம்பர்  6 1992ல் அயோத்தியில் ராமஜென்மபுமி-பாபரி மஸ்ஜித் வளாகத்தில் கட்டடம் இடிக்கப்படுவதற்கு வழிவகுத்த சம்பவங்களும் சூழல்களும் நிகழ்வுகளும் யாவை?

2. ராமஜென்மபூமி-பாபரி மஸ்ஜித் கட்டடம் இடிக்கப்படுவதில் உத்தரபிரதேச முதல்வர், அமைச்சர்கள் அதிகாரிகள் தனி மனிதர்கள் தொடர்புடைய அமைப்புகள் ஆற்றிய பங்கு?

3. ராமஜென்மபூமி-பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு மற்றும் ஏனைய ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் யாவை?

4. டிசம்பர்  6 1992ல் செய்தியாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவை என்ன?

5. இந்த விசாரணைக்கு தொடர்பான ஏனைய விவரங்கள்?

தனது விசாரணைக்கான வரம்புகளாக மேலே கூறப்பட்டுள்ளவற்றை தெரிவிக்கும் நீதிபதி ரிபரான் தனது அறிக்கையை தொடங்குவதற்கு முன்பு பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

அயோத்தியில் டிசம்பர் 6 அன்று இருந்த கட்டடம் ஒரு ஹிந்து கோயிலா அல்லது பள்ளிவாசலா அல்லது வேறு எதாவது கட்டடமா என்று விசாரித்து கூறுமாறு எனக்கு பணிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தாலும் தனது விசாரணை வரம்பிற்கு அப்பால் சென்று தனது அறிக்கையில் சில தவறான தகவல்களை நீதிபதி ரிபரான் அளித்துள்ளார். அவரது அறிக்கையின் இரண்டாம் அத்தியாயம் அயோத்தியும் அதன் பூகோள அமைப்பும் என்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர் சொல்லும் கருத்துகளை ஆய்வு செய்வோம்.

லிபரான் தனது அறிக்கையில் அயோத்தி பற்றி குறிப்பிடும் போது:

அயோத்தி ராமர் பிறந்த நகரம். அயோத்தி மற்றும் அதன் கலாச்சரம் குறித்து ஏராளமான ஆய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ராமயணத்திலேயே அயோத்தி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதால் ஹிந்துக்களின் பார்வையில் அது முக்கிய நகரமாக அமைந்துள்ளது. பழங்கால அயோத்தி ஹிந்து வாழ்வு மற்றும் கலாச்சாரத்தின் மையமாக அமைந்திருந்தது. ஒரு பல் சமய சமூகம் நல்ரிணக்கத்துடன் வாழ்ந்த நகரமாக அது அமைந்திருந்தது. தமது நம்பிக்கைகளுக்கு ஏற்ப வழிபாடுகளை நடத்துவதற்கு அங்கு சுதந்திரம் இருந்தது. கோயில் இயக்கவாதிகளின் கூற்றுபடி பாபரின் உத்தரவின் படி மீர் பாகி ராமர் கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசலை கட்டினார். அயோத்தி அவ்த் மாகாணத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. வகுப்பு மற்றும் மத மோதல்கள் இல்லாமல் அவ்த் மாகாணம் அமைதியாக இருந்தது. இதே போல் தான் அயோத்தியும் அமைந்திருந்தது. ராமபக்தரகளுக்கு மிக முக்கிய நகரமாக அயோத்தி விளங்குகின்றது. ஹிந்துக்களுக்கு மிக முக்கிய யாத்திரக நகரமாக விளங்குகின்றது.

அயோத்தியில் டிசம்பர 6 அன்று இடிக்கப்பட்ட கட்டடம் பள்ளிவாசலா அல்லது கோயிலா அல்லது வேறு ஒரு கட்டடமா என்று விசாரிக்கும் பொறுப்பு தனக்கு அளிக்கப்படவில்லை என்று கூறும் நீதிபதி ரிபரான் பண்டைய அயோத்தி பற்றி ஒரு தலைபட்சமான வரலாற்றை அளித்துள்ளார். அவரது அறிக்கையில் சொல்லப்படாத பண்டைய அயோத்தி வரலாற்றை நாம் பாரப்போம்.

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் அவரகளின் புதல்வரும் வரலாற்று பேராசிரியருமான சர்வப்பள்ளி கோபால் அவர்களும் 24 வரலாற்று அறிஞர்களும் அயோத்தியின் பண்டைய வரலாற்றைப் பற்றி பின்வருமாறு விவரிக்கிறாரகள்:

ராம கதை தான் ராமரின் கதையைக் கூறும் மூலமாகும். இந்த ராம கதை இப்போது நமக்குக் கிடைப்பதில்லை. இந்த மூலக் கதையை ஒரு நீண்ட காவியமாக மீண்டும் எழுதினார் வால்மீகி. இது ஒரு காவியமாக இருப்பதால் இதில் வரும் பாத்திரங்கள் இடங்கள் உட்பட சம்பவங்களில் பெரும்பாலனவை கற்பனையாகத்தான் இருக்க முடியும். ஏற்றுக் கொள்ளத் தக்க சரித்திர ஆதாரங்களால் நிரூபிக்கப்படும் வரை இதில் வரும் கதாபாத்திரங்களையும் இடங்களையும் நிகழ்ச்சிகளையும் சரித்திரத்தின பார்வையில் ஆதாரப்புர்வமானது என்று வரலாற்று ஆய்வாளரகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் ஐதீகங்கள் பெரும்பாலும் வரலாற்று ஆதாரங்களுக்கு முரணாகவே இருக்கின்றன.

நீதிபதி ரிபரானின் அயோத்தி வரலாறு தவறானது என்பதற்கு எடுத்துக்காட்டாக மேலும் இந்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவதை அடுத்த இதழில் பாரப்போம்.

(இன்ஷா அல்லாஹ்)   தொடரும்......

No comments:

Post a Comment