Tuesday, September 28, 2010

.ராமர் வாழ்ந்தாரா? சங்க இலக்கியம் தரும் பதில்!

ராமர் வாழ்ந்தாரா? சங்க இலக்கியம் தரும் பதில்!


ராமர் பாதம் பதித்த ஸ்தலங்கள் பாரதம் முழுவதும் பரவி உள்ளதை முந்தைய இதழ் ஒன்றில் படித்தோம். தமிழ் நாகரிகத்தைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டே ராமர் வாழ்ந்தது உண்மைதானா என்று கேள்வி எழுப்புவோருக்கு தமிழ் இலக்கியம் என்ன பதில் தருகிறது?
உலக இலக்கியங்களில் சங்க இலக்கியம் மிகவும் பழமையானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று பெரும் சங்கங்கள் தமிழ் இலக்கிய வளத்தின் செழுமைக்குத் தக்க சான்று!

ராமர் ஒரு புனைகதைப் பாத்திரமா அல்லது ஜீவனுள்ள ஒரு உண்மை நாயகனா என்பதற்கு சங்க இலக்கியம் அற்புதமான பதிலைத் தருகிறது.

புறநானூறின் 378ம் பாடல்

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு.
இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொ ழிந்தாந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

ச.நாகராஜன்

1 comment:

  1. பொருளைப் போட வேண்டாமா?
    பாடலை மட்டும் போட்டால் எப்படி புரியும்?
    நாங்கள் என்ன சங்கத் தமிழ் படித்த புலவர்களா?
    பொருள் விளக்கம் தரவும். நன்றி.

    ReplyDelete