Friday, October 15, 2010
குல்கந்தின் பயன்கள்
சிலருக்கு பித்த உடம்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அதிக பித்த அளவை குறைக்க குல்கந்து சாப்பிடலாம்.
வயிற்றுக் கோளாறுகளுக்கும் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.
வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.
பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).
தவிர குல்கந்து ஆண்மை சக்தியைப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணைய் தன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.
மல மிளக்கியாகவும் செயல்படுகிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.
பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து.
முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment