ARE YOU A DRIVER ? - இந்தப்படங்களைப் பாருங்கள்
நீங்கள் ஒரு சாரதியா?அப்படியானால் இந்தப்படங்கள் உங்களுக்காகத்தான்.முதலில் ஒரு அழகியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது உங்களுக்கு.
அவள் பெயர் ஜெக்குலின் சபரிடோ - Jacqueline Saburido.
தனது தந்தையுடனும்,நண்பர்களுடனும் அமைதியாக வாழ்ந்துவந்தாள்.
தனது பெற்றோருடன் சிறுவயதுப் பிறந்தநாள் விழாவில்...

தனது தந்தையுடன்...

நண்பர்களுடன்...

இறுதியாக அவள் புன்னகைத்து எடுக்கப்பட்ட படம்

இனிவரும் படங்கள் கோரமாக இருக்கும்.இளகிய மனமுடையவர்கள் படங்களைத் தவிர்த்து இறுதிப்பந்தியினை மட்டும் வாசிக்கவும்.
1999 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம் ஒரு 17 வயதான குடிபோதையிலிருந்த இளைஞனின் வாகனம் அவளுடைய வாகனத்தில் மோதியது.45 விநாடிகள் எரிந்த வாகனத்துக்குள்ளிருந்து உடல்முழுதும் எரிந்தநிலையில் அவள் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாள்.உடனடியாக 40 சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
விபத்தில் அவளுடைய வாகனம்...

தந்தையின் பராமரிப்பில் இன்று வரை சிகிச்சைகள் தொடரும் அவள்...





அன்று ஒரு அழகிய வாழ்க்கையின் முடிவுக்குக் காரணமான 2 கிளாஸ் மதுபானத்தின் பிடியிலிருந்த இளைஞன்.இன்றுவரை மனசாட்சியோடு தன்னையே மன்னிக்கமுடியாக் குற்றமும் உறுத்த,உறக்கமில்லாது வேதனையில்...

விபத்துக்களில் சிக்கும் அனைவரும் உயிரிழப்பதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்.
இதனைப் பார்த்த நீங்களும் ஒரு சாரதியாக இருக்கக் கூடும்.உங்களைச் சூழ உயிர்கள் இருக்கின்றன.மதுபானத்தை அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் பழக்கம் உங்களுக்கு இருப்பின்,இன்றோடு நிறுத்திவிடுங்கள்.உங்களிடம் இப்பழக்கம் இல்லாவிடினும் உங்கள் சகோதரர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்கள் அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.உங்கள் வார்த்தைகள் ஒரு உயிரை வலிகளிலிருந்து காப்பாற்ற உதவட்டும்.
No comments:
Post a Comment