பெட்டி பெட்டிகளாகத் தர்ப்பூசணிகள் !
ஜப்பானில் சில்லறைக்கடைகளும்,பழங்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஒரு பிரச்சினையைச் சந்தித்தன.அவர்களது கடைகள் மிகப்பெரியதாக இல்லை.ஆகவே கடையிலிருக்கும் சிறிய இடமும் வீணாகக் கூடாது எனக் கருதினர்.தர்ப்பூசணிப் பழங்கள் பெரிய உருளைவடிவானவை.வாடிக்கையாளர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுபவை.ஆனால் கடைகளில் மிகப்பெரும் இடத்தை அவை அடைத்துக்கொண்டன.
இதனால் விவசாயிகளிடமிருந்து கடைச் சொந்தக்காரர்களால் அவை வாங்கப்படும் வீதம் குறைந்தது.
எனவே விவசாயிகள் ஒன்று கூடிச் சிந்திக்கத் தொடங்கினர்.தர்ப்பூசணிகளை பெட்டிவடிவில் வளர்த்தெடுப்பதைப் பற்றி கலந்தாலோசித்தனர்.அதன் முடிவில் தர்ப்பூசணிகள் சிறிதாக இருக்கும்போதே பெட்டியில் அடைக்கப்படுமிடத்து அது பெரிதாகும் போது பெட்டிவடிவிலேயே இருக்குமெனக் கண்டறிந்தனர்.
அதன்படியே காய்களை உருவாக்கத்தொடங்கினர்.கடையிலும்,வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியிலும் பெரும் இடத்தை அடைக்காத காரணத்தால் கடைக்காரர்களாலும்,வாடிக்கையாளர்களாலும் விரும்பி வாங்கப்பட்டன அப்பெட்டி வடிவக் காய்கள்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எமக்கு ஒரு பாடமுள்ளது.
அநேகமாக நம் மனதில் 'இது இப்படித்தான் இருக்கும்'என்ற உறுதி தோன்றிய ஒன்றை மாற்றுவது பற்றிச் சிந்திக்கவே மாட்டோம்.ஆனால் நாம் சிந்திக்குமிடத்து பலவழிகள் இருக்கும்.
முயற்சித்துப் பார்க்கவேண்டும்.முயற்சியிலெடுத்து வைக்கும் முதலடி தோல்வியைத் தழுவிடினும்,ஏதாவதொரு வழியில் வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment