Friday, October 15, 2010

ஆரோக்கியத்தின் வண்ணங்கள்! காவி வெள்ளை பச்சை நிறங்கள்




காவி வெள்ளை பச்சை நிறங்களை எங்கு பார்த்தாலும் நமக்குள் ஓர் இதமான உணர்வு பரவும். காரணம் அவை நமது தேசியக் கொடியின் வண்ணங்கள்.
இந்த வண்ணங்கள் உள்ளத்துக்கு மட்டுமல்ல உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தேசியக் கொடியின் மூவண்ண அடிப்படையிலான காய்கறிகள் பழங்களைச் சாப்பிட்டால் உடல்நலத்தைக் காத்துக்கொள்ளலாம் என்கிறார்கள் அவர்கள்.
இவ்வண்ணக் காய்கறிகளும் பழங்களும் வைட்டமின்கள்’ பைட்டோ கெமிக்கல்கள்’ போன்ற ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்களைக் கொண்டிருக்கின்றனவாம். மூவண்ண மகிமை’ பற்றிப் பார்ப்போம்…
காவி (ஆரஞ்சு)
இந்த நிறத்தில் உள்ள பழங்கள் காய்கறிகளில் பீட்டா கரோட்டின்’ வைட்டமின் சி’ மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. வயது சார்ந்த பார்வைக் குறைபாட்டைத் தடுக்க இவை உதவுகின்றன. புற்றுநோய் ஆபத்தைத் தடுக்கக்கூடியவையும் கூட. மேலும் இவை கொலஸ்ட்ரால் ரத்த அழுத்த அளவைக் குறைப்பதுடன் மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் காக்கின்றன.
இவ்வகையில் வரும் பழங்கள் காய்கறிகள்:
ஆரஞ்சு: ஆரஞ்சுப் பழம் வைட்டமின் சி’ சத்துச் செறிந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஆன்டி ஆக்சிடன்ட்களை’ கொண்டிருக்கும் ஆரஞ்சு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நார்ச்சத்துக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.
கேரட்: பார்வைத்திறனுக்கு கேரட் மிகவும் அத்தியாவசியமானது. வைட்டமின் சி’ கே’ பொட்டாசியம்’ நார்ச்சத்து மக்னீசியம்’ பாஸ்பரஸ்’ உள்ளிட்ட சத்துகளின் ஆதாரமாக இது உள்ளது.
பப்பாளி: இவற்றில் அதிகமாக போலிக் அமிலமும்’ தனித்தன்மையான புரத செரிமான நொதிகளும் உள்ளன. வைட்டமின் ஏ’ ஈ’ பொட்டாசியம்’ செறிந்த பப்பாளி இயற்கையான மலமிளக்கியாகவும் உள்ளது.
வெள்ளை
வெள்ளை நிற காய்கறி மற்றும் உணவு வகைகள் நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கின்றன. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவை சீராகப் பராமரிக்கவும் இவை உதவுகின்றன.
வெங்காயம் பூண்டு: சல்பைடுகள்’ செறிந்த வெங்காயம் பூண்டு ஆகியவை ஆல்லிசின்’ என்ற பைட்டோகெமிக்கலை’யும் கொண்டிருக்கிறது. உடம்புக்குள் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கின்றன. ரத்தக் கொழுப்பு ரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால்’ மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன.
முள்ளங்கி: நார்ச்சத்து மிக்க இது ஈரப்பதம் மிக்கது. இயற்கையான மலமிளக்கி. ஈரத்தன்மை அதிகமாக இருப்பதால் இது தோலுக்கும் கண்களுக்கும் மிகவும் நல்லதாகும்.
பச்சை
சாப்பிடுவதற்குச் சிறந்த பழங்களும் காய்கறிகளும் இவ்வகையில் வருகின்றன. இவை குளோரோபில்’ நார்ச்சத்து போலிக்’ அமிலங்கள் கால்சியம்’ வைட்டமின் சி’ பீட்டா கரோட்டின்’ ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.
பசலைக் கீரை: இருமபுச் சத்து போலிக் அமிலங்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றன. பிறப்புக் குறைபாடுகளைக் குறைக்க உதவுகின்றன. இதன் அதிகமான கால்சியம் மற்றும் நார்ச்சத்து செரிமானத்துக்கும் தோல் கண்களுக்கும் இதை நல்லதாக்கு கிறது. புரோக்கோலி’: புற்றுநோய்க்கு எதிரான தன்மைகளை இது கொண்டுள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள்’ தாது உப்புகள் வைட்டமின் ஏ’ சி’ ஆகியவற்றால் இது ஆரோக்கியக் கவசமாகத் திகழ்கிறது.

No comments:

Post a Comment