Friday, October 15, 2010

குரங்குகளின் மொழி!’


“வார்த்தையை அளந்து பேசு”. இப்படி யாராவது நம்மைக் கூறினால் கோபம் வந்துவிடும். மனிதர்கள் இடையே புழக்கத்தில் உள்ள பழமொழிதான். ஆனால் நாம் அளந்து பேசுகிறோமா என்பது சந்தேகம்தான்.
நாம் எப்படியோ ஆனால் குரங்குகள் அளவாகத்தான் ஒலி எழுப்புகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அவை ஏன் அளந்து ஒலி எழுப்புகின்றன என்பதிலும் வாழ்க்கைத் தத்துவம் அடங்கி இருக்கிறதாம். தொடர்ந்து படியுங்கள்.
தைவான் நாட்டில் பர்மோசான் மக்காகு என்ற பகுதியில் உள்ள குரங்குகளை ராம்ப்டன் பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் குரங்குகள் 35 விதமான ஒலி சைகைகளை வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்துகின்றன என்று தெரியவந்தது. அவை அனைத்தும் மிகவும் சுருக்கமான சைகை முறைகளாகும். மனிதர்கள் பேசும் வா’ போ’ சாப்பிடு’ அங்கே போவோம்’ என்பது போன்ற சுருக்கமான பாஷை முறை.
குரங்குகள் சில நேரங்களில் நீண்ட நேரம் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் விஞ்ஞானிகளுக்குப் புரிந்துவிட்டது. அது காதல் செய்கிறது. இனப்பெருக்க காலம் நெருங்கிவிட்டது என்று’.
மற்ற நேரங்களில் குரங்குகள் சுருக்கமாக ஒலி எழுப்ப ஏதாவது காரணம் உண்டா என்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. மரத்துக்கு மரம் தாவி தப்பி ஓடும் ஆற்றல் இருந்தாலும் குரங்குகளுக்கும் எதிரிகள் உண்டல்லவா மற்ற விலங்குகளைவிட தம் இன எதிரிகளிடம் (எல்லாம் உணவு உறைவிட எல்லைக்காக சண்டையாளிகள் ஆனவர்கள்) இருந்து தப்பிக்கவும் அவற்றிடம் இருந்து தப்பிக்கத்தான் இந்த அடக்கமான ஒலி வழக்கம்.
மேலும் ஒரு விசித்திரமான உண்மை என்னவென்றால் குரங்குகளின் ஒலியும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாம். இதற்கு முன்பாக செய்யப்பட்ட ஆய்வுகளின்படி வரையறை செய்யப்பட்ட வழக்கத்தில் இருந்து அவற்றின் பாஷை’ மிகவும் மாறிவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
குரங்குகளின் பாஷை’ புரியாவிட்டாலும் அவை கற்றுத்தரும் பாடம் இதுதான்…
“குரங்கு கூட்டத்தப் பாருங்க…
அது அளவா சத்தம் போடுது யோசிங்க…”

No comments:

Post a Comment