Friday, October 15, 2010

கிருமிகளை கொல்லும் ஆப்பிள்


தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று சொல்வார்கள். ஆப்பிள் விற்கும் விலைக்கு இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியப்படாது என்றாலும், அதை முடிந்தவரை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்வது நல்லது.
சுவையுடன் பல்வேறு மருத்துவ குணங்களும் கொண்ட ஆப்பிளின் சில பயன்கள்… ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்குகிறது. குடல் பாதையில் உள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு ஆப்பிளின் மேற்புறத் தோலானது செரிக்கக் கடினமாக இருக்கும். அதனால் அவர்கள் அதன் மேற்புறத் தோலை நீக்கி உட்கொள்வது நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் பழத்தை கோடைக் காலத்தில் அதிகம் உட்கொள்ளலாம். இதில் மாவுச்சத்தும் நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகளாக ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment