Saturday, October 16, 2010

பச்சையம்மனும் மகாமுனியும்

நாமக்கல் மாவட்டத்தில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சற்று தள்ளிய நிலையில் பசுமை போர்த்திய வயல்வெளிகளுக்கு நடுவே ஸ்ரீ பச்சையம்மன் மன்னாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

மகாமுனி -



பல உருவங்கள் கொண்ட ஈசனின் ஒரு உருவம் மகாமுனி. முனிஸ்வரன், முனி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டாலும், மகாமுனி என இங்கே ஸ்ரீ பச்சையம்மன் மற்றும் மன்னாத சுவாமி திருக் கோவிலில் பெருமையுடன் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம் இங்கு உள்ள முனிஸ்வரன் தான் தமிழ்நாட்டிலேயே மிகவும் உயர்ந்த முனி. ஐயனார் தெய்வம், கருப்பு தெய்வம் போல மகாமுனியும் காவல் தெய்வம். எனவே பெரும்பாலும் கிராமப்புற எல்லையோரங்களில் கோவில் கொண்டிருப்பார். இந்த இடமும் வடகரைத்துவார் கிராமத்தின் எல்லைப் பகுதி தான்.

இங்குள்ள மகாமுனி அமர்ந்த நிலையில் வலது கையில் அரிவாலை ஓங்கியபடியும், இடது கையை தொடையில் வைத்து கம்பீரமான தோற்றத்துடன் இருக்கிறார். அவரைச் சுற்றி பாம்பு ஒன்று வெளியில் எட்டிப் பார்க்கின்றது. வலது காலில் ஒரு அரக்கனை மிதித்தபடியும், கண்களை அகல விழித்து, முறுக்கிய பெரிய மீசையுடன் பத்தர்களின் குறைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.


நிஜமான புற்று –



மகாமுனிக்கு பின்புறம் ஒரு செயற்கையான புற்று உள்ளது. சட்டென்று பார்க்கையில் நிஜ புற்றினைப் போலவும், அதிலிருந்து ஒரு பாம்பு எழுந்து வருவது போலவும் செய்யப் பட்டிருக்கின்றது.

ஆலைய மணியும் அரிவாலும் –

மகாமுனியின் இடது காலடியில் இரண்டு பிரம்மாண்டமான அரிவால்களும், ஒரு பெரிய கதையும் இருக்கிறது. பிறகு ஆலைய மணி கிட்டதிட்ட மகாமுனியின் உயரத்திற்கு கட்டப்பட்ட மணி மண்டபத்தில் இருக்கிறது.

பெரிய சூளாயுதம் –



அம்மனுடைய கோவிலுக்கு முன்பாக சுமார் 21 அடி உயரமான பெரிய சூளாயுதம் உள்ளது. அந்த சூளாயுத்த்தை சுற்றி ஒரு பாம்பு வளைந்து நெளிந்து ஏறுகிறது. அதன் அடியில் பக்தக் கோடிகளால் எழுமிச்சை பழங்கள் வைக்கப் பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் ஈசனின் வாத்தியக் கருவியான உடுக்கையும் வேலில் கட்டப்பட்டுள்ளது.

பச்சையம்மன் –



மகாமுனின் இடது புறத்தில் அழகிய கோயில் கொண்டிருக்கிறாள் பச்சையம்மன். பெயருக்கு ஏற்றாற் போல அம்மனின் திருமேனி பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. புற்றுமண்ணில் இருந்த அம்மன் சிலை சிதலமடைந்ததால் பத்தர்கள் ஒன்று கூடி அம்மனின் திருமேனியை மீண்டும் செய்திருக்கிறார்கள்.

அம்மனுடைய முகம் மிகுந்த பொழிவுடன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சாந்தசொருபமாக இருக்கிறது. கலைவேலை பாடுகள் மிக்க ஆசானத்தில் பச்சையம்மன் அமர்ந்திருக்க இரு புறமும் இரண்டு பெண்கள் அம்மனுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். அம்மனின் கிரீடத்திற்க்கு மேலே ஐந்து தலை நாகம் படமெடுத்து நிற்கின்றது. மொத்த்த்தில் ராஜகம்பீரமாக பச்சையம்மன் காட்சி தருகிறார்.

கோவிலின் சிறப்பு –



மனநலம் குன்றியவர்களுக்கும், உடல் பலம் குறைந்தவர்களுக்கும் இந்த தளம் மிகப் பெரிய வரப் பிரசாதம். இந்த முனிஸ்வரனை தினமும் ஒன்பது முறை ஒரு மண்டலம் சுற்றி வந்தால் எல்லா குறையும் போவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றர்.

மற்ற சிறப்புகள் –

தினத்தந்தி நாளிதலில் 04-07-.2009 ஆம் நாள் இக் கோவிலைப் பற்றிய கட்டூரை வெளிவந்துள்ளது. அந்த கட்டூரை கீழே.

திருச்செங்கோட்டிலிருந்து 30 கி.மீ தொலைவில் பரமத்திவேலூர் செல்லும் சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது ஜேடர்பாளையம். அங்கே வடகரையாழ்வார் கிராமத்தில் மன்னர் சுவாமி கோவிலில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய மகாமுனிஸ்வர் எழுந்தருளியுள்ளார்.அமர்ந்த நிலையிலேயே மகாமுனிஸ்வர்ரின் உயரம் 69 அடி. முனிஸ்வரனின் கையில் இருக்கும் இரும்பு கத்தியின் உயரம் 27 அடி. அது மட்டுமன்றி அதன் எடை ஒரு டன். மீசையின் நீளம் பத்து அடி.முதுகை சுற்றி ஒரு பாம்பு வளைந்து வந்து முன்புறம் எட்டிப் பார்க்கின்றது.இது 13 ஆண்டுகால உழைப்பில் உருவான சிலை.

வேண்டுதல்கள் –

நிறைவேரிய வேண்டுதல்கலுக்காக வேல் வாங்கி கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.
பிள்ளையில்லாதவர்கள் பால் மரத்தில் தொட்டில் கட்டும் வழக்கம் நிலவுகிறது.
உருவ பொம்மை கொடுக்கும் வழக்கம் மிக அதிகமாக தென்படுகின்றது.
பக்தர்கள் வேண்டுதல்களுக்கு தக்கபடி நேர்த்திகடன்களையும் செய்கிறார்கள்.







எப்போது போகலாம் –

காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பூஜை செய்யப்படுவதாக அங்குள்ள பூசாரி கூறுகிறார்.

எங்கு அமைந்துள்ளது –

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்தில் வடகரைத்துவார் என்னும் கிராமத்தில் இக் கோவில் உள்ளது.


மிகப் பிம்மாண்டமான கோவிலை மட்டும் பார்த்து வந்தவர்கள், பிரம்மாண்டமான அழகிய சிலையையும் கடவுளின் அருளையும் பெற விரும்பினால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஓர் இடம் இந்த மகாமுனி பச்சையம்மன் ஆலையம்.

No comments:

Post a Comment