Friday, October 15, 2010

சிறுகீரை


தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்த சிறுகீரை நிறைய கிளைகளுடன் சுமார் 20 செ.மீ. உயரம் வரை செங்குத்தாக வளரும். இந்தச் செடி மெல்லிய தோற்றமுடையது.
சிறுகீரை சுமார் 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் அதைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். இதைப் பருப்போடு சேர்த்து சாம்பார், கூட்டு, பொரியல் போன்ற கறி வகைகளைச் செய்து சாப்பிடலாம்.
முளைக்கீரையைப் போலவே, சிறுகீரையின் இலைகளையும், தண்டையும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதன் விதையும் உணவாகப் பயன்படுகிறது.
சிறுகீரையில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. இந்தக் கீரையைத் தினமும் சாப்பிட்டு வந்தால் இதிலுள்ள இரும்புச் சத்து உடலில் இரத்தத்தைப் பெருக்கும். இது வாத நோயை நீக்குகிறது. அதோடு, இந்தக் கீரை கல்லீரலுக்கும் நன்மை செய்கிறது. பித்த சம்பந்தமான நோய்களை இது குணப்படுத்துகிறது. நஞ்சு முறிவாகப் பயன்படுகிறது. அதோடு சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் நீக்குகிறது.
கண் நோய்களுக்கு சிறுகீரை கை கண்ட மருந்து. காசம், சோகை, மூலம், வாயு, உடல் எரிச்சல், தாவரங்களினனால் ஏற்படும் நஞ்சு ஆகியவற்றை இது நீக்கும். சிறுகீரை சுவையையும், பசியையும் தூண்டி உடலுக்கு வலுவைக் கொடுக்கும். சிறுகீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் மிக எளிதாக வளர்க்கலாம்.
சிறுகீரையை தினமும் உணவுடன் சாப்பிட்டு வந்தால் நோய்கள் யாவும் குணமாகி உடலினுடைய அழகும், வனப்பும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment