Friday, October 15, 2010

செய்தி துணுக்குகள் (23.5.10)


மீண்டும் ஆதிவாசிகள்!
நியாண்டர்தால் மனிதர்கள் பற்றி படித்திருப்பீர்கள். கற்காலத்தில் பூமியில் வசித்தவர்கள் இவர்கள். எட்டு அடி உயரத்துடன் ஆஜானுபாகுவான உடல் அமைப்புடன் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
டி.என்.ஏ., (மரபணு) தொழில் நுட்பம் மூலம், இவர்களை மீண்டும் உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆதிகாலவாசிகள் சிலரின் புதைந்த உடல்கள், சமீபத்தில் சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உடல்களில் இருந்து, மரபணுவை எடுத்து, சோதனை கூடத்தில் உயிரணுவை உருவாக்க முடியும் என கருதுகின்றனர். கற்கால மனிதர்கள் மட்டுமல்லாமல், கொடூர பற்களுடன் கூடிய புலிகள், உடல் முழுவதும் ரோமத்துடன் உள்ள காண்டாமிருகங்கள் போன்றவற்றையும் இதே தொழில் நுட்பத்தில் உருவாக்க, விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
***
உலக தேள் மன்னன்!
தேளைக் கண்டால் பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால், சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்த ஆசாமிக்கு, தேள்கள் தான் நண்பர்கள். ரியாத் நகரில் வசிக்கும் இவர் பெயர் மஜத் எல்மார்க். உயிருடன் இருக்கும் தேள்களை பிடித்து, தன் முகத்தில், உதடுகளில் ஓட விட்டு, வேடிக்கை பார்ப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. “தேள்களுடன் வசிப்பதில் சாதனை படைத்துள்ளார்!’ என உலக சாதனை புத்தகத்திலும், இவர் இடம் பிடித்துள்ளார்.
***
சிங்கப்பூரில் சூயிங்கம்மிற்கு தடை!
உலகிலேயே மிகவும் சுத்தமான நாடு, சிங்கப்பூர். கெடுபிடி சட்டங்கள், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவையே இதற்கு காரணம். சமீபத்தில், இன்னொரு புது சட்டத்தை சிங்கப்பூர் அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி யாருமே சிங்கப்பூரில் சூயிங்கம் பயன்படுத்தக் கூடாது; வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும், சூயிங்கம்மை கொண்டு வரக் கூடாது. அவ்வாறு கொண்டு வந்தால், விமான நிலையத்திலோ, துறைமுகத்திலோ அவை பறிமுதல் செய்யப்பட்டு விடும்.
சூயிங்கம்மிற்கு ஏன் இந்த தடை? இளைஞர்கள் முதல் பெருசுகள் வரை எல்லாருமே சூயிங்கம்மை விரும்பி குதப்பிக் கொண்டே இருப்பர். பின், அது சக்கையானதும் யாருக்கும் தெரியாமல், சீட்டுக்கு அடியில் ஒட்டி வைத்து விடுவர். சிங்கப்பூர் வாசிகளும் இப்படித்தான் செய்தனர். ரயில், பஸ், விமான சீட்கள், பொது அரங்க சீட்கள், பள்ளி, கல்லூரிகளில் மேஜை, சேர் என, எங்கு பார்த்தாலும் சீட்டுக்கு அடியில், கைப்பிடியில் உபயோகித்த சூயிங்கம் காணப்பட்டது. அதை அகற்ற மட்டும் சிங்கப்பூர் அரசுக்கு, பல கோடி ரூபாய் செலவானது.
விளைவு, சூயிங்கம்மிற்கு அரசு போட்டது தடை. இப்போது, சிங்கப்பூரில் போதை வஸ்துகளை பயன்படுத்தினால், எந்த அளவு கடும் தண்டனை கிடைக்குமோ, அதே அளவு தண்டனை சூயிங்கம் உபயோகிப்பவர்களுக்கும் உண்டு. சூயிங்கம் இல்லாததால் இப்போது ஊர், மேலும் சுத்தமாகி விட்டது.
நம்ம ஊரில் இதெல்லாம் நடக்குமா?

No comments:

Post a Comment