
ஜனாதிபதி பயணம் செய்வதற்கென்றே நவீன வசதிகள் கொண்ட சொகுசு ரயில் பெட்டி (சலூன்)யை ரயில்வே அமைச்சகம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அதிநவீன சொகுசு விமானங்கள் உள்ளன. உள்நாட்டில் பயணம் செய்ய விமானப்படை விமானங்கள் உள்ளன. ரயிலில் பயணம் செய்ய மட்டும் விசேஷ ரயில் பெட்டிகள் இல்லை. இந்த குறையைப் போக்க, பல்வேறு அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய ரயில் பெட்டியைத் தயாரிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைபடம் மற்றும் மாதிரி ஆகியவை தற்போது ஜனாதிபதி மாளிகையின் அனுமதி பெற அனுப்பப்பட்டுள்ளது.
இப்பெட்டியில், கருத்தரங்க அறை, உணவு அறை, படுக்கை அறை, நூலகம் ஆகிய பல்வேறு அதிநவீன வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு ஆண்டிற்குள் இப்பெட்டியைத் தயாரித்து முடிக்க கபூர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலை அதிகாரிகளும், ஊழியர்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மூன்று கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப் படும், “சலூன் கோச்’ என அழைக்கப்படும் இந்த நவீன பெட்டி, டில்லியில் ராணுவ பாதுகாப்பில் எப்போதும் இருக்கும்.
No comments:
Post a Comment