`புற்றுநோயால் இறக்கும் பெண்களில் 16 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் இறக்கிறார்கள்’ என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டால் பெண்கள் பெரிதும் துவண்டு போகிறார்கள். இவர்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர். அதுதான் பிளம் பழ ஆராய்ச்சி முடிவு.
பிளம் மற்றும் பீச் பழங்களில் புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணம் இருப்பதாக கண்டு பிடிக்கபட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் `அக்ரிலை’ ஆய்வு நிறுவனம் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டது.
ஆய்வுத்தகவல் பற்றி விஞ்ஞானி டேவிட் பைர்ன் கூறுகிறார்… “புற்றுநோய் அணுக்களை அழிக்க தற்போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப டுகிறது. அப்போது உடலில் இருக்கும் அனைத்து உயிரணுக்களுமே அழிக்கபடுவதால் உடல் சோர்ந்து போகிறது. ஆனால் எங்கள் ஆய்வில் பிளம் பழங்கள் புற்றுநோய் அணுக்களை மட்டுமே அழிக்கிறது என்று கண்டுபிடித்தோம். அவை ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
பினோலிக் அமிலத்தின் கூட்டுபொருட்களான குளோரோஜெனிக் மற்றும் நியோகுளோரோ ஜெனிக் அமிலம் போன்ற ரசாயனங்கள் தான் ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் புற்றுநோய் அணுக்களை அழிக் கிறது என்று தெரிய வந்துள்ளது. இந்த ரசாயனங்கள் எல்லா வகை பழங்களிலும் காணப்படுகிறது என்றாலும், பிளம் பழத்தில் மிகுதியாக இருக்கிறது என்பதுதான் சிறப்பு”
No comments:
Post a Comment