Thursday, October 14, 2010

கண்களும் கவிபாடுமே


தலைமுடிக்கு அடுத்தாற்போல் முகத்திற்கு அழகு சேர்ப்பது நெற்றிதான். நெற்றியில் உயரமான நெற்றியாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நாம் செய்யும் ஹேர் ஸ்டைலைக் கொண்டே சரிப்படுத்தி விடலாம்.
முன் நெற்றி வழுக்கை உள்ளவர்கள் ஃப்ரின்ச் கட் செய்து கொள்ளலாம்.
நீங்கள் வைத்துக் கொள்ளும் பிந்தியும் உங்களது முகத்திற்கு அழகு சேர்க்கும். தரமான பொட்டை, பொருத்தமான கலரில் நேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆலிவ் எண்ணெயை மிதமான சூடு செய்து நெற்றியில் வட்டவடிமாக மசாஜ் செய்யவும்.
புருவங்களை ஐபுரோ, காஜல், பென்சிலால் மற்றும் ஐலைனராலும் அழகு படுத்தலாம்.
புருவங்களில் முடி  இல்லாதவர்கள் விளக்கெண்ணையை லேசாக சூடாக்கி இரவு மசாஜ் செய்து காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு மாதம் செய்தால் நன்கு முடி வளரும்.
புருவ முடிக்கு நிறம் கிடைக்க
விளக்கெண்ணெய், கரிசலாங்கண்ணி எண்ணெய் தலா 5 சொட்டு எடுத்து சூடு செய்து, நெல் உமி ஒரு சிட்டிகை கலந்து புருவங்களில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரம் மூன்று முறை செய்யலாம்.
ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் வசீகரிப்பது கண்கள்தான் அந்தக் கண்கள் பிரகாசமாக இருக்க, ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். உணவு வகையில் கேரட், கீரை, மீன் மற்றும் இரும்புச் சத்துள்ள பொருட்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
கண்ணுக்குக் கீழ் உள்ள வீக்கம் குறைய
ஒரு டீஸ்பூன் பச்சை உருளைக் கிழங்கு சாறை அந்த இடத்தில் தடவவும். பத்து நிமிடம் வைத்திருந்து பின் கழுவவும்.
கண்களுக்கு கீழ் காணப்படும் பைக்கு சிகிச்சை
சிலருக்கு கண்களின் கீழ் சிறு பை மாதிரி வீங்கிக் காணப்படும். மது, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இப்படி வரும். இதைப்  போக்க சோயா பவுடர் & 2 டிஸ்பூன், தண்ணீர் &2  டீஸ்பூன் கலந்து தடவவும். பின் அதன் மேல் அலுமினியம் ஃபாயிலால் சுற்றி எடுக்கவும்.
கண்களின் சோர்விற்கு
கம்ப்யூட்டரில் அதிக நேரம்  அமர்ந்திருப்பவர்கள் அடிக்கடி தொலைக்காட்சி திரைப்படம் பார்ப்பவர்களுக்குத் கண் சோர்வு ஏற்படும்.
கண்களின்மீது குளிர்ந்த நீரை அவ்வப்போது அடித்தால் கண் சோர்வு நீங்கும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து சிறிது நேரத்தில் எடுக்கவும்.
கண்களின் மேலே வெள்ளரிக்காய் அல்லது உருளைக் கிழங்கைத் துண்டு துண்டாக நறுக்கிச் சிறிது நேரம் வைத்து எடுத்தால், கண் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
நெல்லிக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு கப் சுத்தமான நீரில் கொதிக்க வைக்கவும். ஆறியதம் அதை எடுத்து வடிகட்டி வைத்துக்கொண்டு கண்களை மூடி மேலே தெளிக்கவும். வாரத்திற்கு இருமுறை இதை செய்யலாம்.

No comments:

Post a Comment