Thursday, October 14, 2010

பீர் உற்பத்தியில் வியட்நாம் முதலிடம்; இந்தியா இரண்டாம் இடம்!

பீர் உற்பத்தியில் வியட்நாம் முதலிடம்; இந்தியா இரண்டாம் இடம்!
பீர் உற்பத்தியில் ஆசியா கண்டத்தில் வியட்நாம் முதல் இடத்தையும், இந்தியா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. உலகில் பீர் உற்பத்தியில் ஐரோப்பிய நாடுகள் தான் முதல் இடத்தை பிடித்து, அதை ஒவ்வொரு ஆண்டும் தக்க வைத்துக் கொண்டிருந்தன. ஆனால், கடந்தாண்டு ஆசிய நாடுகள் அதை தகர்த்து விட்டன. இதில் அதிகளவு பீர் உற்பத்தி செய்து ஆசிய நாடுகளில் வியட்நாம் முதல் இடத்தையும், இந்தியா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்தாண்டு இந்தியா 12.5 சதவீத  வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், வியட்நாம் நாடோ, 24.3 சதவீத வளர்ச்சியை எட்டி முதல் இடம் பிடித்தது. ஆசிய நாடுகள், 5 ஆயிரத்து 867 கோடி லிட்டர் பீர் வகைகளை உற்பத்தி செய்துள்ளன.  இதன் மூலர் 5.5 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இதுவே ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி 5.51 கோடி லிட்டர் தான். இதை அடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கு 5.1 சதவீதம் வளர்ச்சி குறைவு. ஆசிய நாடுகளில் “சீனா’ 7 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment