Sunday, October 10, 2010

விவசாய பூமி

விவசாயம், முழு உலக வாழ்வினதும் அச்சாணி. மனிதனின் உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்ய விவசாயமின்றி வேறு எதனாலும் முடியாது. அனைத்திற்கும் அடிப்படை விவசாயமே. ஆனால் இத் தொழில் தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுதும் அழிந்துகொண்டு வருவது வேதனைக்குரியது.

இயற்கை அழிவுகளால் சிதைந்து போவதோடு, மனிதனாலும் விவசாயம் எனப்படும் தொழில் அழிவின் பாதையில் நகர்ந்துகொண்டே இருக்கிறது. விவசாய பூமி, நல் வாழ்விற்கான வளங்களை விதைக்கிறது. நாம் சுயநலவாதிகளாக நம் முன்னோர் விதைத்துச் சென்ற வளங்களை அனுபவித்துவிட்டு, வரும் சந்ததியினருக்கு வெறுமையை விட்டுச் செல்லப் போகிறோம்.

இந்தக் கவலை, எப்பொழுதோ ஜப்பானிய விவசாயிகளுக்குத் தோன்றிவிட்டது. விவசாயத்தின் பக்கம், எல்லோரினதும் கவனத்தை ஈர்க்க என்ன செய்யலாமென யோசித்து, கலைக் கண்ணோட்டம் மிக்க ஜப்பானிய விவசாயிகள், தமது பாரிய விஸ்தீரணமுள்ள வயல்களில் விளைந்துள்ள நெற்பயிர்கள் மீது வர்ணங்களைப் பூசி அழகிய இராட்சத ஓவியங்களை வரைந்து உலகின் கவனத்தை அவர்களது விவசாய நிலங்களின் மேல் ஈர்த்துள்ளார்கள்.

இந்த விவசாயிகள் தமது வயல்களைப் புகைப்படமெடுத்து, கணினி மூலம் அப்புகைப்படங்களின் மீது மாதிரி உருவப்படங்களை வரைந்துள்ளனர். பிறகு
புகைப்படத்தில் ஓவியத்துக்கான வர்ணக் கலவைகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அதற்கு ஏற்ப வர்ணச் சாயங்களை நெற் பயிர்கள் மீது பூசியுள்ளனர். வயல்களில் ஓவியங்கள் வரையும் இந்த வழக்கமானது ஜப்பானிலுள்ள இனாகடேற் கிராமத்தில் 1993 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வருட வயல் ஓவியக் கண்காட்சியானது பல இலட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, தொடர்ந்தும் பாழடைந்திருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் பெற்றுக்கொடுக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இனி படங்களைப் பார்ப்போம்.


No comments:

Post a Comment