
சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற வீட்டில் சூடான நீரில் தோய்த்தெடுத்த டவலை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து எடுக்கவும்.
முகத்தின் மேல் உதடுகளுக்கு கீழ் இந்த சூடான டவலை வைத்தால் சரும துவாரங்கள் திறந்து உள்ளிருக்கும் அழுக்குகள் எளிதில் நீங்கும்.
முகத்திற்கு கோக்கனெட் பேக் முல்தானி மெட்டி, தேங்காய் பால் தலா 2 ஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போடவும். முல்தானி மெட்டி சருமத்தை இறுகச் செய்யும். தேங்காய் பால் சருமத்தி பட்டு போல் ஆக்கும். 20 நிமிடங்கள் வைத்திருக்கவும்.முகத்தின் மேல் உதடுகளுக்கு கீழ் இந்த சூடான டவலை வைத்தால் சரும துவாரங்கள் திறந்து உள்ளிருக்கும் அழுக்குகள் எளிதில் நீங்கும்.
அழகாக இருக்க அனைவருக்குமே ஆசைதான்! இயற்கையில் அழகாக இல்லாமல் போனால்கூட சில திருத்தங்களைச் செய்து கொண்டு அழகுடன் விளங்க முடியும் என்கிற காலம் இது. இப்படி அழகுப்படுத்தி கொள்ள தலை முதல் கால் வரை அழகு நிலையங்களில் என்னென்ன செய்கின்றனர் என்பதையும், இவற்றை வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிகளில் செய்து கொள்ளலாம் என்பதை பற்றியும் கூறுகிறேன்.
பழங்காலத்தில் பெண்மணிகள் எந்த அழகு நிலையங்களுக்கும் சென்றதில்லை. ஆற்றில் நீராடி ஆற்று மணலின் மிருதுவான பகுதியை உடலில் தேய்த்து வேண்டாத முடிகளை நீக்கிக் கொண்டனர். கஸ்தூரி மஞ்சள், வாசனைபொடி, நலங்குப் பொடி, துளசி, வேப்பிலை போன்ற இயற்கை மூலிகைகளைக் கொண்டு அழகைப் பாதுகாத்துக் கொண்டனர். சென்ற நூற்றாண்டுவரைகூட அநேகப் பெண்கள் திருமணத்தின் போது தான் அழகு நிலையத்திற்கே முதன் முறையாகச் சென்று வந்தனர்.
ஆனால் இந்நாளில் பதினைந்து வயதுப் பெண்கள் கூட உடலில் வளரும் அதிக முடியை நீக்கிக் கொள்ள அழகு நிலையங்களுக்கு வருகின்றனர். நடனம், நீச்சல், விளையாட்டுப் பயிற்சிகள் செய்பவர்களுக்கு இதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு கவனமாக இருக்கும் பெண்கள் மணமாகி பிள்ளை பெற்றதும் உடலில் காட்டும் கவனத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். உடல் கட்டு குறையாமலிருக்க பயிற்சி செய்யத் தொடங்குகிறோம். இதேபோல் அழகும், பொலிவும் தொய்ந்து போகத் தொடங்கும் முகத்திற்கு பயிற்சி வேண்டாமா? இவ்வாறு முகத்திற்கு அளிக்கப்படும் பயிற்சியே ஃபேஷியல் என்றழைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளானாலும், வேலைக்குச் சென்று வருபவர்களானாலும் இருபத்து ஐந்து வயது முதல் ஃபேஷியல் செய்து கொள்ளத் தொடங்க வேண்டும். சூரிய வெப்பத்தினாலும் தூசியினாலும் பாதிக்கப்படும் முகத்தின் சருமத்தை மாதமொருமுறை பிளீச் செய்து ஃபேஷியல் செய்ய வேண்டியது அவசியம்.
ஃபேஷியலில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வென்றிற்கும் விதவித பலன்கள் உள்ளன். பழங்களைக் கொண்டு செய்யும் ஃபேஷியல், உலர்ந்த பழங்களை கொண்டு செய்யும் ஃபேஷியல், ஹெர்பல் ஃபேஷியல், கால்வானிக் ஃபேஷியல், பேர்ல்ஃபேஷியல், கோல்டுஃபேஷியல், அரோமாஃபேஷியல் என பலவகை உண்டு.
No comments:
Post a Comment