Thursday, October 14, 2010

சுவை..!மாறாமல் இருக்க!

* சாம்பார் பவுடர் மற்றும் ரசம் பவுடர் எப்போதும் புதியதாக மணம் மாறாமல் இருக்கவேண்டுமா? சாம்பார் பவுடர் மற்றும் ரசம் பவுடர் பாக்கெட்டுகளை பிரிஜ்ஜின் பிரீஸரில் வைத்து உபயோகிங்கள். மணம் மாறாமல் இருக்கும்.
* வெங்காய சட்னி கசக்காமல் இருக்க வேண்டுமா? வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரையுங்கள். சட்னி கசக்காமல் ருசிக்கும்.
* கேரட்டின் தலைபகுதியை சிறிது நறுக்கி விட்டு காற்று புகாத பாலிதின் பைகளில் போட்டுவைங்கள். நீண்ட நாட்களுக்கு கேரட் பசுமையாக உலராமல் இருக்கும்.
* பச்சை மிளகாயின் காம்பினைக் கிள்ளிவிட்டு காற்று புகாத பாலிதின் பைகளில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.
* பசலைக்கீரை மற்றும் பச்சை காய்கறி, கீரைவகைகளைச் சமைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்து சமையுங்கள். சமைத்த பின்னும் அவற்றின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
* மாவு டப்பாக்களில் பிரியாணி இலையை போட்டு வையுங்கள். மாவு ஈரமாகாமலும் கட்டி விழாமலும் இருக்கும்.
* கேக் முட்டை வாடையடிக்கிறதா? கவலையை விடுங்கள். கேக்கிற்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரடி தேன் சேர்த்து பிசைந்து பாருங்கள் கேக் முட்டை வாடை போயே போச்!
* காய்கறிகளை துண்டுதுண்டாக நறுக்கி வேகவைக்காமல் அவற்றை முழுமையாக வேகவைத்துபின் துண்டுகளாக்கிச் சமையுங்கள். அதன் மூலம் நீரில் கரையும் கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் சத்துக்களை இழக்காமல் முழுமையாக பெறலாம்!

No comments:

Post a Comment