Thursday, October 14, 2010

சீனாவில் பறக்கும் தட்டு வந்ததா ?


கடந்த 60 ஆண்டுகளாக விண்வெளி விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருந்து வரும் விஷயங்களில், யு.எப்.ஓ., என்றழைக்கப்படும் வெளிகிரக விண்கலங்கள் பற்றிய மர்மம்தான். உலகின் பல்வேறு பாகங்களில் வசிக்கும் பலர், தாங்கள் இதுவரை பார்த்திராத ஒரு விண் ஓடத்தை கண்டதாக கூறியுள்ளனர்; சிலர், புகைப்படங்களையும் அதற்கு ஆதாரமாக கொடுத்துள்ளனர். இருப்பினும், வெளிக்கிரகங்களில் இருந்து விண்கலங்கள் பூமிக்கு வருகின்றனவா, இல்லையா என்பது புதிரான ஒன்றாகவே உள்ளது. “சீனாவின் ஷிஜியாங், ஹூனன், சாங்கிங், சின்ஜியங் ஆகிய பகுதி வான்வெளி மண்டலத்தில், வெள்ளை புள்ளி போன்ற, அடையாளம் காண முடியாத வெளிகிரக விண்கலங்கள் தோன்றியது…’ என சீனாவின், வாங் சிகாங் நகரில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் தென்பட்ட இந்த விண்கலங்களால் ஷிஜியாங் நகரின் சில இடங்களில் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில்

No comments:

Post a Comment