Thursday, December 9, 2010

மணமகளை விளக்கு வழங்கி வரவேற்க வேண்டுமா?


சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்கையிலும் திருமணம் முடிந்து வரும் மணமகளை வீட்டில் பிரவேசிப்பதற்கு முன் ஏற்றிய குத்துவிளக்கைக் கொடுத்து வர வேற்பது வழக்கம். இன்றும் இந்த சடங்கை அனேக வீடுகளில் நிகழ்ந்து வருகின்றது. திருமணம் முடிந்து வந்து சேரும் மணமகளை,மணமகனின் தாய் அல்லது சகோதரி குத்துவிளக்கை வழங்கி அழைத்துக் கொண்டு வருவதுண்டு. இது நம்பிக்கைகளின் பாகமாகவே நிலை நின்று வருகின்றது. தான் லட்சிதேவியின் சின்னமான விளக்குமாக வீட்டுக்குள் பிரவேசிப்பது என்று பெண்ணின் மனதில் தோன்றுவதற்காக இதை ஆசாரித்து வருகின்றனர். ஆனால் மனதார இந்தபுதிய சூழ்நிலைக்குப் பொருத்தப்படும் மன நிலையை இது போன்ற சடங்குகள் உதவியாயிருக்கும் என்பதை நவீன மனநூல் சுட்டிக் காட்டுகின்றது. மேலும் ,மாமியார்,நாத்த்னார் போர்கள் சக்தி பெற்றிருக்கும் இந்த காலத்தில் நல்லதான ஓர் உறவினை முதலாவதாகவே தொடங்குவதற்கும் இந்த சடங்கு நன்மையாயிருக்கும்.

No comments:

Post a Comment