Thursday, December 9, 2010

வாசற்படியில் உட்காரத் கூடாது ஏன்?


வாசற்படியில் இருக்கும் சிறுவர்களை பாட்டிமார் விரட்டி அடிப்பதுண்டு. வாசற்படியில் அமரக் கூடாது என்று அன்புடன் உபதேசிப்பதும் உண்டு. வாசல் வழியாக வரும் போகும் நபர்கள் தட்டி விழும் சாத்தியம் உள்ளதாலே இவ்வாறு கூறுகின்றனர் என்று கருதி வருகின்றோம். ஆனால் வாசற்படியிலோ நிலைப்படியிலோ இருக்கக் கூடாதென்பது சரியான காரணத்துடன் என்பது கண்டறிந்துள்ளனர். 'டெளசிங்ராட்' என்ற கருவியை வாசற்படியில் பிடித்தால் வாசற்படியிலிருந்து எதிர் சக்திகள் (நெகடிவ்ஃபோர்சஸ்) வெளியாவது காணலாம். இதனால் வாசற்படியில் அமர்ந்தால் நம் உடலில் எதிர் சக்திகள் புகுந்து செல்லும். இதை அன்றே புரிந்து கொண்டிருந்த ஆசாரியர்கள் வாசற்படியில் உட்காருவதை சக்தியாக எதிர்த்திருந்தனர். வாசற்படிக்கு உட்பக்கமோ வெளிப்பக்கமோ கூடதென்பதற்கும் சரியான காரணமும் இதுவேதான். வாசல் நிலையின் நாலு பக்கங்களும் சமசதுர வடிவிலுள்ளதானால் நெகடிவ் சக்தி வெளிவருகின்றது. வாஸ்து சாஸ்திரத்தை மிக முக்கியமாகக் கருதும் சீன மக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கும் வாசல்கள். மற்றும் ஜன்னல்களின் நிலைகள் வேறு வடிவத்தில் மேல் பாகம் நோக்கி வளைந்திருக்கக் காணலாம். இது நெகடிவ் சக்திகளைத் தவிர்ப்பதற்காகவே, நமது கோயில் வாசல்களிலும் இவ்விதமே அமைத்துள்ளனர்.

No comments:

Post a Comment