Thursday, December 9, 2010

பால் காய்ச்சும் வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது எதற்கு?


புதுமனை கட்டி முடித்து அதற்கு புகு விழா நடத்தும் போது மாவியலைத் தோரணம் கட்டுவது வழக்கம். இதன் பயன்கள் தெரியாவிட்டாலும் இவ்வாறு செய்வதில் பெரும் பான்மையான மக்கள் கருத்தாக இருந்து வருகின்றனர். பால் காய்ச்சுச் சடங்குகள் எவையெல்லாம் என்பது அனேகருக்கும் தெரியும். புதிதாகக் கட்டிய வீட்டில் நடுவில் அமைந்திருக்கும் அறையில் இதற்காக வைக்கப்பட்ட புதிய அடுப்பில் வீட்டுத் தலைவி ஒரு புதிப் பானையில் பாலை ஊற்றி சூடாக்குகின்றாள். பால் கொதித்து பொங்கி நிறைந்து கவிந்தொழுக வேண்டும் என்பது நம்பிக்கை. இதைக் காணும் போது வீட்டுத் தலைவருக்கும் வந்து சேர்ந்திருப்போருக்கும் ஒரே கொண்டாட்டம்தானே! பரிசுத்தமானதால் பாலைச் சூடாக்கி புதுமனைக்குள் செல்கின்றோம். இதற்குப் பின்னால் ஆழமான ஆத்மீக உண்மைகள் இருப்பதாக ஆசாரியர் கூறுகின்றனர். எப்படியானாலும் பால் காய்ச்சும் வீட்டுக்குள் செல்லும் போது ந்ம்மை முதலாவது வரவேற்பது வாசலில் மாவிலைத் தோரணங்கள். ஆனாலும் இதை யாரும் அவ்வளவு பொருட்டாக எடுப்பதில்லை. மாவிலைத் தோரணத்துக்குப் பின்னாலுள்ள உண்மைகளை பண்டைக் காலத்திலேயே அறிந்திருந்ததனால் இந்த வழக்கம் இன்றும் உள்ளது. பால்காய்ப்பு என்றல்ல எல்லா முக்கிய சடங்கிற்கும் சிலர் மாவிலையை கனப்படுத்துவதுண்டு. பால் காய்ச்சும் சடங்கிற்காக அனேகம் மக்கள் அந்த வீட்டில் வந்து சேருவதுண்டு. அப்படி அதிகம் பேர் வந்து சேருமிடத்தில் வாயு அசுத்த மாவது இயற்கை. இந்த அசுத்த வாயுவை சுத்தம் செய்ய மாவிலைக்கு இயலுமாம். மாவிலையை வாசலிலும் வீட்டிற்குள்ளும் கட்டுவது இதற்காகவே. இதற்கு பதிலாக மாவிலை வடிவில் ப்லாஸ்டிக் இலைகள் கட்டுவதுமுண்டு. இதனால் பயனில்லை என்பது மட்டுமல்ல தீமையுண்டு என்பதே உண்மை. மாவிலைக்கு நோயணுக்களின் சக்தியை அழிக்க இயலும் என்றறிந்திருந்த முன்னோர்கள் மாவிலையால் பல்துலக்குவதுண்டு. கிணற்றை சுத்தம் செய்ய இறங்கும் போது கிணற்றிலுள்ள அசுத்த வாயுவில் சிக்கி மூர்ச்சையாகும் நிகழ்வுகள் நாம் அறிந்துள்ளோம் ஆழமான கிணற்றில் இறங்குவதற்கு முன் மாமரத்தின் ஒரு கிளையை ஒடித்து கட்டியிறக்கி கழற்றிய பின் வெளியில் எடுத்தால் சுத்த வாயு கிடைக்கும் என்று நாம் பண்டைய மக்கள் சொல்லக் கேட்டதுண்டு.

No comments:

Post a Comment