Thursday, December 9, 2010

கிணற்று நீரில் சூரிய ஒளி படிய வேண்டுமா?


எங்கேயாவது ஒரு கிணறைத் தோண்டி அதிலிருந்து நீர் இறைத்துப் பயன்படுத்துவதல்ல வழக்கம். ஆதிகாலம் முதல் நாம் கிணறு தோண்டுவதற்கு தனிப்பட்ட இடத்தை கண்டு பிடிப்பதுண்டு. கிணற்றைக் குறித்து நாம் பல நம்பிக்கைகளும் ஆசாரங்களும் கடைபிடித்து வருவதுண்டு. எங்கு கிணறு தோண்டினாலும் அங்கு சுலபமாக தண்ணீர் கிடைக்கப் பெற வேண்டும் என்பது கட்டாயம். அதனால் தண்ணீர் கிடைப்பதை முன் கூட்டியே கண்டறிந்து கிணறு தோண்டுமிடத்தை முடிவு செய்ய வேண்டும். ஒரு தென்னை ஈக்கும் ஒரு சிறு கம்பும் சேர்ந்த கருவியால் பார்த்து நம் முன்னோர்கள் தண்ணீர் கிடைக்குமிடத்தை கண்டுபிடித்திருந்தனராம். இதை வைத்து பூமியின் நாடித்துடைப்பையும் அளந்திருந்தனராம். மேலும்: உபயோகிக்கும் கிணற்று நீரில் சூரிய ஒளி தாராளமாகப் படிய வேண்டும் என்பதும் கண்டு பிடித்திருந்தனர். சூரியனை வாழ்கையின் முக்கிய கடகமாகக் கண்டிருந்த நம் முன்னோர்கள் சூரிய ஒளி கிணற்று நீரில் பதிய வேண்டும் என்று விதித்திருந்தனர். சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் வைட்டமின் அடங்கிய கதிர்கள் கிணற்று நீரில் படியும் என்று அறிந்திருந்தனர். ஆனால் இதை விட முக்கியமாக சூரிய ஒளி பதியும் கிணற்று நீரிலிருந்து அனுகூல சக்தி (பாசிடிவ்ஃபோர்ஸ்) புறப்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். ஆனால் குழாய் நீரிலிருந்து புறப்படுவது நெகடிவ் சக்தி என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment