Thursday, December 9, 2010

குழந்தைகள் ஏன் நிழல் பார்த்து விளையாடக் கூடாது?

பசுவை கோமாதாவாகச் சிறப்பித்துக் கொண்டால் பசு இறைச்சியை உணவாகக் கொள்ளும் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். நற்குணங்களும் நன்மைகளும் நிறைந்த பசுவைக் கொன்று உண்ணுவதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவர்களிடம் எப்படி நன்மை எதிர் பார்க்க இயலும். ஆனாலும் கோமாதா என்ற கருத்து ஆதிகாலம் முதல் பாரத மக்களிடையே இருந்து வந்தது. தூய்மையின் சின்னமாக விளங்கும் . பசுவை மாதாவாகக் கருதுவதற்கான காரணங்கள் பல உள்ளன. பசுவின் பால்,சாணம்,சிறுநீர் என்பவை தூய்மையானது என்று கருதுகின்றோம். மேலும் பசுவை காட்சி காண்பது கூட நன்மையென்று முந்தலைமுறை நம்பியிருந்தது. கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு கருத்தும் பாரத மக்களிடையே உண்டு. கோக்களை (பசுக்களை) பாலிக்கும் கிருஷ்ணனை பக்தர்கள் மிக நேசித்திருந்தனர். நிலையான பாரத கலாச்சாரத்தில் கோமாதவுக்கு மிக முக்கியமான இடமளித்திருந்தனர். அமுதம் வழங்கும் தாயைப் போல கருணை காட்டும் பசுவை தாயாக நினைப்பதிலும் பராமரிப்பதிலும் பாரத மக்கள் காட்டும் தூய்மையான ஆர்வத்தி மேல் நாட்டவரில் பலரும் அங்கீகரித்துள்ளனர். வேறோரு உயிரினத்தை சிறப்பாகவும் பரிசுத்தமாகவும் காண இயலும் கலாச்சாரம் மெச்சப்பட வேண்டியது என்று மேல் நாட்டவர் கருத்து. பசுவிலிருந்து நமக்கு முக்கியமாகத் தருவது பால். ஊட்டச்சத்தாகவும் மருந்தாகவும் காலாகாலமாகப் பயன்படுத்தி வரும் பாலிலிருந்து தயிர், வெண்ணை,நெய் முதலியவையும் பசு நமக்காக வழங்குகின்றது. பொதுவாக மலத்தை அசுத்தமாகக் கருதும் நாம் சாணத்தை தாவரங்களுக்கு இது உணவாகவும் பயன்படுத்துகின்றோம். சில மருந்துகளில் சேர்ப்பதற்காக பசுவின் சிறுநீர் பயன்படுகின்றது. திவ்ய மருந்தாகக் கருதி வரும் கோரோசனை பசுவிலிருந்து கிடைக்கின்றது என்று பலருக்கும் தெரியாது. இப்படி மனிதனுக்கு எல்லாவிதத்திலும் பயனளித்து வரும் ஒரு சாதுவான பிராணியை தாய் என்று நினைப்பதில் தவறில்லை. பாட்டிமார் முற்றத்தைப் பெருக்கி சாணம் கலக்கித் தெளிப்பதும் தரையை சாணத்தால் பூசுவதும் அதன் தூய்மையை மனதில் கொண்டுதான் என்பது இன்றைய தலைமுறை ஏற்றுக் கொள்வதில்லை.

No comments:

Post a Comment